இன்று ஆடி வெள்ளி பிறந்து விட்டது!
அம்மன் அருள் வேண்டி மாவிளக்கேற்றி,
பொங்கல் வைத்து வழிபடும்
வைப நிகழ்வு துவங்கி
விட்டது.
"மாரியம்மா! எங்கள் மாரியம்மா!" அம்மன் பாடல் காற்றில் தவழ்ந்து காதில்
விழுகின்றது. ஆம் !
ஆடிமாதம் பிறந்துவிட்டது.
ஆடி
என்றவுடனே மாரியம்மனின் மங்களகரமான திருமுகமும், ஆவி பறக்க சுடச்சுட மணக்கும் கூழும்தான் அனைவர் நினைவிலும் வந்து
போகும். அம்மன் கோயில்களில் கூழ் உற்றுவது என்பது வெகு சிறப்பு!
ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம்
கடைபிடிக்கப்படும். இந்த விரதத்தை பெண்கள்
மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு.
ஆடி மாதத்தில் ஏன் அம்மனை வழிபடுகிறோம்?
அந்த சமயத்தில் ஏன் கூழ் ஓர் அற்புத
உணவாக அதம்பறத்துகிறது?
மாரி என்றால் மழை என்று அர்த்தம். மழையை தருவிக்கிற ஒரு தேவதைதான்
மாரியம்மன். ஆடி மாதத்தில் தமிழக வயல்களில் பயிர் செய்யும் பணி
மும்முரமாக தொடங்கும்.
இந்த சமயத்தில் செய்யும் பயிர்த்தொழில் செழித்து வளரும் என்பது அனுபவசாலிகளின் ஆழ்ந்த நம்பிக்கை.
இந்த சமயத்தில் செய்யும் பயிர்த்தொழில் செழித்து வளரும் என்பது அனுபவசாலிகளின் ஆழ்ந்த நம்பிக்கை.
இதைத் தான் ‘ஆடிப்பட்டம் தேடி விதை‘ என்பார்கள்.
எனவே, இந்த
பயிர்த்தொழிலுக்கு நீர் அவசியம் என்பதால் மழையை அழைக்கும் விதத்தில்
மாரியம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. மாரியம்மனின் மனம்
குளிர்ந்தால்
மண்ணெல்லாம் நிச்சயம் குளிரும் என்பது வழிவழியாக தொடர்ந்து வரும் நம்பிக்கையாகவும்
உள்ளது.
உழவர்கள் ஆடிப்பட்டம்
தேடி விதைப்பர். இந்த மாதத்தில் வெளிப்படும் சூரியக்
கதிர்கள், விவசாயம்
செழிக்க உதவுவதே இதற்கு காரணமாகவும் அறியப் படுகிறது.
ஆடி வெள்ளி
ஆடி கிருத்திகை
ஆடி அமாவாசை
ஆடிப் பூரம்
ஆடிப் பெருக்கு
-என்று ஆடி மாதத்து
சிறப்பான நாட்கள் பல உண்டு என்பதை நாம் அறிவோம்.
சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில்
ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விரதம் நமது
முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக
பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்றும் கூறுவார்கள்.
பஞ்சபூதங்களில் ஒன்றான
தண்ணீரை விரயம் செய்தால், பணமும் விரயமாகும்.
நீரின் வல்லமையை உணர்த்துவது "ஆடி 18".
ஆடியில் ஆறுகளில்
புதுப்புனல் பொங்கிவரும்.
இதுவே ஆற்றுப்பெருக்கு - ஆடிப்பெருக்கானது.
ஆடி 18-ல் காவிரியில் புனித நீராடுவது சிறப்பு.
ஆடிப்பூரம்;
மானிடத்தை இன்னல்களில்
இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் எனக் கருதுவர்.
இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக
கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு
பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு
விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.
உயிருக்கு ஆதாரமாகக் கருதப்படும் பிராண
வாயு அதிகமாக வெளிப்படுகிற மாதமாகவும் "ஆடி" கருதப்படுகிறது.
‘ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத்
தேடிப்பிடி’ என்ற பழமொழிக்கு ஏற்றபடி ! புதுமணத் தம்பதியருக்கு சீர்செய்து
வைத்து பெண் வீட்டார் அழைத்துப் போய் விருந்து படைப்பது வழக்கம்.
அங்கே
ஆடிப்பால் என்று தேங்காய்ப் பாலைக் கொடுப்பார்கள்.
