mercredi 7 octobre 2015

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்























பா வேந்தர் பாட்டுத் தோட்டத்துள்
பாவிதழ் விரித்து மலர்ந்தார் காண்!

நாவிதழ்  சிந்தும்  நறுங் கவிதை
நானிலத்தில் வகுத்தார் காண்! நற்பாவலர்!


சிவப்பு சிந்தையொடு  சீர்மிகு பாடல்
சீராக யாத்தார் காண்! கல்யாணசுந்தரம்

அருவியாய் நடை பயின்று அருந்தமிழ்
அமுது படைத்தார் காண்! பட்டுக்கோட்டையார்


முத்தமிழ் சிறப்பொடு முக்கனி சுவையேற்றி
தித்திக்கும் தமிழ்  தந்தார் காண்!


எத்திக்கும் புகழ்ஓங்க! மக்கள் கவிஞருக்கு
சாத்திடுவோம் தமிழ்  மாலை!



 புதுவை வேலு
 




 http://kuzhalinnisai.blogspot.com/2014/10/blog-post_8.html

14 commentaires:

  1. காலம் மறக்காத கவிஞனுக்கு அழகான கவிதாஞ்சலி.!
    த ம 1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      காலம் மறக்காத கவிஞருக்கு
      கருத்து மறக்காமல் தந்தமைக்கு
      பொருத்தமிகு நன்றி !
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியது குறைவான காலம் என்றாலும் எழுதிய ஒவ்வொரு பாடலும் காலத்தால் அழியாதவை. அவரது நினைவு நாளில் அவருக்காக தாங்கள் இயற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்! என்றும் அவர் நம் நினைவில் நிற்பார்.

    RépondreSupprimer
    Réponses

    1. "பாசவலையில் பாடல் படைத்திட்ட கவிஞன்
      பாடுபட்டு செய்த தொழில் பதினேழு
      ஓடாக தேய்ந்ததுவே அவன் தேகம்
      முப்பதுக்குள் முடிந்ததுதான் நம் சோகம்!"

      பட்டுக்கோட்டையார் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து கருத்து பேழை வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான ஒரு கவிஞருக்கு அஞ்சலி! கவிதைவடிவில்!!!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் ஆசானே!
      குழலின்னிசையின் பல பதிவுகளுக்கு பிறகு
      தங்களது கருத்து பேழையை தந்தமைக்கு
      மிக்க நன்றி அய்யா!
      வருகை சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கவிஞருக்கு நினைவாஞ்சலி அருமை நண்பா...

    RépondreSupprimer
  5. வலைப்பூ உலகமே "புதுக்கோட்டை"யை சூழ்ந்திருக்க!
    பட்டுக்கோட்டை(யார்) நோக்கி வந்து,
    தேவக்கோட்டையார் தந்த கருத்து தேனாய் இனித்தது!

    "பட்டுக்கோட்டை பட்டுச்சேலை பங்கஜ மாமி"

    இந்நேரம் இந்த தலைப்பு உங்கள் மனதில்
    உதயமாகி இருந்தால் "குழலின்னிசை "பொறுப்பல்ல!
    நண்பா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. சிறப்பான கவிஞரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
  7. வணக்கம் நண்பரே!
    எத்திக்கும் புகழ்ஓங்க! மக்கள் கவிஞருக்கு
    சூடினாய் தமிழ் மாலை!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. ஒரு நடிகனை புரட்சி நடிகனாக்கிய..இந்த சினிமா பாடலாசிரியரை மறக்க முடியுமா?? நண்பரே...

    RépondreSupprimer
  9. வாருங்கள் தோழரே!
    சிவப்பு சிந்தையொடு சீர்மிகு பாடல்
    சீராக யாத்தார் கல்யாணசுந்தரம்.
    ஆகவே நடிகர், புரட்சி நடிகர் ஆனார் என்பதை தெளிவு படுத்தியமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு எழுதிய தமிழ் மாலை அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. மக்கள் கவிஞருக்கு மகத்தான மாலை தொடுத்து கருத்தாக
      அணிவித்த கரங்களுக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer