முல்லை
புன்சிரிப்பால் வெள்ளைக் கமலத்தில்
கொள்ளை
இன்பம் கொண்டு இருப்பாள்
குலவுகவி
மேவும் நல் உள்ளத்தில்
நிலவும்
நித்யகல்வி தந்து நிற்பாள்
அறுபத்து
நான்கு ஆய கலைகளை
கூறும்
சுவடி கரத்தில் ஏந்திநிற்பாள்
பண்ணும்
பரதமும் புனலாய் புவியில்
பரவிட
நிறைகல்வியை தந்து நிற்பாள்
வீணை
மடியேந்தி தேனை இசையாய்
அனைவருக்கும்
அருளிய கலைவாணி!
தூய
உள்ளத்து துன்பம் துடைத்தெறிந்து
ஆயகலையரசியே
அகிலத்தில் வா நீ !!!
சிறப்புக் கவிதை மிக மிக அருமை
RépondreSupprimerஇனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்
இனிய சொல்லெடுத்து இதம் தரும் கருத்தினை வாழ்த்தாக தந்தீர்கள் அய்யா!
Supprimerமனமெல்லாம் மணக்கட்டும் மதுரைத் தமிழ்!
நன்றி!
இனிய 'கலைமகள் கல்வித் திருநாள்' வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சிற்ப்பான கவிதை.
RépondreSupprimerபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
சிறப்புமிகு நாளில்,
Supprimerவிருப்பத்திற்கு விருந்தாக அமைந்த
கல்வி அன்னையின் புகழ் துதிக்கு தூண்டுதல் தரும் கருத்தினை தந்தமைக்கு,
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கலைமகளுக்கு படைத்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerகல்வியாளர் புகழ் கருத்து 'கல்வி அரசி'யின் அருள் பெற்று செழிக்கும் புவியில் சிறந்து. நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இனிய கலை மகள் தின நல் வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerதம +1
'குலவுகவி மேவும் நல் உள்ளத்தில் நிலவும் நித்ய கல்வி'யை
Supprimerகருத்தாய் தந்த கரந்தையார் அவர்களுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை! இனிய விஜய தசமி வாழ்த்துக்கள் நண்பரே!!!
RépondreSupprimerதூய உள்ளத்துடன் துன்பம் துடைத்தெறிந்து அருங்கருத்தை அமுதாய் தந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அழகான கவிதை. இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!
RépondreSupprimerத ம 4
பண்ணும் பரதமும் புனலாய் புவியில்
Supprimerபரவிட நிறைவுடன் பணி செய்து சிறந்திட
வாழ்த்துகள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கலைமகளின் மீதான கவிதைஅருமை.
RépondreSupprimerவீணை மடியேந்தி தேனை இசையாய்
Supprimerஅனைவருக்கும் அருளிய கலை மகள் வரும் நாளில்,
முனைவர் அய்யா தரும் அருங்கருத்து மகிழ்ச்சி மலராய் மனதில் மலரும்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே... வாழ்த்துகள்.
RépondreSupprimerசிந்தனை சிறகடித்து வந்து கலைமகள் கவிதையை இன்பமுடன் ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புன்,
புதுவை வேலு
வெள்ளைக் கமலத்தில், முல்லை சிரிப்பில், நித்ய நிறைகல்வியின் சுவடியை கையில், வீணையை மடியேந்தி, ஆயகலையரசியின் அன்னை கலைசெல்வியே, வர்ணிக்க வார்த்தையில்லை தம் சிந்தனை பெரிது வேலு அவர்களே சிறப்பு மிகு கவிதை.
RépondreSupprimerதுன்பம் துடைத்தெறிந்து நாம்தான் வாழ்தாக வேண்டும்.
sattia vingadassamy
துன்பம் துடைக்கும் வரிகளை
Supprimerஇன்பமுடன் இசைந்து, கருத்துப் பேழைக்குள் புகுந்து
புத்துணர்வுமிகு கருத்தினை இதயக் கமலத்தில் மலரச் செய்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரெ........
RépondreSupprimerவாருங்கள் தோழரே!
RépondreSupprimerகல்விக்கு சிறப்பினை தந்தீர்கள்
கடாட்சம் கருணைக்கு நன்றி!
ஏழினை தந்து கலைமகள் கீர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
கலைமகளுக்கு புனைந்த பா வெகு சிறப்பு ஐயா த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலைமகள் சிறப்பு நாளில்
RépondreSupprimerகவின்மிகு கருத்தினை தந்த
கவிஞருக்கு குழலின்னிசையின்
தமிழிசை நன்றி!
மிக்க நன்றி கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
கலைமகள் துதி நன்று!
RépondreSupprimerகலைமகள் துதியினை
RépondreSupprimerமதி நிறை புலவர் அய்யா
மாண்புமிகு சொல்லெடுத்து
பாராட்டியமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதை வரிகள்
RépondreSupprimerவாழ்த்துகள்
வீணை மடியேந்தி தேனை இசையாய்
Supprimerஅனைவருக்கும் அருளிய கலை மகள் வரும் நாளில்,
அய்யா தரும் அருங்கருத்து மகிழ்ச்சி மலராய் மனதில் மலரும்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு