இலக்கிய கருத்தரங்கம் -
பொங்கல் விழாநாள் : 17/01/2016
பிரான்சு
தமிழ்ச் சங்கம்
(புதுவைவேலு)
-------------------------------------------------------------------------------------------------------------------------
உள்ளத்தின் தேரோட்டம்
உணர்ச்சியின் நீரோட்டம்
உலகம் ஏற்று பாராட்டும்
பிரான்சு தமிழ்ச் சங்கம் வாழ்கஎன்று!
உள்ளத்தின் தேரோட்டம்
உணர்ச்சியின் நீரோட்டம்
உலகம் ஏற்று பாராட்டும்
பிரான்சு தமிழ்ச் சங்கம் வாழ்கஎன்று!
வணக்கம்!
உங்கள்
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இலக்கிய
கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பினை தந்தமைக்காக, எனது , (புதுவைவேலு) நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தை மகள் வருகை சிறப்புற வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் உலகு செழித்திடல் வேண்டும்.//
"பொங்கலோ/பொங்கல்" - சத்தம்
கரும்பின்
காதலி,
"சர்க்கரைப் பொங்கலாய்" இனித்திடல் வேண்டும்!
புவிமக்கள் யாவருக்கும் புதுவசந்தம் வீசட்டும்
அறுவடைத் திருநாளில் ஆனந்தம் பெருகட்டும்
தை மகளே வேண்டியதை தந்து விடு
"சர்க்கரைப் பொங்கலாய்" இனித்திடல் வேண்டும்!
புவிமக்கள் யாவருக்கும் புதுவசந்தம் வீசட்டும்
அறுவடைத் திருநாளில் ஆனந்தம் பெருகட்டும்
தை மகளே வேண்டியதை தந்து விடு
விதை
நெல்லாய் வீரத்தை மண்ணில் விதைத்து விடு!
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
*அன்பு உலவ வேண்டும் //அமைதி நிலவ வேண்டும்
*ஆனந்தம் பெருக வேண்டும் //ஆரோக்கியம் வளர வேண்டும்
*இயற்கை இடர் இனி ! இல்லாத நிலை வேண்டும்
*ஈன்றவள் துயர் துடைக்க வேண்டும் //ஈரம் மனதில் கசிய வேண்டும்
*உலகம் வெப்பமயமாதல் உலகில் தடுக்கப்பட வேண்டும்.
*ஊருக்கு உழைத்த உள்ளங்களை ஊனுருகி போற்றிட வேண்டும்.
*எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
*ஏற்றமிகு கல்வி போற்றப் பட வேண்டும்
*ஐயமின்றி அனைவரும் வாழ வேண்டும்
*ஒற்றுமை ஓங்க வேண்டும் //ஒவ்வாமை நீங்க வேண்டும் !
*ஓர்குடையில் தீவிரவாதம் ஒடுக்கப் பட வேண்டும்
*ஔவை மொழி போற்றுதல் வேண்டும் !
*ஆய்த (ஃ) எழுத்தாய் சிறக்க வேண்டும் // அஃது அடிக்கரும்பாய் இனிக்க வேண்டும்!
-தை மகளே "குழலின்னிசை"யின் குரலாய் இன்று!
பாடினேன் உனக்கோர் தமிழ்ப் பாட்டு, தாவி அணைத்திட வருவாய்!
அதைக்
கேட்டு!
-----------------------------------------------------------------------------------------------------------------
பொங்கல் திருவிழா!-
பொங்கல் திருவிழா!-
‘வீசிய விதையின் வேரில் முளைத்த...
வியர்வை
பூக்களின் இயற்கைத் திருவிழா’!
-----------------------------------------------------------------------------------------------------------------
‘இலக்கிய கருத்தரங்கில் இனி தைப் பொங்கல்’
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. (187)
-ஒளவையார்
___________________________________________________________________________
ஒரு நிலப்பரப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
காடாக இருக்கலாம், மலையாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம், மேடாக இருக்கலாம், ஆனால்? அந்த மண்ணில் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் இருந்தால்தான் நாடு வளமாகும்.

மண்ணை வளமாக்கி, மனிதர்களை நலமாக்கும்
செயல்வீரர்களே
"உழவர் பெருமக்கள்" என்கிறார்
ஔவை.
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
பாட்டுக்கோர் புலவன் பாரதியோ
இன்னும் ஒருபடி மேலாக!
கைவருத்தி உழைப்பவர் தெய்வம்
கைவருத்தி உழைப்பவர் தெய்வம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் - என்கிறார்.
உழவுத் தொழிலையும், உழவர்களையும் வணக்கத்திற்குரியவர்களாக்கி மகிழ்கின்றார் பாரதி!
--------------------------------------------------------------------------------------------------------------------------
தைப்
பொங்கல்
தைப் பொங்கல் தைமாதம் முதல் நாளில் தமிழர்களின் தனித்துவமிக்க திருநாளாககொண்டாடப் படும் பெரு நாளாகும். இதனால்தான் இதனை பெரும்பொங்கல் என்று நாம் கூறுகிறோம்.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் வேர்வை சிந்தி உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் முதல் நாளே தைப்பொங்கல் ஆகும்.
நன்றி என்னும் நன்னெறியை நல்கும் நன்னாளே தைத் திருநாள்
-----------------------------------------------------------------------------------------------------------------
தை மாதத்தின் சிறப்பு
"மார்கழியின் உச்சியில் மலர்ந்தது தைப்பொங்கல்"
- என்கிறார் பாவேந்தர்
அவரத் தொடர்ந்து கவியரசரோ!
மார்கழிக்கு பெண்ணாக
மாசிக்கு தாயாக..... பேர்கொழிக்க வந்த
பெட்டகமே தைப் பாவாய்!
-என்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
தை மாதம் பற்றிய குறிப்பீடுகள்
சங்கமித்து இருக்கின்றன.
**** தைத் திங்கள் தண்கயம் படியும் - நற்றிணை (80)
***** தைத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை 196
***** தைத் திங்கள் தண்கயம் போல -ஐங்குறுநூறு (84)
******தைத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு 70
***** தையில் நீராடி தவம் தலைப் படுவாயே! -கலித்தொகை 59
(150 பாடல்கள் கலிப்பாவினால் ஆனது
பதிப்பித்தவர்
சி.வை. தாமோதரம் பிள்ளை)
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் (1033)
இதையே கவி சக்ரவர்த்தி கம்பர்
தான் படைத்தை "ஏரெழுபது" 19வது பாடலில்..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வாரென்றே யித் தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ! இவருடனே இயலுமிதே
பழுதுண்ட கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தார்க்கே! .
-என்கிறார்.
இதைப் பற்றிய செய்தி ஒன்று!
முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பர்!
ஆனால்?
முதிர்ந்த
கவிஞர்களோ பக்குவமாய் எடுத்து கையாள்வர் என்று,
டி.எஸ்.எலியட் என்பவர் தனது வேஸ்ட் லாண்ட் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------
டி.எஸ்.எலியட் என்பவர் தனது வேஸ்ட் லாண்ட் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
-------------------------------------------------------------------------------------------------------
"ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலிருந்து இடம் பெற்ற இந்த வரிகளை...
கண்ணதாசன் "கந்தன் கருணை" படத்தில் இடம் பெற்ற
"மனம் படைத்தேன் உன்னை" பாடலில் எப்படி
பயன் படுத்தி உள்ளார் என்பதை பாருங்கள் .
------------------------------------------------------------------------------------------------------------
‘மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு ‘ - பாடலில்
மத்தள மேளம் முரசொலிக்க
வரி சங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்
-----------------------------------------------------------------------------------------------------------------
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி , தூக்கத்தில் கனவு என்றுதான் உரைத்தாள்
--------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து இதைப் பற்றி கருத்து கூறும்போது,

ஒரு பாடலை அடி எடுக்கலாம் தவறில்லை
மாறாக படி எடுக்கக் கூடாது என்பார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
வள்ளுவரின் பார்வையில் உழவு
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -(1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் அது ஏர்த்தொழிலின் பின் நிற்கிறது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்கிறார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுண்டு பின் செல்பவர் - (1033)
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே! என்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
திருக்கை
வழக்கம் என்னும் நூலில்,
கம்பர் வேளான் பெருமக்களின் கொடை குணத்தை எப்படி
சிறப்பித்துக் கூறுகிறார் தெரியுமா?
விதை நெல்லை சோறாக்கி வழங்கிய கை
அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை (3)
-என்கிறார்.
ஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும்
கடல் சூழ்ந்த
பார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை (20).
யானைப் பரிசில் தரும் கை
வென்றி தரும்
ஓ ரானை, நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்கு
சீராக நல்கும் தியாகக் கை (50)
பஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை
பார் அறிய
சங்கை இட்டுத் தள்ளாமல் தன் ஃசோற்றை வந்தவர்க்குபங்கை இட்டு இரட்சித்த பங்கயக் கை.(36)
பொன் வழங்கும் பொற்கை
நீள் உலகில்
ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை (27)
------------------------------------------------------------------------------------------------------------------------
"பொங்கலோ
பொங்கல் சங்கத் தமிழாக ஒளிருதடி!"
புத்தரிசி
பூக்காளாக // புதுப் பானையிலே
பூக்குதடி
பூத்ததை பார்க்கையிலே //புது வெல்லமாய் இனிக்குதடி
சீலமிகு செம்மொழியாய் //கோலமிட்டு மேலெழுந்து கொதிக்குதடி
ஒலிமிகு கடலலையோ //பொங்கல் வாழ்த்து இசைக்குதடி
கரும்புவில் பாடத்தை
எறும்பு வந்து படிக்குதடி
வாழ்த்துச் சொல்ல...
தாழ்ந்துவானம் தரையிறங்கி நடக்குதடி !
பொங்கலோ பொங்கல்
சங்கத் தமிழாக ஒளிருதடி!
-----------------------------------------------------------------------------------------------------------------
மாட்டுப்
பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.
‘பொங்கலோ பொங்கல் ! மாட்டு பொங்கல்
பட்டி
பெருக, பால் பானை பொங்க !
நோவும்
பிணியும் தெருவோடு போக’
என்று
கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு
நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை பொங்கலும், ஜல்லிக்கட்டும் என்றால் அது மிகையாகாது.
உழவுக்கும், தொழிலுக்கும் பயன் பட்ட மாடுகள், வீரத்தை வெளிப்படுத்த பயிற்சியளிக்கபட்டு, அதோடு வீரவிளையாட்டு விளையாடுவதுதான் ஜல்லிக்கட்டு..
மனிதனுக்கு எப்படி விளையாட்டு வல்லமையும்,
உடல்
நலத்தையும் கொடுக்கிறதோ, அப்படியே ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு வல்லமையும், உடல் நலத்தையும் கொடுக்கிறது.
நமது இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளை காட்டுகிறது அத்தகைய காளைகளை அடக்க முற்ப்படும் வீரர்களின் வீரத்தை பறை சாற்றுகிறது.
இதுபற்றிய நிகழ்வுகளை சங்க இலக்கிய நூல்கள் பாடல்களாக பதிவு செய்து உள்ளன.
ஏறு தழுவதல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்கள் உண்டு.இதன் பழைய பெயர் பழந்தொல்குடிகள் என்பதே.
‘மஞ்சு விரட்டு’ எனப்படும் மாடு பிடிக்கும் விழா தமிழ்நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது.
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் முல்லைக்கலி எனும்
பகுதியில் ஆயர்கள் எப்படி காளைகளை
அடக்கினர் என்பதையும் அந்த வீர இளைஞர்களைத் திருமணம் புரியஆயர்குல அழகிகள் எப்படி அணி வகுத்து நின்றனர்
என்பதையும் மிகவும் அற்புதமாக
விளக்கியுள்ளான் கவிஞன்.
“எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவமாலை போல குருதிக்கோட்டொடு குடல் வலந்தன
கோட்டொடு சுற்றிக்குடர் வலந்த எற்றின் முன் ஆடி நின்று,
அக்குடர் வாங்குவான் பீடு காண்
செந்நூற் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை
முந்நூலாகக்கொள்வானும் போன”
--முல்லைக்கலி (கலித்தொகை)
(சிவபெருமான் சூடிய மாலை போல சிவப்பு நிறக் குடல்கள் அந்தக் காளையின் கொம்புகளில் சுற்றிக்கிடக்கின்றன. அப்பேற்பட்ட காளையின் முன்பு நின்று ஆடி கொம்புகளைப் பிடித்து அந்தக் குடல்களை முந்நூலாக அணியும் சிறப்பைக் காண்பாயாக!)
சிறப்பு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை' மறுமையிலும்
புல்லாளே, ஆயமகள்"
- (கலித்தொகை)
உலகில் தமிழர்களைத்தவிர இந்த வீர விளையாட்டை இன்றும் நடத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். காளை மாட்டுடன் சண்டையிடுதல் (Bull Fighting) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது.
"சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லாதவன் "
-என்பார்கள்.
அதாவது சல்லி என்பது ஜல்லிக்கட்டு விழாவின்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் வளையத்தை குறிக்கும்.
அதாவது சல்லி என்பது ஜல்லிக்கட்டு விழாவின்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் வளையத்தை குறிக்கும்.
பல ஆண்டுகளூக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்னும்
நாணயத்தை ஜல்லிக்கட்டின்போது துணியில் முடிந்து மாட்டின் கொம்பில் கட்டும் வழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரர்களுக்கு அந்த பண முடிப்பு
சொந்தமாகும்.
இந்த
பழக்கம் பிறகாலத்தில் சல்லிக்கட்டு என்று மாறி,
தற்போது
ஜல்லிக்கட்டு என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------
காணும்
பொங்கல்
மனித
மனங்களின் மாண்பினை சொல்லும் நன்னாள்.
சுயநலத்தின்
சுயம்பு சூரியனால சூரியனால் சுட்டெரிக்கப்பட்டு,
அன்பின் ஆசி வேண்டி பெற்றோர்களை, ஆன்றோர்களை, சான்றோர்களை, நன்றிக்குரியவர்களை கண்டு வணங்கி வாழ்த்தினை பெறுகின்ற பெருமைகுரிய நாள் காணும்
பொங்கல்.
வாழியாதன்! வாழியவினி!
நெற்பல
பொலிக! பொன் பெரிது சிறக்க
பால்பல
ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர்
புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!
அறம்நனி
சிறக்க! அல்லவை கெடுக!
நன்று நனிசிறக்க! தீதில்லாகுக!
அரசுமுறை
செய்க! களவில்லாகுக!
மாரிவாய்க்க! வளம் நனி சிறக்க!
-- (ஐங்குறுநூறு )
என்று சொல்லி,
என்று சொல்லி,
அனைவருக்கும்
மீண்டும் ஒரு முறை நன்றியினை சொல்லி,
வணங்கி விடைபெறுகின்றேன்.
நன்றி!
வணக்கம்.
- புதுவை வேலு
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துகள் நண்பா பிரான்சு தமிழ்ச்சங்க விழா புகைப்படங்கள் கண்டேன் விளக்கங்களும் ஆத்திச்சூடியும் அருமை மென்மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துகளும்
RépondreSupprimerவல்லமை பொருந்திய வாழ்த்துக்கு வளமான நன்றி நண்பா
Supprimerஇதனிடையே பதிவுகள் குறித்த நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உயிர் எழுத்துக்களால் அர்ச்சனை மிகவும் அருமை... பாராட்டுகள்... வாழ்த்துகள்...
RépondreSupprimerவணக்கம் வலைச்சித்தரே,
Supprimerதமிழ் அர்ச்சனைக்கு வாழ்த்து தாம்பூலம் வழங்கியமைக்கு
அமிழ்தினும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆகா..தமிழ்ப்பொங்கல் விழாத் தொகுப்பில் எங்களை ஃபிரான்சுக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் நண்பரே! கவிதைகளும் பொருத்தமான பிற விளக்கக் கவிதைகளும் அருமை! கண்ணதாசன் ஆண்டாளின் திருப்பாவையைத் தழுவி எழுதியதுபோல ஔவையாரும் “நாடாகொன்றோ..” புறநானூற்றையும் எழுதியிருக்கிறார் என்பதும் மற்றொரு செய்தி. அந்தப் பா முற்றிலும் ஒரு மொழிபெயர்ப்பே! இதுபற்றித் தனிப் பதிவுதான் எழுத வேண்டும். அன்றைய -சங்ககால-புலவர்களும் பன்மொழியறிந்தவர்கள்தான்! அதைத் தம் பாக்களில் மிக நாகரிகமாகக் கையாண்டவர்கள்தாம்!
RépondreSupprimerவணக்கம் அய்யா,
Supprimerதங்களது வாழ்த்தும், பாராட்டும் நேரில் பெற்றதுபோல் ஒரு உணர்வு.
நிச்சயம் அது தாங்கள் வரும்போது நிகழ வேண்டும். தங்களது இலக்கிய விளக்கம்
குறித்த தனி பதிவை குழலின்னிசை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
வருகை வெகு சிறப்பு! நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
விழாத் தொகுப்பினை அளித்துள்ள விதம் அருமை. நல்ல பொருண்மை. அழகான வாசிப்புகள். தங்களது எழுத்துப்பணியும் பேச்சுப்பணியும் மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா,
Supprimerதங்களது வாழ்த்தினை வணங்கி ஏற்கிறேன்.
பக்குவப் படுத்தும் பாராட்டு, பலிக்கட்டும் தங்களது தமிழ் வாழ்த்து!
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerவாழ்த்துக்கள்
தம +1
சிறப்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்கு வழங்கியமைக்கும் நன்றி நண்பரே
Supprimerதொடர்க...
நட்புடன்,
புதுவை வேலு
நண்பர் புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படிப்பேன். கடல் கடந்தும் தமிழ் வளர்க்கும் பிரான்சு தமிழ்ச் சங்கம் வாழ்க!
RépondreSupprimerவாருங்கள் நண்பரே,
Supprimerமீண்டும் படித்து, இடித்துரைக்கும் கருத்துக்கள் எங்கேனும் இருப்பின் திருத்துங்கள்
தெளிவுறுவேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் நண்பர் தி.தமிழ் இளங்கோ அவர்களே, வருக!
RépondreSupprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில்,
இலக்கிய கருத்தரங்கில் ஆற்றிய எனது உரையை,
மிகவும் கருத்தூன்றி படித்து, வாழ்த்தினை வழங்கி சிறப்பித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பொங்கல் திருநாளில் பிரான்சு தமிழ் சங்கம் நடத்திய இலக்கிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தாங்கள் உரையாற்றியமைக்கு வாழ்த்துக்கள்! கடல் கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றுவது கேட்டு மிக்க மகிழ்ச்சி.படங்களும் பாடல்களோடு கூடிய விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்!
RépondreSupprimerமெல்லிய வார்த்தைகளால் சொல்லிய பாராட்டு
Supprimerதுள்ளிக் குதித்திடாது, அள்ளி அமுதாக பருகி நின்றேன்
வாழ்த்தினை வணங்கி உருகி நின்றேன்.
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
இலக்கிய மன்ற உரை அருமை.
RépondreSupprimerதேவையான நிகழ்ச்சிக்கு ஏற்ற பொருளைக்கொண்டு பெருமை சேர்த்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள். இலக்கிய சுவை தூக்களே, எடுத்துக்காட்டு விளக்கம் சபாஷ்.
உள்ளதை உள்ளபடி உலகுக்கு உரைக்கும் கருத்தாய் ஏற்கிறேன் நண்பரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் நண்பரே!
RépondreSupprimerதளிர் போன்ற எனது உரையை துளிர்க்கச் செய்யும் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் அருமையான கவிதைகள்.
RépondreSupprimer
RépondreSupprimerவாருங்கள் நண்பரே,
இனிய பாராட்டுக்கு
இதயத்து நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு! அனைத்தும் முத்துக்கள்!தங்களுக்கு வாழ்த்துகள்!
RépondreSupprimerமுத்துக்கு முத்தாக,
RépondreSupprimerசொத்துக்கு சொத்தாகவே,
புலவர் அய்யா அவர்களே
தங்களது கருத்தினை ஏற்று கவனத்தில் கொள்வேன்.
மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல பதிவு ஐயா. பல தகவல்களை அறிந்தோம். மீண்டும் வாசிக்க வேண்டும். மிக்க நன்றி. வாழ்த்துகள்
RépondreSupprimer