பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு.
ஸ்ரீமணவாள மாமுனிகள், தமது "உபதேச ரத்ன
மாலை"யில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார்:
"பெரியாழ்வாருடைய
மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு
வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ !
மனமே உணர்ந்துபார்.
ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர
நாள்தான்' என்று ஒப்புமை காண
முடியாத சிறப்பு நாள் என்கிறார்.
ஆண்டாள் பிறந்த ஆடிப் பூரத்துக்கும் திருவில்லிபுத்தூருக்கும்
குறிப்பாக அந்த நந்தவனத்துக்கும் ஒரு மகிமை உண்டு.
ஆடிப்பூர நாயகி ஆண்டாள் பாடிய
பாசுரங்களான, வேதம் அனைத்துக்கும்
வித்தாகின்ற கோதை தமிழைப் படித்தாலும், கேட்டாலும், அது நம் பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும்.
‘ கோதா’
என்றால் மாலை என்பது பொருள். பூமாலையும்
பாமாலையும் கொண்டு தமிழ் மாலை சூட்டினாள் இந்த "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி"
ஆண்டாள்.
பாடல் 21
ஏற்ற கலங்கள்
எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும்
வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே!
அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்
உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!
துயிலெழாய்
மாற்றார் உனக்கு
வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன்
அடிபணியு மாபோலே
பொருள்:
கறக்கும் நேரமெல்லாம்
பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு
உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக!
வேதங்களால் போற்றப்படும்
வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறியமுடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும்
சுடரே! துயில் எழுவாயாக!
உன்னை
எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
விளக்கம்:
"மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக்
கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல
பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா! என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும்.
வர மறுத்தால், உன்னை எங்கள்
அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது
என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்.
ஆம்!
ஆண்டாள் மாலைக்குள்
புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன்
அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை.
பகவானிடம் நம்மை
அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது
இப்பாடலின் உட்கருத்து.
பகிர்வு:
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பால் சுரக்கும் வள்ளல் பெரும் பசுவின் சிறப்பினை போன்று
Supprimerவிருப்பமிகு கருத்தினை விருந்தாக தந்த கவிஞருக்கு,
கோதை சொன்னதமிழால் கூறுகின்றேன்;
நன்றி.
நட்புடன்,
புதுவை வேலு
திருப்பாவை பாசுர விளக்கத்திற்கு நன்றி
RépondreSupprimerதிருப்பாவை பாசுரத்தின் பக்திச் சுவையை ரசித்தமைக்கு நன்றி அய்யா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான விளக்கம். நன்றி.
RépondreSupprimerதங்களது பாராட்டினை பரமனின் பாதங்களில் வைத்து போற்றுகிறேன்.
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
merveilleux.
RépondreSupprimers'il vous plaît écouter cette chanson ici.
ஆண்டாள் பாசுரத்தை தேன் மதுர கீதத்தை தங்களது திருக் குரலோசையில் கேட்டு இன்புற்று மகிழ்ந்தேன்.
Supprimerநன்றி நாளும் தொடருங்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
எளிய விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerவிளக்கம் பாராட்டி விருப்பமிகு கருத்தினை அளித்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா...
RépondreSupprimerதொடர்வதற்கும், தொய்வின்றி கருத்தினை பகிர்வதற்கும் மிக்க நன்றி நண்பா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பாடலும் விளக்கமும் சிறப்பு! நன்றி!
RépondreSupprimerதிருப்பாவை பதிவை நோக்கி பார்வையை பதித்து அழகிய கருத்தைனை வடித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தொடர்
RépondreSupprimerசிறப்பான விளக்கம்
தொடருங்கள்
திருப்பாவை பாசுரத்தின் பக்திச் சுவையை ரசித்தமைக்கு நன்றி அய்யா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு