jeudi 23 juillet 2015

" பூக்கட்டும் பூரண மது விலக்கு"





தூங்குபரை கடிக்கும் கொசு


விளையாட்டு வீரம் இல்லை!

தூங்க விடாத கொசுவின்

விளையாட்டு பெருந் தொல்லை!

ஆட்சிக் கட்டில் கனவு?

விளையாட்டுக்கு ஏது எல்லை?

ஊழல் பெருச்சாளிகள் உலவுவது

ஊர் உலகுக்கு தொல்லை!

'மாற்றம் இனி முன்னேற்றம்'

விளையாட்டு நிலை இல்லை!

ஏற்றம் ஏறுநடை பயில!

போற்று சீர்மிகு தமிழகமே!


பூரண சூரிய-சந்திர கிரஹணம்

வழிபாட்டை விட்டு விடு!

"பூரண மது விலக்கு"

கோட்பாட்டை வழி படு!
 


வாரணம் ஆயிரம் வந்து
தோரணம் அழகு கண்டு
பூரண மகிழ்வு பூண்டு
வாழ்த்து பாயிரம் சிந்தும்!


தமிழகம் நல் வளர்ச்சியில்,
தரணியை
இனி மிஞ்சும்.

புதுவை வேலு

12 commentaires:

  1. சந்தர்ப்பவாத அரசியலாக இல்லாமல் -
    உண்மையாகவே பூரண மது விலக்கு வேண்டும்..

    மக்கள் வாழ்வு வளம் பெற வேண்டும்..

    RépondreSupprimer
  2. பூக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது! பூக்கட்டம்!

    RépondreSupprimer
  3. மதுவிலக்கை வைத்து ஒரு அரசியல் விளையாட்டு
    தொடங்கியுள்ளது
    பார்ப்போம் என்ன நடக்கிறதென்று
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
  4. பூரண மதுவிலக்கு தமிழ்நாட்டிற்கு அவசியமே அப்போ புதுவைக்கு எல்லோரும் படையெடுப்பார்களே! புதுவையிலிருந்து சென்னைக்கு ஏற்கனவே வார இறுதியில் பேருந்துகள் "ஃபுல்"லாக வருகின்றன.....

    RépondreSupprimer
  5. ஆளாளுக்கு சொல்கிறார்கள் என்றாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கு கேள்விக்குறி தான் என்றே தோன்றுகிறது.... பார்க்கலாம்....

    RépondreSupprimer
  6. இதுவரை நடத்தப்பட்டபோல மதுவிலக்கை அரசியலாக்காமல் பூரண மது விலக்கு கொண்டு வரப்பட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று.

    RépondreSupprimer
  7. நம்ம தலையில பூசுத்துறதே இவனுங்க வேலையா போச்சு, நாமளும் அறிவை அடகு வச்சுட்டோம்.
    இதன் வருமானத்தை நம்பி தான் இலவசம் இருக்குது !
    பல செலவுகளுக்கு அரசுக்கு "கேஷ் ப்ளோ " ஆதாரம் இது !!
    இதுவரை வருமானம் அரசுக்கு போய்க்கிட்டு இருக்கு, இனிமே வருமானம் யாருக்கு போகும் என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை !!!
    மதுவிலக்குன்னு சொல்லிட்டா குடிக்கிறவன் எல்லாம் குடியை நிருத்தபோரானா ? !!!!!!!
    போங்கப்பா போக்கத்தவங்கலா ..........

    RépondreSupprimer
    Réponses
    1. >>> போங்கப்பா போக்கத்தவங்கலா ...<<<

      யார்!?..

      Supprimer