படம் சொல்லும் பாடம்
படம் உதவி: தினமலர்
ஒன்று பட்டு கரைகின்றோம்
ஒற்றுமை ஒலி
எழுப்புகின்றோம்
ஓரலகு பெரியது என்றோ?
மற்றது சிறியது என்றோ?
கூறாது கூடுகின்றோம்!
நிறம் பேதம்
எங்களுக்கில்லை
உயர்வு தாழ்வு
எங்களுக்கில்லை
உயர்வு தரும் சிந்தையாலே
உயரத் தான் பறக்கின்றோம்
அயராது அழைத்தால் தான்
துயர் ஏதும் இல்லாது
உணவு உண்ண வருகின்றோம்!
உணர்வு கொள் மனிதா!
கர்வத்தை கலைத்து விடு
உலகம் உன் கையில் !
புதுவை வேலு
(படம் உதவி: தினமலர்)
வணக்கம்
RépondreSupprimerஐயா
எம் மனித இனம் இந்த பறவையிடம் இருந்தாவது ஒற்றுமையை கற்கட்டும்..
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்றது கை மண் அளவே என்பதை
RépondreSupprimerஉணர்ந்தால் ஒற்றுமை ஓம்பும் உள்ளம் உருவாகும்.
நன்றி கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் நண்பரே! மனித மனம் குழந்தையின் தூய மனத்தை போல சுத்தமாக இருந்தால் ஒற்றுமை உயராது??
RépondreSupprimerகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுதானே நண்பரே!
Supprimerஓற்றுமை ஒங்கி உயர வேண்டும்! ஒவ்வாமை ஒழிய வேண்டும்.
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அழகிய படம். படத்திற்கான கவிதையும் மிக அருமை.
RépondreSupprimerபடம் சொல்லும் பாடத்தை பார்த்து
Supprimerபாரட்டுக் கருத்தை வடித்த
நமது நண்பருக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
‘ஒன்று பட்டாலுண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.’ என்ற தேசியக்கவியின் கருத்தை காண்கிறேன் உங்கள் கவிதையில். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
RépondreSupprimerபாரதியின் சிந்தையை சொல்லி
Supprimerசிறப்பித்த அய்யா அவர்களுக்கு
அன்பின் நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
காக்கை மனிதனைவிட அறிவிற் குறைந்து இருப்பதால்...அறிவிற் சிறந்த மனிதர்கள் காக்கையின் பண்புகளை பின்பற்றமாட்டார்கள் நண்பரே...."நிறைகுடம் ததும்பாது - குறைகுடம் கூத்தாடத்தான் செய்யும்...
RépondreSupprimerஉயரந்தவர் என்ன?
Supprimerதாழ்ந்தவர் என்ன?
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உணர வேண்டியவர்கள் உணர வேண்டும் தோழரே!
வருகைக்கும், வாக்கினை வழங்கியமைக்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றது.
RépondreSupprimer"கல்லாதது உலகளவு"
RépondreSupprimerஉண்மைதான் முனைவர் அய்யா!
குறை குடங்கள் நிறை குடங்கள் ஆவதற்கு
முயற்சி செய்ய வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerபாராட்டுக்கு மிக்க நன்றி!
தங்களது உடல் நிலை நலந்தானே?
அன்புக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையும் படமும் அருமை!
RépondreSupprimerத ம 6
வணக்கம் நண்பரே!
Supprimerவருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒன்று பட்டு கரையும் காக்கா கூட்டம் ஒற்றுமைக்கு அழகு சரிதான், (ஆனால் மனிதர்களை காக்கா கூட்டம் என்கிறார்களே அது என்ன?). நல்ல படம் சொல்லும் பாடம் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
வணக்கம் நண்பரே!
Supprimerவருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வைக்கிறியள்
RépondreSupprimerசிந்திக்க வைக்கும் பதிவு
http://www.ypvnpubs.com/
வணக்கம் நண்பரே!
Supprimerவருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் அருமை கவிதையும் அருமை
RépondreSupprimerவணக்கம் அய்யா!
Supprimerவருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு