vendredi 24 juillet 2015

"இன்றே! இயற்றுக! இனியதொரு சட்டம்"


நாளை என்பது நம் கையில் இல்லை!



ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில்ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போதுபுழு பறவையிடம்என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால்உன் பசி தீர்ந்து விடுமா?  
சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது  புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச
தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவைஅடேய்எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பதுஐம்பது புழுக்களுக்காகஉன்னையும் விட்டு விட்டால் என்னாகும்?  
இப்போதுஉன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன்.
பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது. 
கொஞ்சதூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை
தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! 
என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால்உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. 

அடே பறவையே! 
"நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக,  
இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? "
ஊஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன்,
 நாளைக்குரியதைஅந்த நாராயணன் பார்த்துக் கொள்வான்என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.


இந்த "கதை"யை! சற்று நினைவு கூர்ந்து பார்த்தேன்!
'பூரண மதுவிலக்கு' என்பது  நாட்டுக்கு மிகவும் அவசியம்!
அப்படி இருக்கையில் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம்! இதை செய்வோம் என்று சொல்லுபவர்கள்! ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் செய்வார்களா?
செய்யலாம்!
செய்யாமலும் போகலாம்!
அப்படியிருக்க இன்று பலாக் காயை கையில் வைத்து இருக்கும்
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இதை ஏன் செய்யக் கூடாது?
தமிழகம் மட்டுமல்ல! புதுவைவே சரணம்! என்றும் சிலர் சொல்லாது இருக்க! தமிழம் மற்றும் புதுச்சேரி,
இந்த இரு  மாநில அரசுகளும், முன்வந்து "பூரண மது விலக்கு சட்டம்" உடனடியாக இயற்றி மக்கள் நலம் போற்றுவதே நலம் பயக்கும்.

புதுவை வேலு
 




20 commentaires:

  1. Réponses
    1. நடப்பதை விட, நடக்கப் போவது யாவும் நலமாக நடக்கட்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள் நண்பர் கில்லர்ஜி அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. அரசியல் சதுரங்க விளையாட்டில் வெற்றி யாருக்கு என்பதில்தான் தற்போதைய ஆட்டம்! மக்களின் நாட்டம்? பொறுமை ஒன்றுதான் அவர்களின் பொற்காலம் போல் இருக்கிறது கரந்தையாரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. "நல்லதே நடக்கும்! நன்மைகள் கிடைக்கும் "என்றே நம்புவோம் வார்த்தைச் சித்தரே!
    நன்றி

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. நல்லது நடக்க வேண்டும்....

    நன்றே செய்... அதையும் இன்றே செய் என்று சொன்னது இவர்களுக்கு புரிந்தால் சரி.....

    த.ம. +1

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லது நடக்க வேண்டும்!
      நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பொருத்தமான கதை. நல்லதையே நினைப்போம். நடக்கும்.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லதையே நினைப்போம்.
      நல்லது நடக்க வேண்டும்!

      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    RépondreSupprimer
  7. நல்லது நடக்க வேண்டும்!

    நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. அப்படி நடந்தால் நன்மைதான் நாட்டுக்கு!

    RépondreSupprimer
    Réponses
    1. நலம் நாடி வளம் பெறுவோம் நண்பரே! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நாளை அவர்கள் செய்வார்கள், அது கிடக்கட்டும். (நடக்கட்டும்)
    இன்று ஆட்சியிலிருப்பவர்கள் செய்யவேண்டும்... செய்வார்களா?

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்கைதான் வாழ்க்கை!
      நடக்கும் என்றே நம்புவோம்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நல்லது நடந்து நலம்பெறட்டும் நாட்டு மக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் சகோதரி
      நம்பிக்கை தரும் கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நல்ல யோசனை! இன்றைய அரசு செய்யுமா!

    RépondreSupprimer
  12. பூரண மகிழ்வு பூண்டு
    பூக்கட்டும் புலவர் அய்யா!
    பூரண மதுவிலக்கு!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer