அன்புடன் அழைக்கிறோம்!
அறிவின்
ஆற்றல் அறிவியல் என்போர்
அருந்தமிழ்
சிறப்பை அறமாய் கொள்வோர்!
ஆற்றலை
வளர்க்கும் இணையத் தமிழால்
போற்றுக
யாவரும் நம்பதிவர் திருநாள்!!!
காகம் கரைந்தே அழைக்கும் உறவாய்!
மேகம் விரைந்தே பொழியும் மழையாய்
தாகம் தீர்க்கும் தாய்மொழி தமிழால்
வருக! என்று அழைத்தே மகிழ்வோம்!
காகம் கரைந்தே அழைக்கும் உறவாய்!
மேகம் விரைந்தே பொழியும் மழையாய்
தாகம் தீர்க்கும் தாய்மொழி தமிழால்
வருக! என்று அழைத்தே மகிழ்வோம்!
அறிவுச்
சுடரே வாரீர்! அகம் மகிழக் காணீர்!
வலைப்
பூக்களின் பூங்கா "புதுகோட்டை"யாகும்
கலை விழா
காண்போம் வாரீர் வாரீர்!
விலை
மதிப்பில்லாத வருகையைத் தாரீர்!
தங்களின் பங்களிப்புக்கு வாழ்த்துகள் நண்பா...
RépondreSupprimerஅழைப்புக்கு நல்லதொரு ''பா'' கொடுத்தீர்கள் நண்பா
தேவக்கோட்டையாரின் முதல் வருகை
RépondreSupprimerபுதுக்கோட்டையில் எதிரொலிக்கும்!
சிறப்பான கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
புதுவை வேலு அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.
RépondreSupprimer
Supprimerவணக்கம் அய்யா!
தங்களது அன்பு வருகைக்கு மிக்க நன்றி!
எனது முகவரியுடன் கூடிய புகைபடத்தை
வாழ்த்துரை வழங்கிய பதிவில் வெளியிட்டு உள்ளேன் அய்யா!
நான் முகமூடி பதிவர் அல்ல என்பதை தங்களால் அறியத் தந்தேன்!
காணவும்: http://kuzhalinnisai.blogspot.com/2015/09/2015.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்களின் கவிதை அழைப்புக்கு நன்றி நண்பரே, விழாவிற்கு வருவீர்களா..?
RépondreSupprimerவாருங்கள் நண்பர் செந்தில்குமார் அவர்களே!
Supprimerவரவேற்புக் கவிதைக்கு நல் வரவேற்பு கருத்து அளித்தமைக்கு அன்பின் நன்றி!
தங்களை போன்ற நண்பர்களை காண வேண்டும் என்று ஆவல்! மதுரை வரும்போது அவசியம் வந்து சந்திக்கிறேன் நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை அழைப்பு, நம் விழாவிற்கு நாமே விடுத்துக்கொள்வது மிக அருமை. புதுக்கோட்டையில் சந்திப்போம்.
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா!
Supprimerதங்களது வருகையால் நமது வலைப் பதிவர் திருவிழா சிறப்புறட்டும்.
கவிதைக்கு வரவேற்பு அளித்தமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
விழா சிறக்க வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவலைப் பதிவர் விழா சிறக்க...
Supprimer"குழலின்னிசை" வலைப் பூ வந்து வாழ்த்து மழை பொழிந்தமைக்கு
தமிழ் அமுதம் சிந்தும் உணர்வின நன்றி உரித்தாகட்டும்!!!.
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே. தங்களின் அன்பில் திளைக்கிறோம்.
RépondreSupprimerநேரில் சநதிக்க ஆவல்..எப்போது வருவீர்கள்?
வணக்கம்!
Supprimerவிழாவின் வெற்றி முரசு செவிகளில் கேட்டு இன்புற்று மகிழ காத்திருக்கிறேன்!
வலைப் பூ வானத்தில் தேன் சிந்தும் பதிவர்கள் அனைவர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி...
RépondreSupprimerநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
காண்க : இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!
வணக்கம்!
Supprimerவலைச் சித்தர் தனபாலன் அய்யாவின்
கலை நயமிக்க உழைப்புக்கு உயர்வான நன்றி!
இணைத்தமைக்கு குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு