(பிறந்த நாள்: 15/07/1903)
காமாட்சி ராசா -எங்கள்
'காம ராசா'
கர்மவீரர் ராசா -ஏழை
சூடும் ரோசா!
மதிய உணவளித்த மன்னா -எங்கள்
கருமை நிறக் கண்ணா!
இலவசக் கல்வி என்று சொன்னால்!
இவரது ஆட்சியே நன்னாள்!
பொன்
பொருளைத் தேடார் !
தற்பெருமை
பாடார் !
தோல்வி
கண்டு வாடார்
குறுக்கு
வழி தேடார்
நாட்டின்
நலனை நாடார்
நட்பை
என்றும் நாடார்
தன்னலமில்லாத!
தனிப்
பெருந்தலைவா !
'காம ராசா' -உன்
புகழ்
உலகமெல்லாம் வாழ்க!
கர்மவீரரின் நினைவினைப் போற்றுவோம்
RépondreSupprimerதம +1
காமராஜர் வாழ்ந்த வாடகை வீட்டை, வீட்டுக்குச் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டார். பெருந்தலைவருக்கு கொடுத்திருந்த காரை, டி.வி.எஸ்., நிறுவனம் எடுத்துக் கொண்டது. அவர் உடலை இந்த மண் எடுத்துக் கொண்டது.
Supprimerஅவரது புகழை இந்த உலகம் எடுத்துக் கொண்டது.
தனக்கென்று எதுவும் இல்லாது மக்கள் பணி செய்து வாழ்ந்து சென்ற காமராஜர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அவரது நினைவினை போற்றி கருத்திட்ட கரந்தையார் அவர்களுக்கு குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இன்று காமராஜர் பிறந்த தினம். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு போற்றப்பட வேண்டிய தேசத் தலைவர். இந்நாளில் மறக்காமல். அவரது புகழ் பாடும் கவிதை ஒன்றை வடித்திட்ட அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்!
RépondreSupprimerத.ம.2
கர்ம வீரர் காமராஜர் முதலமைச்சர் ஆனதும் தன்னுடைய அமைச்சரவையில் அறநிலையத்துறையை யாருக்கு கொடுத்தார் தெரியுமா? தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்குக் கொடுத்தார். கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொன்னவர்கள் எல்லாம் அப்போது
Supprimerகும்ப மரியாதை கொடுத்து அமைச்சர் பரமேஸ்வரனை அழைத்துப் போனார்கள். இதுதான் மவுனப்புரட்சி.
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு போற்றப்பட வேண்டிய தேசத் தலைவர் காமராஜர் புகழ் போற்றுவோம். நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில் அவரது எளிமையை, தன்னலம் கருதா சேவையை நினைவுகூர்ந்து அழகான கவிதையை படைத்தமைக்கு நன்றி!
RépondreSupprimerதன்னலம் கருதாத தனிப்பெருந்தலைவர் புகழை வாழ்த்தி பாராட்டி சிறப்பிக்க வந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
முன்னுதாரணத் தலைவரை, பெருந்தலைவரைப் போற்றுவோம். நன்றி.
RépondreSupprimerபெருமைக்குரிய பெருந்திட்டங்களை பெற்றுத் தந்த பெருந்தலைவரை போற்றுவோம்!
Supprimerமுனைவர் அய்யா அவர்களே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
என்றும் போற்றுவோம்....
RépondreSupprimer"என்றும் போற்றுவோம் ஏழைப் பங்காளரை!"
Supprimerநன்றி வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
இவருக்கு பின் எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தார்கள் ,போனார்கள் ,ஆனால்,எல்லோர் மனதிலும் கர்மவீரர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் !
RépondreSupprimerகாமராஜரை தோற்கடித்த தமிழகம் இன்று திக்கி திணறுகிறது.
RépondreSupprimerஊழலை உட்கார வைத்து ஊர்வலம் நடத்துகிறது.
உப்பை திண்ற தமிழக மக்கள் இன்று தண்ணீர் ??? குடிக்கிறார்கள்.
,எல்லோர் மனதிலும் கர்மவீரர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் !
என்றும் வாழ்வார் பகவான் ஜி!
நட்புடன்,
புதுவை வேலு
தனக்கென்று எதுவும் வேண்டும் என்று நினைக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜரை போற்றுவோம். இன்று வரை எல்லோருடைய மனதிலும் காமராஜர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது உறுதி.
RépondreSupprimerதமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை திறமையுடன் பெற்றுத்தந்த
Supprimerதியாகச் செம்மல் காமராசரை போற்றி சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerதனக்கென்று வாழா பெருந்தகையாளர்,
நாம் வேண்டாம் என்றேதும் உண்டல்லவா?
இவர் போல் இனி யார் வருவார்?????
நினைவினைப் போற்றுவோம்,,,,,,,
தங்கள் பா விற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
இவர்போல் ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனி!
Supprimerகிடைப்பது அரிதினும் அரிது!
மானிடப் பிறவியின் மகத்துவம் அறிந்த
மாமனிதர் காமராசர் புகழ் போற்றியமைக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் பா தங்கப் பா! நன்றி
RépondreSupprimer
Supprimerசாதரண பா காமராசரை பற்றி பாடியதாலே
தங்க பா வாகவே மாறியது அல்லவோ
புலவர் அய்யா அவர்களே!
காமராசரின் புகழுக்கு இதைவிட வேறு சிறப்பும் வேண்டுமோ?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஉத்தம புத்திரர், தனிப்பெருந்தலைவர் காமராசர் புகழ் சிறக்க
Supprimerநனிமிகு கருத்தினை வடித்த நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerஊழலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அரும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அய்யா அவர்கள். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் தங்களது கருத்து தோழரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை தோழர்
RépondreSupprimerவாழ்த்துக்கள்
தம +
எதிர்த்து நின்று போட்டியிட்டவரையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கி அழகு பார்த்த அருமை பண்புமிக்கவர் காமராசர், அவரின் சிறப்புக்கு பெருமை சேர்க்கும் தங்களது கருத்து தோழரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பண்பு மிக்கவர். படிக்காத மேதை! இந்தியாவின் கிங்க் மேக்கர் அந்தக் காலகட்டத்தில். நேர்மையாளர். மாமனிதர். ஒப்பற்ற அரசர்! எளியவர்! மக்களின் நண்பர்! எப்பேர்ப்பட்ட தலைவர் இவரைப் போன்று இந்த உலகத்தில் எந்த தலைவரும் இருந்ததாகத் தெரியவில்லை...தமிழகம் இன்று தத்தளிக்கின்றது அவரைப்போன்ற ஒரு தலைவர் இல்லாததால்...
RépondreSupprimerமிக்க நன்றி ஐயா பகிர்விற்கு!
தங்களுடைய கருத்தானது, 100/100 சதவீதம் உண்மையான ஏற்புடைய கருத்து ஆசானே!
RépondreSupprimerகர்மவீரர் புகழுக்கு பெருமை சேர்க்கும் கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு