samedi 11 juillet 2015

"சமச்சீர் பள்ளிக்கூடம்"

இன்று ஒரு தகவல்


கல்வி நிலையங்களுக்கு ஏன் தமிழில் பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?
"பள்ளி" என்ற சொல்லுக்குப் படுக்கை என்றே அர்த்தம். அதிலிருந்துதான் பள்ளியறை என்ற சொல் வந்தது. எதையும் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளாத சமணத் துறவிகள் ஓய்வெடுப்பதற்காகபாறைக் குன்றுகளில் இருந்த குகைகளில் படுக்கை செதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் சமண முனிவர் வாழ்ந்த இடங்கள் பள்ளி எனப்பட்டன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருச்சிராப்பள்ளி.

"சிரா" என்ற முனிவர் திருச்சி மலைக்கோட்டையில் வாழ்ந்துவந்ததால், அந்த ஊர் சிராப்பள்ளி எனப்பட்டது. 

மரியாதை நிமித்தம் 'திரு' சேர்ந்துதிருச்சிராப்பள்ளி ஆனது.

சமணத் துறவிகள் தங்கிய இந்தப் பள்ளிகளில் மாணவமாணவிகளை உட்காரச் செய்து அறிவு தானத்தை வழங்கி வந்ததால், அந்த இடம் பள்ளிக்கூடம் எனப்பட்டது. இந்தப் பள்ளிகளில் எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கும்போது
சித்தர் வணக்கம்கூறி ஆரம்பிப்பதே வழக்கம். இதுவே பின்னர் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்தது. 


'ஹரி நமோத்து சிந்தம்'
 
பழங்காலத்தில் மாணவமாணவிகளுக்கு அரிச்சுவடி கற்பிக்கத் தொடங்கும்போது, முதலில் சித்தர் வணக்கம் கூறுவது வழக்கமாக இருந்துவந்தது. 

 ஹரி நமோத்து சிந்தம்என்று முதலில் கூறிய பின்னர்தான்ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தொடங்குவார். இக்காலப் பள்ளிகளில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை. 
பழங்காலத்தில் இருந்துவந்த இந்தப் பழக்கத்தில் சிந்தம்' என்று கூறப்பட்டது,  ‘சித்தம்' என்பதன் திரிபு வடிவம்தான். சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சப் பரமேஷ்டிகளில் ஒருவர். அனைவருக்கும் மூத்தவர், நிலம் என்று இரண்டு அர்த்தங்கள் இதற்கு உண்டு. இதனால்தான் சமணர், சித்தர் வணக்கம் செய்து வந்தனர். 

தமிழகத்தில் சித்தர் வணக்கம் செய்த பிறகு கற்பிக்க ஆரம்பித்தது போலவேகர்நாடகத்தில் சித்தம் நமஎன்று கூறியே எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் என்று புராணம் கூறுகிறது.


"முதன்முதலில் சமணர்களே தமிழகத்தில் சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து கல்வியை வழங்கியதால், சித்தர் வணக்கம் சொல்லும் வழக்கத்தை மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர் என்று கொள்ளலாம்."


இதன் மூலம் பள்ளிக்கூடம் என்ற பெயரும்சித்தர் வணக்கம் செய்யும் முறையும் சமணர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டவை என்பதை உணரலாம்!


"கல்லூரியும் மாணவர்களும்"
 
அதேபோல, கல்லூரி என்ற உயர்கல்வி நிலையத்தைக் குறிக்கும் சொல் சீவக சிந்தாமணியின் 995வது வரியிலுள்ள 'கல்லூரி நற்கொட்டிலா' என்ற தொடரிலிருந்து பெறப்பட்ட சொல்தான் என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர்! ஒருவர்.

'மாணாக்கன்',  'மாணாக்கிஎன்ற சொற்களும் சமணக் கல்வெட்டுகளில் இருந்து பெறப்பட்டவையே.

சமண ஆண் துறவிகள் மட்டுமல்லாமல்சமணப் பெண் துறவிகளும் கல்வி போதித்து வந்துள்ளனர். பெண் கல்வி வளர்ச்சிக்குச் சமணம் ஊக்கம் அளித்துள்ளது.

அந்தக் காலத்தில் 'சமண மதம்' கல்விக்கு மிகப் பெரிய முக்கியத்துவம்  அளித்து வந்தது என்பது, இந்த கல்வி தொடர்புடைய கட்டுரையின் மூலம் நன்கு நமக்கு புலனாகிறது.


பகிர்வு

புதுவை வேலு
(நன்றி: தி இந்து)

 

30 commentaires:

  1. >>> ‘ஹரி நமோத்து சிந்தம்' என்று முதலில் கூறிய பின்னர்தான், ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தொடங்குவார். இக்காலப் பள்ளிகளில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை.<<<

    காலமெல்லாம் போற்றி வளர்க்கப்பட்ட கல்வி -
    கவிகளின் கையில் சிக்கிய பூமாலை ஆயிற்று!..

    RépondreSupprimer
    Réponses
    1. மறுமொழிக்கும் மகா சக்தி உண்டு என்பதை
      தங்களது பின்னுட்டத்தில் பார்க்கிறேன் அய்யா!
      யார் கையில் பூ மாலை என்பதை இவ்வளவு அழகாக யாரால் சொல்ல இயலும்!?நற்செய்தி சொன்னமைக்கு! நன்றி அருளாளர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சமண மதம் கல்விக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் தந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள உதவிய உங்களுக்கு நன்றி!

    நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். ஹரி நமோத்து சிந்தம் என்று கூறியே எங்கள் ஆசிரியர் பாடத்தை தொடங்குவார். தங்கள் பதிவு என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டது.

    RépondreSupprimer
    Réponses
    1. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்து வளர்ந்த திருவாளர்களில் தாங்களும் ஒருவர் என்பதை மறுமொழியின் வழியே அறிய தந்தமைக்கு நன்றி அய்யா!
      "ஹரி நமோத்து சிந்தம்" உதாரணப் புருஷராகிய தங்களை உளமாற போற்றுகிறேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இதுவரை அறியாத செய்தி நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. அறியாத செய்தி மேலும் அறியாமல் விடுபட்டவர்கள் பயன் பெறவே இந்த பகிர்வினை குழலின்னிசை மெருகூட்டித் தருகிறது பகிர்வாக என்பதை சிலர் அறியத்தான் வேண்டும்! நன்றி கரந்தையார் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. அருமை பாராட்டிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. அருமை பாராட்டிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. // சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து கல்வியை வழங்கியதால் // என்னவொரு சிறப்பு... இப்போது பெருமூச்சு தான் வருகிறது ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. "சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து கல்வியை வழங்கியதால் தான்
      இந்த பதிவின தலைப்பு "சமச்சீர் பள்ளிக்கூடமாய்" விளங்குகிறது வார்த்தைச் சித்தரே!
      வருகையும் வாக்கும் மகிழ்வை இரட்டிப்பாக்கித் தருகிறது! நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. திருச்சி குறித்து தகவல்களைப் பகிர்ந்தது அருமை..
    இன்றய தலைமுறை அதை தாயுமானவர் கோவில் என்றே நினைத்துகொண்டு இருக்கிறார்கள் ...
    நன்றிகள்

    RépondreSupprimer
    Réponses


    1. நல்ல பதிவுக்கு நல்வரவேற்பு அளித்த தோழருக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. நல் வாக்கு அளித்தமைக்கு நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  9. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்கு பாராட்டி நல் வாழ்த்து சொன்னமைக்கு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அறிந்த செய்தி. இருப்பினும் பகிர்ந்த முறை நன்று. வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்கு பாராட்டி நல் வாழ்த்து சொன்னமைக்கும்,
      நல் வாக்கு அளித்தமைக்கும் நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தகவலுக்கு நன்றி! நண்பரே..த.ம6

    RépondreSupprimer
    Réponses
    1. நன்கு பாராட்டி நல் வாழ்த்து சொன்னமைக்கு,
      நல் வாக்கு அளித்தமைக்கு நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு


      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. / சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து கல்வியை வழங்கியதால் // அருமை....ஹும் இப்போதைய நிலைமை...?!! பல தகவல்கள் அதுவும் திருச்சி பற்றி அறிந்தோம்....

    ஹரி நமதோத்து சிந்தம்....இதில் ஹரி என்பதற்கான அர்த்தம்??!!

    RépondreSupprimer
    Réponses
    1. "சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து, கல்வியை வழங்கியதால் தான்
      இந்த பதிவின தலைப்பு "சமச்சீர் பள்ளிக்கூடமாய்" விளங்குகிறது ஆசானே!

      வருகையும் வாக்கும் மகிழ்வை இரட்டிப்பாக்கித் தருகிறது! நன்றி அய்யா!

      ஹரி நமதோத்து சிந்தம்....இதில் ஹரி என்பதற்கான உண்மை அர்த்தம்?
      எதுவாக இருப்பினும்,
      அனைவரும் "அன்பு" என்றே பொருள் கொண்டாலே கோடி நன்மை கிட்டும் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஒ!! நம்ம திருச்சியில் இவ்ளோ மேட்டர் இருக்கா!!! பயனுள்ள பகிர்வு சகோ!! மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பயனுள்ள செய்தியை பாராட்ட வந்தமைக்கு நன்றி சகோதரி! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தெரியாத சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அறியாத செய்தி மேலும் அறியாமல் விடுபட்டவர்கள் பயன் பெறவே இந்த பகிர்வினை குழலின்னிசை மெருகூட்டித் தருகிறது பகிர்வாக என்பதை சிலர் அறியத்தான் வேண்டும்! நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. சிறப்பான தகவல்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்கு பாராட்டி நல் வாழ்த்து சொன்னமைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer