mercredi 1 octobre 2014

கலைத் தாயின் தலைமகன் "சிவாஜி"





நடிகர் திலகம் சிவாஜி


(86வது பிறந்தநாள்)








ஆஸ்கார் விருதையே
ஆச்சரியப் பட வைக்கத் தெரிந்த
இவருக்கு ஏன்?
அரசியலில் மட்டும் நடிக்கத்
தெரியவில்லை?


பராசக்தியில் தொடங்கி படையப்பா வரை  நடிப்பில்
இவரை மிஞ்ச எவரப்பா? பதிலிருந்தால் கூறப்பா?

சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த நடிப்பின்
உத்தம புத்திரன்.










சிவாஜி


நடிப்புக்கு படிப்பு
சொல்லி தந்த
படிக்காத மேதை

நாம் பிறந்த மண்ணில்
நீ பிறந்த நாள்
அக்டோபர் முதல் தேதி

திருவிளையாடல் சிவன்
அருளாலும்

திருமால் பெருமை
நாராயணன் அருளாலும்

படையப்பா
பிரம்மா அருளாலும்

உன் புகழ்
கௌரவம் ஓங்கி நிற்கும்
மண்ணில்
மறையாது இன்றும்/ என்றும்.


புதுவை வேலு

 

Aucun commentaire:

Enregistrer un commentaire