jeudi 9 octobre 2014

கடல் தரும் அமுதம் கல் உப்பு(கடல் தரும் அமுதம் கல் உப்பு)






இன்று ஒரு தகவல்

கடல் தரும் அமுதம் கல் உப்பு



உப்பிட்டவரை உள்ளளவும் நினை' உப்பில்லாப் பண்டம்

குப்பையிலே' உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் 

போன்ற முத்தமிழ் பழமொழிகள் உப்பின் உயர்வை உலகறிய 
செய்ததை நாம் அறிவோம்


உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
மிக்கற்றால் நீள  விடல் - குறள் - 1302


 தெய்வப் புலவர் திருவள்ளூவர்



நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல், தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல் இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம் தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி செய்துவிடும். அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில் பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.


உப்பு சத்தியாகிரஹம் மூலம் மாபெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் அண்ணல் காந்தியடிகள் என்பதை நாடும் நாமும் நன்கறிவோம். 

மேலும் சிலரது இல்லங்களில்மனைவிமார்கள் வேலை பளுவின் காரணமாக  தங்களது கணவரை அழைத்து "உப்பு" ஐ  எடுத்துதரும்படி கேட்க  அங்கு அவர்கள் அது இருக்கும் இடம் தெரியாமல் அசடு வழிந்து நிற்பதை வீடுகளூம் வீட்டில் உள்ளவர்களும் நன்கறிவார்கள்.

சீரிய சிம்மாசனத்தில் சிறப்புற அமர்ந்து ஆட்சி செய்யும் உப்பின் மாட்சியை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire