samedi 31 octobre 2015

"புதுச்சேரி விடுதலை நாள்"
தாய் மண்ணே வணக்கம்

எழில் ஏந்தி நிற்குது காணீர்
பொழில் சிந்தி புதுச்சேரி இந்நாளில்!
அருள்நிறை அலை கடல் பாரீர்
அன்னைபூமி புதுச்சேரி விடுதலை நாளில்!

அமுதமொழி அருந்தி பா படைத்தார்
குமுத விழிக்கோர் குடும்ப விளக்கானார்
உயிருக்கு நேர் தமிழை வைத்தார்
பாவேந்தர் பிறந்தமண் புதுவை வாழி!

மறைவிடம் மாகவி பாரதிக்கு தந்தபூமி
குறையில்லாத குபேர் வாழ்ந்த பூமி
நிறை நிலவாய் அரவிந்தர் நின்ற பூமி
திரைகடல் தாண்டி புகழ் வென்ற பூமி

ஆரோவில் அரிக்கமேடு ஆராய்ச்சிக் காணீர்
அரும்புகழ் ஆன்மீக பூமி புதுவைக்கு வாரீர்!
பன்முக கலாச்சாரம் ஓங்கி சிறக்கவே
இன்பமுடன் வாழ்த்துவோமே! விடுதலைநாளில்.
புதுவை வேலு


"புதுச்சேரி விடுதலை நாள்"     

முதல்வர் ரங்கசாமி அவர்கள்

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த நாள் 1954ம் ஆண்டு,  நவ.1ம் தேதி.

இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கு, 1962ம் ஆண்டு, ஆக.16ம் தேதி தான் பிரான்ஸ் அரசு ஒப்புதல் அளித்தது.

அன்று முதல்  அந்த நாளையே (ஆக. 16ம் தேதி) புதுச்சேரி சுதந்திர தினமாக கடந்த 52 ஆண்டுகளாக கொண்டாடி வந்தனர்.

ஆனால், புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நவ. 1ம் தேதியை,  விடுதலை நாள் விழாவாக கொண்டாட வேண்டும் எனறு பல்வேறு அமைப்புகள் மற்றும் தியாகிகள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதால்,
இது குறித்து ஆய்வு செய்ய,  அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தாவூது அன்னுசாமி அவர்கள் தலைமையில் ஒரு  குழு அமைக்கப் பட்டது.

 அந்த குழுவின்  பரிந்துரையை ஏற்று,   நவ. 1ம் தேதியை,  "புதுச்சேரி விடுதலை" நாளாக கொண்டாடப்படும் என்றும்,  அன்றைய தினம்,
 புதுச்சேரி அரசு விடுமுறை தினம் என்றும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்து உத்தரவிட்டார்.

அதன்படி 52 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2014)
முதல் முறையாக விடுதலை நாள் விழா கொண்டாடப் பட்டது. 

இரண்டாவது ஆண்டாக 2015  நவ. 1ம் தேதி, புதுச்சேரியில் 
"விடுதலை நாள் விழா" இப்பொழுது கொண்டாடப் படுகிறது. 

புதுச்சேரி விடுதலை நாள் விழா இந்த ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடுவதால் புதுச்சேரி விழாக்கோலம் பூண்டுள்ளது.

 அரிக்கமேடு
கடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்று! 
அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியானதொரு துறைமுகமாக புதுவை அரிக்கமேடு விளங்கியிருக்கிறது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம்.

கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. 

அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 
1769-ல் நூலாக வெளியிட்டார். 

ஆயி மண்டபம்.புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயி மண்டபம்.
கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கூட்டு அழகுடன் கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எதற்காகக் கட்டப்பட்டது என்பது நம்மில் பெரும்பாலானவருக்குத் தெரியாது.
இதற்குப் பின்னால் ஒரு வரலாறு உண்டு.

16-ம் நூற்றாண்டுவாக்கில் தென் இந்தியாவின் பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
அந்தச் சமயத்தில் அவர் தனது ஆட்சி இடங்களைப் பார்வையிட விரும்பினார். அப்படிப் பயணம் செல்லும் வழியில் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயிலைப் பார்த்துப் பிரமித்துப் போய்க் கைகூப்பி வணங்கியுள்ளார். கிருஷ்ணதேவராயரின் இந்தச் செயல் அங்கிருந்து மக்களுக்கு வியப்பாக இருந்தது. இளைஞர்கள் சிலர் மறைந்து லேசாகத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ஒரு முதியவர் மட்டும் அரசனிடம் தயக்கத்துடன், “நீங்கள் கைகூப்பி வணங்கும் இந்த இடம் கோயில் இல்லை. அது ஒரு தாசி இல்லம்என்றார். அரசருக்குக் கோபமும் அவமானமும். அந்த மாளிகையை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார்.

கோயிலுக்குரிய அமைதியுடனும் அழகுடனும் மிளிர்ந்த மாளிகையின் உரிமையாளர் ஆயி என்னும் தேவதாசி ஆவார். அவர் அந்த மாளிகையைப் பார்த்துப் பார்த்து அழகுறக் கட்டியிருந்தார். அரசர் தன் மாளிகையை இடிக்க உத்தரவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தான் நேரில் சென்று முறையிட்டால், அரசர் மனம் இறங்குவார் என நினைத்தார். அதுபோல அரசனிடம் சென்று, “தயவுகூர்ந்து மாளிகையை இடிக்க வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

கடைசியில் ஒரு வழியாக மாளிகையை இடிக்க ஆயி ஒத்துக்கொண்டார். ஆனால் தான் ஆசையாகக் கட்டிய மாளிகையைத் தானே இடிப்ப தாகவும், அதற்குக் கால அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அதை அரசர் ஏற்றார்.

அரசன் ஆணைப்படி ஆயி தனது மாளிகையை இடித்தார். ஆனால் அந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது சொந்தச் செலவில் ஒரு ஏரியை, உருவாக்கினார். அந்த ஏரி அன்றிலிருந்து இன்று வரை புதுவை மக்களுக்கு முக்கியமான நீராதாரமாக இருந்துவருகிறது.

அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் வேரூன்றினர். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் புதுவையில் எங்கும் உப்புநீர்தான் கிடைத்தது. தண்ணீர்ப் பிரச்சினை பிரெஞ்சுக் காலனி ஆட்சியாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்ப்ஸ் பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் புதுச்சேரி வந்தார்.

அவர் ஆயி வெட்டிய முத்தரையர்பாளையம் ஏரியில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். ஆயி ஏரியிலிருந்து அக்கால்வாய் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவையின் நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்ததால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மகிழ்ச்சி.

ஆயி குளத்தின் பின்னணி குறித்து பிரெஞ்சு அரசர் மூன்றாம் நெப்போலியனுக்கு தெரியவந்து அவர் ஆச்சரியம் அடைந்தார். தாசி குலத்தில் பிறந்து தனது விருப்பமான மாளிகையை மன்னர் உத்தரவால் இடித்துவிட்டு மக்களுக்காக ஏரியை வெட்டிய ஆயியின் சிறப்பை பிரெஞ்சு அரசர் வியந்தார். ஆயிக்குச் சிறப்புசெய்ய அரசர் விரும்பினார். அதன்படி ஆயிக்கு நினைவு மண்டபத்தை எழுப்பினார்.

வெள்ளை நிறத்தில் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தைச் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. மக்கள் தொண்டு மூலம் பல நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நினைவில் வாழும் ஆயியின் நினைவு மண்டபம்தான் சுதந்திரம் பெற்ற புதுவையின் அரசு சின்னமாகவும் ஆகியிருக்கிறது.
 


 தகவல்

புதுவை வேலு

நன்றி: பட உதவி இணையம்/YOU TUBE

25 commentaires:

 1. வாழ்த்துக்கள் நண்பரே
  தம 1

  RépondreSupprimer
  Réponses
  1. புதுச்சேரி விடுதலை நாள் வாழ்த்து தெரிவித்து கருத்து தெரிவித்த
   நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு புதுவை மக்களின் சார்பில்
   குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. வரலாற்றுடன் கூடிய அறிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
  த ம 2

  RépondreSupprimer
  Réponses
  1. வரலாற்று சிறப்பு வாய்ந்த,
   "புதுச்சேரி விடுதலை நாள்" பதிவுக்கு
   முத்தாய்ப்பான கருத்தினை குழலின்னிசையின் மூலம் இட்டுச் சென்ற
   நண்பர் S.P.செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. புதுச்சேரி என்றதும் பாவேந்தர்தான் நிணைவுக்கு வருகிறார். தகவலுக்கு நன்றி! நண்பரே...

  RépondreSupprimer
  Réponses
  1. உயிர்க்கு நேர் தமிழை வைத்து நெறி செய்த
   புரட்சிக் கவி பாரதிதாசன் பிறந்த மண்ணின்
   விடுதலை தினம் நவம்பர் 1

   அமுதமொழி அருந்தி பா படைத்தார்
   குமுத விழிக்கோர் குடும்ப விளக்கானார்
   உயிருக்கு நேர் தமிழை வைத்தார்
   பாவேந்தர் பிறந்தமண் புதுவை வாழி!

   கருத்து மழை பொழிந்தமைக்கு நன்றி தோழரே

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. புதுச்சேரிக்ழு பல முறை சென்றுள்ளேன். பல இடங்களைப் பார்த்துளேன். ஆனால் வரலாற்றை தற்போது தங்களின் பதிவுமூலமாக அறிந்தேன். வரலாற்றுரீதியான செய்திகள். நன்றி
  வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

  RépondreSupprimer
  Réponses
  1. "அரும்புகழ் ஆன்மீக பூமி புதுவைக்கு வாரீர்!"

   முனைவர் அய்யா அவர்கள் பலமுறை
   புதுவைக்கு வந்தபோதும் அறியாத வரலாற்றுத் தகவலை தந்தமைக்காக
   குழலின்னிசை பெருமை கொள்கிறது.
   பாராட்டுக் கருத்துக்கு பணிவுகலந்த நன்றி அய்யா!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. புதுச்சேரி விடுதலை நாள் பற்றிய சிறப்பு குறிப்பு வரலாற்றுப் பெருமையுடன் அருமையாக அமைந்துள்ளது.
  புதுவை பற்றிய கவிதை அழகு புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் இருப்பினும் புதுவையை பற்றி செய்திகளில்
   ஒரு சிலவற்றை மட்டுமே பதிவில் இடம்பெறசெய்து உள்ளேன் நண்பரே.
   "புதுச்சேரி விடுதலை நாள்"- பதிவுக்கு
   அழகிய கருத்து மாலையிட்டு மரியாதை செய்தமைக்கு
   நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. Réponses
  1. "மறைவிடம் மாகவி பாரதிக்கு தந்தபூமி
   குறையில்லாத குபேர் வாழ்ந்த பூமி
   நிறை நிலவாய் அரவிந்தர் நின்ற பூமி
   திரைகடல் தாண்டி புகழ் வென்ற பூமி"-
   புதுச்சேரி ,என்பதை அறிந்து, கருத்தினை
   வடித்த ,வலைச்சித்தருக்கு குழலின்னிசையின் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. புதுச்சேரி விடுதலை நாள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! சிறப்பான பகிர்வு! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. "பன்முக கலாச்சாரம்
   ஓங்கி சிறக்கவே
   இன்பமுடன் வாழ்த்துவோமே!
   புதுச்சேரி விடுதலைநாளில்"
   வருகை தந்து வாழ்த்தியமைக்கு
   நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. ஒவ்வோரு பூக்களும் வடித்த
  தேன் சிந்தும் வரிகளை ரசித்தேன் நண்பரே!
  நன்றி
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 9. அரிய தகவல்கள் தங்களால் அறிந்தேன் நண்பா மிக்க நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. புதுச்சேரி விடுதலை திருநாளின் சிறப்பினை அறிந்து
   வருகை புரிந்து, வாக்கினை அளித்து, கருத்தினை தந்தமைக்கு
   நன்றி நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. நண்பரே ! அந்த பெருமை மிகு நாளில்( 1954- நவம்பர் முதல் தேதி ) புதுவைக்கு விழாக் காண வந்திருந்தேன்! வான வேடிக்கை கண் கொள்ளாக் காட்சி! இன்றும் நினைவில் இருக்கிறது!

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் புலவர் அய்யா அவர்களே,
   இந்த பதிவுக்கு மிகவும் தேவைப்படும்
   மிகப் பொருத்தமான தகவல். தங்களைப் போன்றவர்களின் வருகை குழலின்னிசைக்கு மிக சிறப்பு!
   நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. அறிந்த தகவல்கள் என்றாலும் மீண்டும் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..

  வாழ்த்துகள்!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் அய்யா!
   தங்களை பொறுத்தவரையில்,
   தாங்கள் அறிந்த தகவலை
   மீண்டும் நினைவூட்டி மகிழ்ந்தேன்
   வருகை சிறக்க வேண்டுகிறேன்.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. புதுவையின் விடுதலை நாள் விழாவிற்கு வாழ்த்துக்கள்!

  பி.கு ஒரு முக்கிய பணி நிமித்தம் கடந்த சில நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்க.

  RépondreSupprimer
  Réponses
  1. புதுவையின் விடுதலை நாள் விழாவிற்கு வாழ்த்துக்கள் வழங்கிய உயர்ந்த உள்ளத்திற்கு இனிய நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. விடுதலை நாள் வாழ்த்துகள்......

  சில வரலாற்றுச் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  RépondreSupprimer
 14. புதுவையின் விடுதலை நாள் விழாவிற்கு வாழ்த்துக்கள் வழங்கிய உயர்ந்த உள்ளத்திற்கு இனிய நன்றி!

  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer