mardi 14 octobre 2014

அறிவியல் ஞானி அப்துல் கலாம்




         அறிவியல் ஞானி அப்துல் கலாம் 

 

 



எளிமைமிகுந்த வலிமைமிகு மனிதா
ஒளிரும் பாரதத்தின் பெருமைமிகு புனிதா
கனவைத் தின்று உதிரம் தரித்த உயிரே
நனவாகும் உன்கனவு நாடு போற்றும் நதியே


தனுஷ்கோடி தந்தருளிய தமிழ்மகனே
பாரத முன்னாள் முதல் குடிமகனே
அக்கினிச் சிறகால் அறிவியலை அளந்தாய்
ஏவுகணை மனிதராக எத்திசையிலும் திகழ்ந்தாய்


பொக்கரான் அணுகுண்டு ஆராய்ச்சி சோதனை
நம்நாடு பாதுகாப்புக்கு நீசெய்த சாதனை
இளைய பாரதத்தின் இதயத் துடிப்பானாய்
நாளைய பாரதத்தின் நம்பிக்கை ஒளியானாய்



தமிழ்கூறும் நல்லுலகின் நாயகம் நீ
அமிழ்தூறும் பழமொழியின் பாவலன் நீ
எல்லாப் புகழும் இறைவனுக்கு என் றோதும்
அறிவியல் ஞானி அப்துல்கலாமை வாழ்த்துவோமே!


புதுவை வேலு

1 commentaire:

  1. அக்னி சிறகுகளால் இந்திய விஞ்ஞான பெருமையை அகிலம் அறிய செய்த அப்துல் கலாமுக்கு அற்புத கவிப்பா !

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer