jeudi 2 octobre 2014

இன்று ஒரு தகவல்( அஹிம்சைஅரசர் மகாத்மா காந்தி)


இன்று ஒரு தகவல்

 

 அஹிம்சைஅரசர் மகாத்மா காந்தி

இந்தியா என்ற ஆலமரத்தின் ஆணிவேர்
அஹிம்சை என்னும் மந்திரத்தின் மூலம்
முதல் மக்கள் இயக்கப் போராட்டமாக கருதப்படும் ஒத்துழையாமை இயக்கத்தின் மக்கள் இதயம்
"ஹே ராம்" என்னும் மந்திரத்தை மனதுக்குள் ஓதிய ஓர் ஆத்மா!
ஆம், அவர்தான் மகாத்மா காந்தி. அவரது பிறந்த தினமான இன்று(அக்டோபர் 2ந்தேதி)
அவரைப் பற்றிய நிகழ்வுகளை நினைவு கூறுவோம்  இன்று ஒரு தகவல் மூலம்.

மகாத்மா காந்தி



மகாத்மாஎன்ற சொல் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் படித்தவர்களால்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், எல்லாவற்றையும்விட வாஞ்சையானது, அலாதியானது காந்தி தாத்தாதான். ஏனெனில், மகாத்மாக்கள்மகான்களைவிட நாம் எல்லோரும் அதிகம் நெருங்குவது நம் தாத்தாக்களிடம்தானே!

காந்திக் கணக்கு


காந்திக் கணக்கு  இந்தச் சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. தனது ஆசிரமத்துக்கு வரும் நிதிகளுக்கெல்லாம் காந்தி துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பார். எனவே, துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பதையும் முன்பு காந்திக் கணக்குஎன்ற சொல் குறித்தது.

அந்தக் காலத்தில், காந்தியப் போராட்டங்களில் கலந்து கொள்ளப்போகும் தொண்டர்கள் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு, ‘காந்திக் கணக்குஎன்று சொல்லிவிட்டுச் செல்லுவார்கள். தேசத்துக்காகப் போராடுபவர்களுக்கு காந்திக் கணக்குஒரு சலுகையாகவே அப்போது பார்க்கப்பட்டது.

தற்போது கட்டணங்களையோ விலையையோ கடனையோ கொடுக்காமல் தப்பிப்பவர்கள் காந்திக் கணக்குஎன்று சொல்லிவிட்டுச் செல்வதுண்டு. முன்பு, சேவைக்கான சலுகையாக இருந்தது, இன்று ஏமாற்றுபவர்களின் வாசகமாக ஆகியிருக்கிறது.

மது


"குடி"யால் நாடே இப்போது நோயாளியாகிவிட்டது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு மதுவை பற்றி காந்தியடிகள் எழுதியவற்றின்
ஒரு பகுதி இதோ!

மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம். 

அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடிநோயாகத்தான் பார்க்க வேண்டும்.

புரட்சி என்றால் ஆயுதமேந்தித்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும்.



இந்தியாவின் தேசியகீதம்


அனைவராலும் அண்ணல் என்று போற்றப்படும் காந்தியடிகளுக்கு "மகாத்மா" என்னும் பட்டத்தை வழங்கியவர் யார் தெரியுமா?
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய  இரவீந்திரநாத் தாகூர் என்பதை இங்கே நினைவு கூறுவோம்.

தியாகிகள் தினம் 


காந்தியடிகளின் நினைவு  நாளான ஜனவரி 30ஐ
இந்தியாவில், தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் இதயமாக திகழும் மகாத்மா காந்திக்கு அவரது பிறந்த நாளில் மட்டும்
மதுக் கடைகளை அடைப்பது அவருக்கு பெருமை சேர்க்காது. நிரந்தரமாக மூடினால் மட்டுமே, மகிழ்ச்சிக் கொள்வது மகாத்மாவின் ஆத்மா மட்டுமல்ல, மக்களின் மனங்களும்தான்.

புதுவை வேலு

நன்றி:the hindu/aasai/wikipedia

Aucun commentaire:

Enregistrer un commentaire