'இன்று 11ம் ஆண்டு நினைவு தினம்'
எந்த கோணம் பார்த்தாலும்
அந்த கோணம் மறைவதில்லை!
பள்ளிப் பிள்ளைகள் -கொடுமை!
"தீ"யில் வெந்தக் கோணம்!
அதுதான் கும்ப கோணம்.
ஆண்டுகள் பதினொன்று பறந்ததப்பா!
தொண்ணூற்று நான்கு முத்துக்கள்
தீயில் கருகி இறந்தப்பா!
விறகு சுள்ளிகள் எல்லாம்
பிறகு பள்ளிகள் ஆனால்?
"தீ"க்கு தீனி வேறு
எங்கு கிடைக்குமப்பா?
சிறார் சிறுமியர் சிறப்பு
"மோட்ச தீபம்"
மாட்சிமை ஒளி வீசட்டும்!
மனதில் அமைதி நிலவட்டும்.
புதுவை வேலு
Vedanai Tinam
RépondreSupprimer"சிறார் சிறுமியர் சிறப்பு
Supprimer"மோட்ச தீபம்"
மாட்சிமை ஒளி வீசட்டும்!
மனதில் அமைதி நிலவட்டும்."
வேதனையில் பங்கெடுப்போம்!
அஞ்சலி செலுத்தி வணங்குவோம்
.
நட்புடன்,
புதுவை வேலு
நினைத்துப்பார்க்கவே முடியாது , நெஞ்சம் கனத்து போகும்.இனி எப்போதும் இது போல் மொட்டுகள் கருக கூடாது என்று இறைவனிடம் மனம் யாசிக்கும்.
RépondreSupprimerஅன்புடையீர்.. நலம் தானே!..
Supprimerதங்களைக் கண்டு வெகுநாட்களாகின்றன..
வாழ்க நலம்!..
Supprimerஇனி எங்கும், எப்போதும் இது போல் இளம் மொட்டுகள் கருக கூடாது என்று இறைவனிடம் மனம் யாசிக்கட்டும்!
தங்களின் கருத்தாழமிக்க வரிகளை நாங்களும் போற்றி வழி படுகிறோம் சகோதரி!
நீண்ட நெடுநாள் கழித்து தாங்கள் வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
என்றென்றும் மறக்க இயலாத துயரம்..
RépondreSupprimer
Supprimerஎந்த கோணம் பார்த்தாலும்
அந்த கோணம் மறைவதில்லை!
பள்ளிப் பிள்ளைகள் -கொடுமை!
"தீ"யில் வெந்தக் கோணம்!
அதுதான் கும்ப கோணம்.
ஆம் அருளாளர் அய்யா !
அது!
என்றென்றும் மறக்க இயலாத துயரமே!
நட்புடன்,
புதுவை வேலு
மனதில் வலியை ஏற்படுத்தும் மறக்க முடியாத நாள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க விடுத்திருக்கும் வேண்டுகோளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும்.
RépondreSupprimer
Supprimerஎன்றென்றும் மறக்க இயலாத துயரம் நிறைந்த
இந்த நாளை , 'குழந்தைகள் பாதுகாப்பு நாளாக 'அறிவிக்க விடுத்திருக்கும் வேண்டுகோளை நிச்சயம் அரசு நிறைவேற்றத்தான் வேண்டும் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
மிகவும் வேதனை தரும் நிகழ்வு....
RépondreSupprimer
Supprimerவேதனை தரும் நிகழ்வு இனி நிகழாது இருக்க இறைவனை வேண்டுவோம் வார்த்தைச் சித்தரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்த நாள் இன்றும் நினைவில் இருக்கின்றது! வேதனை தரும் நிகழ்வு மீண்டும் நிகழக்கூடாது!
RépondreSupprimerவிறகு சுள்ளிகள் எல்லாம்
Supprimerபிறகு பள்ளிகள் ஆனால்?
"தீ"க்கு தீனி வேறு
எங்கு கிடைக்குமப்பா?
நெஞ்சில் ஆறாத வடுவை ஏற்படுத்திய தினம்!
இளந்தளிர் மாணவ மாணவியர்கள் தீயின் தீராப் பசிக்கு இரையாகிப் போனது வேதனையிலும் வேதனையான நிகழ்வு!தான் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்பது போல் வேதனையான ஒரு நாள்....இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழக்கூடாது...
RépondreSupprimer"இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழக்கூடாது"
Supprimerநிதர்சனமான வரிகள்!
துயரத்தை துடைக்கும் வார்த்தையை தந்தமைக்கு நன்றி ஆசானே!
நட்புடன்,
புதுவை வேலு
அனைவர் மனத்து ரணமும் வடுவாகி இன்னும் வலிக்கிறதே,
RépondreSupprimerநினைவாஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இனி வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாதிருக்க வேண்டுவோம்.
வேதனை தரும் நிகழ்வு இனி நிகழாது இருக்க இறைவனை வேண்டுவோம் அய்யா!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கொடுமையான நிகழ்வு...
RépondreSupprimerஉங்கள் பாவில் பார்த்தது சமூகம் குறித்த உங்கள் அக்கறையை தெரிவிக்கிறது
தம +
சமூகம் குறித்த அக்கறைக்கு ஊட்ட சக்தியே!
RépondreSupprimerதோழரே!
உம்மை போன்றோர் தரும் ஊக்கமிகு ஆக்க சக்தியே எனில்
அது மிகையன்று!
சமூகப் பார்வை யாவர்க்கும் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!
நன்றி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
இனி இந்த மாதிரி வேதனையான நிகழ்வு ஏற்படக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் சகோ.
RépondreSupprimer
Supprimerஆண்டுகள் பதினொன்று பறந்ததப்பா!
தொண்ணூற்று நான்கு முத்துக்கள்
தீயில் கருகி இறந்தப்பா!
ஆம்! சகோதரி 11 ஆண்டுகள் சென்ற பிறகும்
இன்னமும் அந்த வேதனை தரும் நிகழ்வு
நமது நெஞ்சங்களை தைக்கின்றது!
இனி இதிபோன்றதொரு நிகழ்வு நிகழாது இருக்க இறைவனிடம் வேண்டுவோம்!
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
இந்நிகழ்வில் எங்களது நெருங்கிய குடும்ப நண்பரின் மகன் தெய்வாதீனமாக உயிர்தப்பினான். அதைப் பற்றி பேசினாலே அவன் முகம் இன்னும் மாறுவதை நான் பார்க்கிறேன். மிகவும் வேதனையான நிகழ்வு.
RépondreSupprimerதொடர்புடைய செய்தியை கேட்டு மனம் பதறுகிறது முனைவர் அய்யா!
RépondreSupprimerகொடுமையான நிகழ்வு!
அமைதி நிலவ ஆண்டவனை வேண்டுவோம்
நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்வில் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வு !
RépondreSupprimer