mardi 7 juillet 2015

"எலி வளை" (சிறு கதை)







ஏங்க! வர வேண்டிய மஹாலஷ்மியே வாசல் வரை வந்துட்டாள்! 
இன்னும் என்னங்க யோசனைசட்டுபுட்டுன்னு நாம அப்பவே வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்டி குடி போக ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே?

தனது மனைவி பாக்கியத்தின் வாக்கியத்தை காதில் கேட்டுக் கொள்ளாது போலவே இருந்தார் பத்மநாபன்.
என்னங்க நான் சொல்றதை கேட்கிறீங்களா இல்லையா?
அதான்! நமக்கு வர வேண்டிய சொத்து எல்லாம் நமக்குதான்னு கோர்ட்டில் தீர்ப்பாய் வந்திடுச்சி! பணமும் கைக்கு வந்துடுச்சி!  இன்னும் என்னங்க யோசனை?

ஓ! அதுவா? 
வீடு கட்டும் விஷயத்தை நம்ம பெண் ஷண்மதி கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு நினைக்கிறேன்.
அட நீங்க வேற!
நம்ம கையில் இருக்கிறதை வைத்தே கல்யாணத்தை ஜாம்னு செஞ்சிடலாம்! பத்தாட்டி இருக்கவே இருக்கு உங்களோட  அரசு ஊழியர் ரிட்டையர்மெண்ட் பணம் பேங்க்குல!
போய் ஆக வேண்டியதை அமர்க்களமாய் ஆரம்பிங்க என்றாள்.
இரவு முழுவதும் ஆந்தையின் கண்களை அடகு வாங்கி அறுவை சிகிச்சை செய்து  வைத்துக் கொண்டவர் போல் தூங்காது விழித்தபடியே யோசித்தார்!

மனைவி சொல்லுவது நல்லதாதான் தெரியுது!
அது சரி....
‘ வீட்டைக் கட்டி பார்
கல்யாணத்தை பண்ணி பார்னு ஏன்தான்? பெரியவங்க பொடி வச்சி சொன்னாங்களோ? தெரியலை! 
அவங்க அப்ப வச்ச பொடிக்கு, நாம இப்ப தும்ம வேண்டி இருக்கே?
என்று தனக்குத் தானே தனி வசனப் பயிற்சி செய்து கொண்டார்.
கல்யாணமும், வீடு கட்டும் பணியும், அவரது வாழ்வில்....
எதிர் எதிரே குரு பெயர்ச்சி நேரத்தில், வீடு கட்டி, (கட்டம் கட்டி) விளையாடுவதை அவர் ரசித்தபோது, சட்டென்று
இந்த பிரச்சனைக்கு தக்க பதில் அவர் படித்தறிந்த செய்தியிலேயே
அவருக்கு கிடைத்து விட்டது.
அதாவது....

ஒரு நாட்டின் முக்கியமான முடிவு?
அந்த நாட்டு மக்கள் கைகளில்தான் உள்ளது!
(அட! "கிரீஸ்" நாடா?)

அதுபோல, இந்த பிரச்சனைக்கு! தனிப்பட்ட எனது முடிவு சரியாய் அமையாது.
நாட்டுக்கு மக்கள் எப்படியோ?
அதுபோல் வீட்டுக்கு? குடும்ப உறுப்பினர்கள்தான்! என்பதை நன்கு உணர்ந்தார்.

விடியல் விடிந்தது! சூரியன் சுக ராகம் பாடி அவரை எழுப்பி விட்டான் போலும்!

தனது மனைவி, மகள், மகன், இவர்களோடு பத்மநாபனும் அவர்கள்வசிக்கும் வாடகை வீட்டின் நடு வாசலில் ஆஜர் ஆனார்!
மந்திரி! மன்னிக்கவும், அவரது மனைவி சொன்ன கருத்து குரல் வாக்கெடுப்புக்கு விடப் பட்டது!
முடிவில்....

தீர்ப்பு திட்டவட்டமாய் அளிக்கப் பட்டது! அது!

"எலி வளை என்றாலும் தனி வளை  வேண்டும்"!


புதுவை வேலு

16 commentaires:

  1. Réponses
    1. நண்பா!
      தாயகத்தில் எலி வளை மன்னிக்கவும்
      தனி வளை (வீடு) கட்டி விட்டு வாருங்கள்!
      முதல் வருகைக்கு முதல் வாழ்த்து!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தனி வசனப் பயிற்சி நல்லாவே இருக்கு...!

    RépondreSupprimer
    Réponses

    1. "அது சரி....
      ‘வீட்டைக் கட்டி பார்’
      ‘கல்யாணத்தை பண்ணி பார்’னு ஏன்தான்? பெரியவங்க பொடி வச்சி சொன்னாங்களோ? தெரியலை!

      அவங்க அப்ப வச்ச பொடிக்கு, நாம இப்ப தும்ம வேண்டி இருக்கே?
      என்று தனக்குத் தானே தனி வசனப் பயிற்சி செய்து கொண்டார்."

      தனி வசனப் பயிற்சியை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. ரொம்ப பிசி...?

      ரசிக்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/07/O-my-soul-PART-1.html

      Supprimer
    3. ரசித்தேன்! பகிரவும் செய்தேன் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கதை அருமை தான்!..

    ஆயினும் - வலை என்பது மீன் பிடிப்பதற்காகும்!..

    எலி வளை ஆனாலும் தனி வளை!.. - என்று இருக்க வேண்டும்..

    RépondreSupprimer
  4. எலியின் வளையை சரியாக கண்டுபிடித்து தந்த
    அருள் நேசர் அய்யாவுக்கு அன்பின் நன்றி!

    திருத்தம் சரிவர செய்யப் பட்டு விட்டது அய்யா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. அருமையான கதை நண்பரே
    நன்றி
    தம =1

    RépondreSupprimer
    Réponses

    1. "எலியின் வளை"க்கு ,(சிறு கதை) கரந்தையார் தந்த கருத்து மலைக்கு,, மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சொந்த வீடு இருக்குன்னு மகளுக்கு நல்ல வரன் அமையவும் வாய்ப்பிருக்கே :)

    RépondreSupprimer
  7. சொந்த அனுபவம் ஏதேனும் இருக்கா?
    நண்பர் பகவான் ஜி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. கதை அருமை ஐயா! ம்ம்ம் என்னதான் இருந்தாலும் தனி வீடு என்று சொல்ல வருகின்றது....ம்ம் அதுதானே இப்பல்லா எலி வளை யானாலும் தனி வளை வேண்டும் என்று வீட்டிற்கு வரும் மருமகள் கேட்கிறாள்....

    RépondreSupprimer
  9. இன்றைய எலிகள் நாளை வளர்ந்து பெருச்சாலிகளாகும் போது வளையில் தங்குவதற்கு இடம் இருக்குமா என்பது கேள்விக்குறியே ஆசானே?
    நாளை என்பதை யார் அறிவார் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. உண்மைதான் நண்பரே!

    RépondreSupprimer
  11. தங்களது வருகையும், கருத்தும் மிக்க மகிழ்வூட்டியது.
    நன்றி புலவர் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer