mercredi 29 juillet 2015

"சுப முஹூர்த்தம்" (சிறு கதை)





கோபு வீட்டுத் திருமண வேலைகளெல்லாம் கோலாகலமகவே நடை பெற்றுக் கொண்டிருந்தது.

மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

சுப மந்திரம் சொல்பவருக்கு முன் பணம் கொடுத்தாகி விட்டது. அவரது வருகையை உறுதி செய்து கொண்ட மகிழ்ச்சியில், அவர் கூறியதை நினைவுபடுத்திப் பார்த்தான் கோபு.

ஆக வேண்டிய அடுத்த வேலையை போய் பாருங்கோ....
பேஷா! ஜமாய்ச்சுடலாம். முஹூர்த்தத்திற்கு முன்னமே வந்து நல்லபடியா சந்தோஷத்தோடு நடத்தித் தரேன்! ஷேமம்!

அவரது நினைவோடு திருமணப் பணிக்கான ஒவ்வொரு அலுவலையும், அசைபோட்டபடியே வந்தான்.  கல்யாண மண்டபம்விருந்து,  ஜவுளி, அழைப்பிதழ்பொற்கொல்லர்தாலிமாலை, போன்ற அனைத்து வேலைகளையும், தனது சொந்த பந்தங்களிடம் பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. அவர்களிடமிருந்தும் எல்லாம் நல்லபடியே நடந்து வருகிறது என்ற தகவல் வரவும் அவனுக்கு மகிழ்ச்சி !
 
அப்போது அவனது அலைபேசி அழைக்கவே....
ஹலோ! கோபு எப்படி இருக்கே?
ஹாய் சத்தியா !
எப்ப வந்த இந்தியாவுக்கு?
ஏதாவது விசேஷமா?
ஆமாம்.
"ஆதார் அட்டை " வாங்க வந்தேன். போட்டோ எடுக்கனுமாம். அதான் குடும்பதோட வர வேண்டியதாயிற்று என்றதும்,
கோபுவுக்கு, திருமணத்திற்கு நினைவின் ஆதாரம் போட்டோ மற்றும் வீடியோ ஆயிற்றே ? 
இது எப்படி மறந்து போயிற்று?  விடுபட்டதை நினைவுக்கு கொண்டு வந்த தனது நண்பனுக்கு, நன்றி சொல்லிவிட்டு, அப்படியே…. திருமணத்திற்கு அவரது வருகையையும், உறுதி செய்து கொண்டான்.

முஹூர்த்தநாளன்று!
மகிழ்ச்சியோடு  குட்டீஸ்லிருந்து குடு குடு தாத்தா பாட்டி வரை அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். வருபவர்களை வரவேற்க  வரவேற்பு வாசலில் நின்று வணக்கம் சொல்லி வரவேற்றபடி நின்றிருந்தான் கோபு!
அப்போது அங்கிள் உங்கள அய்யர் மாமா கூப்பிடுறார்! வாங்க.... என்று குட்டீஸ் ஒன்று வந்து அழைக்கவே... மண மேடையை நோக்கி ஓடி..  வருபவரை பார்த்ததும்....
என்ன கோபு சார் முஹூர்த்த நேரம் நெருங்கிடுத்து, ஆரம்பிச்சிடலாமா? சீக்கீரமாய்...போய்....
ஜோடியை அழைச்சிட்டு வரச் சொல்லுங்கோ! என்றதும், 

இதோ சாமி! என்று சொல்லியபடியே தனது மகளை அழைத்தான்.


சந்தோஷி இங்கே வாம்மா....
நீ போய் தாத்தா-பாட்டியை பத்திரமாய் அழைத்து வாம்மா! என்றான் கோபு.

சற்று நிமிடத்தில்...

மணமாலையோடு தம்பதியராய் 'தாத்தா - பாட்டி' இருவரும்  மணமேடையில் வந்து அமர்ந்தனர். 


(கனகாபிஷேக சுபமுஹூர்த்தம் என்பது 90வது வயதில் நடைபெறும் திருமணம்)

சொந்த பந்தங்கள்  புடை சூழ, நட்பு வட்டங்கள் நலம் பாட... 'தாத்தா - பாட்டி' இருவருக்கும் அன்றுதான்...."கனகாபிஷேக சுபமுஹூர்த்த- திருமணம்" 
 
புதுவை வேலு

 


10 commentaires:

  1. வித்தியாசமாக முடித்தீர்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. முஹூர்த்த நேரம் முடிவதற்குள் வந்து வாழ்த்தினை பெற்று விட்டீர் வார்த்தைச் சித்தரே!
      வருகையும், வாக்கும் வெகு சிறப்பு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆஹா முடிவில் மாற்றம்....நலம். சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      வருகையும், வாக்கும் வெகு சிறப்பு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கருத்து போடும் போது ஓட்டு பட்டையை காணவில்லை. பின் வந்து விட்டது தம 2

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்து போடும் போது ஓட்டு பட்டையை காணவில்லை.
      உண்மை சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எங்கோஆரம்பித்து, எங்கோ முடிவு. இருந்தாலும் மனதில் நின்றது.

    RépondreSupprimer
    Réponses
    1. "கதை முடிவு மனதில் நின்றது"
      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. "கனகாபிஷேக சுபமுஹூர்த்தம்" 90வது வயதில் நடைபெறும் திருமணம் காண தொலைவில் இருந்து வந்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer