mercredi 1 octobre 2014

சரஸ்வதியே வா நீ!




சரஸ்வதியே வா நீ!







அன்னத்தின் வண்ணத்தை ஆடையில் ஒத்தவளே
அகிலம் அறிவுபெற அருங்கல்வி அளித்தவளே
வீணையின் இசையை வேதமாய் ஒலித்தவளே
துணைபுரிவாய் மனைசிறைக்க தூயவளே நீ!

அந்தாதி பாடி உந்தன் அருள் பெற்றார் கம்பன்
பாமாலை சூடி அறியாமொழி கற்றார் குமரகுரு 
கூத்தனூரில் குடியிருந்து குறைத் தீர்ப்பாய் 
வெந்தாமரையில் எழிலே எழுந்தருள்வாய் நீ

 
கலைகளை காத்தருளும் கலைமகள் நீ
கல்வியை படைத்தருளும் பாமகள் நீ
விலையில்லாத வித்தகச் செல்வம் நீ
துதி செய்தோம் சரஸ்வதியே வா நீ! (வாணீ)


புதுவை வேலு

 

Aucun commentaire:

Enregistrer un commentaire