ஆடி மாதத்தில், பெண்கள் வெளியே வந்து பால்குடம் எடுத்தல், பொங்கல் இடுதல், கூழ்வார்த்தல் போன்ற சக்தி
வழிபாட்டுக்கான பணிகளைச் செய்வதால் "ஆடி
மாதம்" பெண்களுக்கு மிக முக்கியமான மாதமாக இருக்கிறத
என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?
எனவே நாம் அனைவரும், "ஆடி"யை! பாடி வரவேற்போம்!!!
'ஆடி' வா!
'ஆடி' வா!
'ஆடி' வா!
'ஆடி' வா!
'ஆடி' வா!
'ஆடி' வா!
புதுவை வேலு
ஆடி மாதத்திற்கு அழகான அழைப்பு. தஞ்சையம்பதி பதிவின்மூலமாக மாரியம்மன் கோயிலுக்குச் சென்றேன். தங்களால் மேலும் பல செய்திகள். நன்றி.
RépondreSupprimerஆடி மாதத்திற்கு அழகான அழைப்பினை ஏற்று வந்து வாக்கும் கருத்தும் தந்த முனைவர் அய்யாவுக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
Loudspeaker தொல்லை இல்லாமல் இருக்கணும்....
RépondreSupprimerநல்ல வேளை மாணவ மாணவியருக்கு இது தேர்வு சமயமாக இல்லாமல் செய்தமைக்கு சமயபுரத்தாளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் நற்காரியங்கள் செய்ய உகந்தது அல்ல என்று ஏன் சொல்லவேண்டும்?
RépondreSupprimerஅக்னித் தேவனின் ஆட்சி அதிகமாக இருப்பதன் காரணமாக இருக்கலாம் அல்லவா அய்யா?
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தகவல்கள்...
RépondreSupprimerதகவல் கண்டு கருத்திட்டமைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
keep up the good work
RépondreSupprimervote +
ஊக்கத்தை அரும் மருந்தாக்கி அழகுற
Supprimerஎனது ஆக்கத்திற்கு அருந்த தரும் அன்புத் தோழருக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும், வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆடி மாதம் பற்றி சிறப்பான பதிவு சகோ.
RépondreSupprimerபொங்கல் வைத்து கூழ் ஊத்தும்போது சொல்லி அனுப்புங்கள் சகோதரி!
Supprimerகம்பங்கூழ் செய்வது எப்படி?
சுவைமிகு பதிவை தாருங்கள் சகோதரி!
என்னை நம்பி வந்தவர்களுக்கு நானும் கூழ் ஊத்த வேண்டும் அல்லவா?
பதிவை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்ற்!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் பதிவு அருமை புதுவையாரே,,,,
RépondreSupprimerஆடி மாதம் சிறப்பான மாதம் தான்,,,,,,,,,
நானும் பிறந்த மாதம் அல்லவா??
எப்புடி,,,,,,,,
நன்றி.
அம்மனின் அருள் பெற்று பேரும் புகழும் பெற்று
Supprimerசகல நன்மைகள் யாவும் பெற்று சுற்றமும் நட்பும் சூழ குடும்பத்தினர் அனைவர் அன்பையும் பெற்று நீடூழி வாழ்க சகோதரி!
வருகைக்கு நன்றி!
பிறந்த மாத நல்வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
ஆடி பற்றி அருமையான தகவல்கள்
RépondreSupprimerநன்றி
ஆடிக் கூழ் பற்றி நானும்
https://muruganandanclics.wordpress.com/2015/07/17/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/
பதிவினை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
Supprimerதங்கள் பதிவை காண தங்கள் தளம் வருகிறேன்! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆடியின் சிறப்புகள் அருமை.
RépondreSupprimerவாழ்த்துக்கள்.
வாழ்த்து பாராட்டியமைக்கு, குழலின்னிசயின் நன்றி! சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆடிக் கூழ் தகவல்கள் மட்டுமல்ல அந்தக் கூழ் ரொம்ப நன்றாக இருக்கும்....
RépondreSupprimer" கூழ் "பெருமை பற்றி கருத்திட்டமைக்கு
Supprimerகுழலின்னிசயின் நன்றி! அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimer"ஆடி வெள்ளி" பதிவினை பாராட்டி கருத்திட்டமைக்கு
Supprimerகுழலின்னிசயின் நன்றி! நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு