இந்திய தேசம் முழுவதும் நேற்றைய தினம்
பெய்த கண்ணீர் மழை இன்னமும் நிற்க வில்லை.
ஆம் அது புண்ணிய மழை அல்லவா?
கலாம் அவர்களது கனவை மெய்ப்பிக்க மக்கள்
ஜனாதிபதிக்கு மக்களின் கண்களிலிருந்து வழியும்/பொழியும் அன்பு மழை அல்லவா?
அது சரி, மழை என்பதில்தான் எத்தனை வகை?
தமிழ்கூறும் நல்லுலகம் இந்த மழையை எப்படி பொழிகிறது.... என்பதையும்தான் சற்று பார்ப்போமே!
அடைமழை
இடிமழை
கல்மழை (ஆலங்கட்டி)
கனமழை
காத்து மழை
கால மழை
கோடை மழை
சுழி மழை
துணைமழை
பருவட்டு மழை
பருவமழை
தை மழை
நச்சு மழை
பஞ்சட்டைத் தூறல்
பட்டத்து மழை
பரவலான மழை
பருமழை
மழை முறுகல்
மாசி மழை
வெக்கை மழை
பெருமழை
பே மழை
சாரல்
சிணுங்கல்
தூவானம்
தூறல்
பூந்தூறல்
பொசும்பல்
.
பொடித்தூறல்
ஊசித்தூறல்
மழை முறுகல்
ரவைத் தூறல்
எல்லைக் கட்டிப் பெய்யும் மழை
எறசல் மழை: (தடுப்பையும்
மீறி மேலே படுவது).
அப்பப்பா! மழை என்பதில்தான் எத்தனை வகை.
இத்தனை வகையான மழையும், ஒரு சேர
பொழிந்த இடம் எது ? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
"நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம்
ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு
இருந்துவிட்டேன்"
- கி.ரா
கி.ராஜநாராயணன் தொகுத்த, வட்டார வழக்கு
அகராதியில், மழை பற்றி அவர் கொடுத்திருந்த சொற்கள்தான் இவைகள்.
கரிசல் இலக்கியத்தின் தந்தையாகவும், கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய
முன்னோடியாகவும் திகழ்ந்த இவர் வாழுமிடம் புதுச்சேரி என்னும்போது மகிழ்ச்சி மழை
மனதில் பொழிகிறது.
சுப மழை!
நன்றி மழை!
நட்புமழை
அற்புதமான பகிர்வு
RépondreSupprimerஅறியாதன பல அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அற்புத மழையை போற்றி பாராட்டு மழை பொழிந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
tha.ma 1
RépondreSupprimerவாக்கு மழையாய் வந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerபுதுவை வேலு
அழகான மழைப் பொழிவிற்கு ஒரு நன்றி மழை.
RépondreSupprimerஎழில் மிகு மழையாய் வந்தீர்கள் முனைவர் அய்யா அவர்களே!
Supprimerநன்றி மழை நான் பொழிந்தேன் தங்களுக்கு.
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி மழை...
RépondreSupprimerநன்றி மழையோடு வாக்கு மழையும் சேர்ந்து அல்லவா வந்துள்ளது.
Supprimerஇரட்டிப்பு மகிழ்ச்சி மழை வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
மழையில் இத்தனை வகைகளா
RépondreSupprimerவியந்துதான் போனேன் நண்பரே
நன்றி
தம+1
வியப்பு மழையில் நனைந்தீர்களா? நன்றி நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
மழை பற்றிய பதிவு அற்புதம் சகோ. நேரம் கிடைக்கும் போது எனது பதிவான முட்டை குழம்பை ருசிக்க வாருங்கள்.
RépondreSupprimerநன்றி சகோதரி!
Supprimerதங்களது சமையல் மழையை நாடி ஓடி வருகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
உங்கள் நடையில் ,கி ஜ ராவின் ரசனை மழையில் நனைந்தேன் :)
RépondreSupprimerவாருங்கள் பகவான் ஜி அவர்களே!
Supprimerரசனை மழையில் குளித்தமைக்கு குழலின்னிசையின் நன்றி மழை!
நட்புடன்,
புதுவை வேலு
இலக்கியச் சுவை சொட்டும்
RépondreSupprimerஇனிய பதிவு இது!
தொடருங்கள்
தொடர் மழை பெய்ய ஆதரவுத் தாருங்கள் அய்யா நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மழைகளில் இத்தனை வகைகளா? அதிசயித்தேன்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerஇத்தனை மழைகளையும் ஒன்று திரட்டிய அய்யா கி.ரா அவர்களைப் போற்றுவோம்.
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerஉங்கள் நடையில் அவரின் மழை அருமை,
நன்றி.
வணக்கம் சகோதரி!
Supprimerஇந்த நடைக்கு உடையும், விடையும் தந்தவர் கரிசல் இலக்கியத்தின் தந்தையல்லவா?
தொடர் மழை பெய்ய ஆதரவுத் தாருங்கள் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மழையில் எத்தனை வகைகள்! அறிய தந்ததற்கு நன்றிகள்!
RépondreSupprimerநன்றி சகோதரி!
Supprimerஇத்தனை மழைகளையும் ஒன்று திரட்டிய அய்யா கி.ரா அவர்களைப் போற்றுவோம்.
நட்புடன்,
புதுவை வேலு
மழை என்பதில்தான் எத்தனை வகை.....
RépondreSupprimerமழையில் நனைந்து போராடும் பாட்டாளி வர்க்கத்தின்
Supprimerதோழமை மழையையும் சிறப்பிக்க வேண்டும் தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
மழை என்பதில்தான் எத்தனை வகை.....
RépondreSupprimerகருத்து மழை பொழிந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களது
Supprimerதொடர் மழை வேண்டி காத்திருக்கிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
பொழிந்து விட்டீர்கள் . அருமை
RépondreSupprimerகருத்து மழை பொழிந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
RépondreSupprimerதங்களது தொடர் மழை வேண்டி காத்திருக்கிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
தெரியாத பல வார்த்தைகள் மழை பற்றி அறிந்தேன்.
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerஇத்தனை மழைகளையும் ஒன்று திரட்டிய அய்யா கி.ரா அவர்களைப் போற்றுவோம்.
நட்புடன்,
புதுவை வேலு