lundi 11 janvier 2016

‘கூடாரவல்லி விழா’திருப்பாவை பாசுரம்:27


ருக்குமணி கல்யாணம்,   சீதா கல்யாணம்,  ஆண்டாள் கல்யாணம் வைபவங்களில், ஆண்டாள் - அரங்கர்  கல்யாணம் உயர்வானது.
திருமால் கிருஷ்ணராக மானிட அவதாரம் எடுத்தபோது,
லட்சுமி ருக்மணியாக அவதாரம் எடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
இராமராக அவதாரம் எடுத்தபோது, சீதையாக மானிடப் பிறவி எடுத்து வந்து திருமணம் செய்து கொண்டார்.
மானிடரும், மானிடரும், திருமணம் செய்வது புதுமை அல்ல.
ஆனால், ஆண்டாள் மனிதப் பிறப்பெடுத்தாள்? அர்ச்சாவதார (சிலை) ரூபமான ரங்கநாதரை எழுந்து வரச் செய்து திருமணம் செய்து கொண்டாள்.
மானிட அவதாரம் எடுத்தவர் தெய்வத்தை திருமணம் செய்வது என்றால் அதற்கு எவ்வளவு கடுமையான பக்தி செலுத்திருக்க வேண்டும்? அதனால்,
பூதேவியான ஆண்டாள் உயரந்தவள். ஆண்டாள் கல்யாணமும் மிக உயரந்தது.

பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!
உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.
அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக!
கையில் அணியும் சூடகம்,
தோளில் அணியும் பாஹுவலயம்,
காதில் அணியும் தோடு,
கர்ணப்பூகாலில் அணியும் பாடகம் - ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு.

புத்தாடைகளை வழங்கு, பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.


விளக்கம்:
"கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி" என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும்.

இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம்.

சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.

விரதத்தின் ஆரம்பத்தில் நெய்,  பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள்இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள்.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும்.

"கண்ணா!  உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம்.
இதுவே! நித்ய சுகம்.
இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு! என வேண்டுகிறார்கள்.

                                                                      ஆஞ்சநேயர்

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!
இது! திருப்பாவையின் 27 வது  தித்திக்கும் பாசுரம்.
இது சொன்னால் நாக்கில் நீர் ஊறும்! சர்க்கரைப் பொங்கல் பாசுரம்.
எதிர்த்து போராடுபவர்களை ஜெயிக்கக் கூடிய பரமாத்மாவான
உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
- பரிசு என்கிறாள் ஆண்டாள்.
என்ன பரிசு..?
நாடு புகழும் பரிசினால் நன்றாக’- ஊரெல்லாம் கொண்டாடி, பல பேர் முன்னிலையில் கொடுக்கப்படும் பரிசு.
எல்லோரும் அதை ஆமோதிக்க வேண்டும்.
யார் யாரோ பரிசு வாங்கிக் கொள்கிறார்கள்!
ஒன்றும் இல்லாதவர்களுக்கெல்லாம் பரிசு கிடைக்கிறது என்கிற வார்த்தையே வரக் கூடாதாம்.
எந்த அபிப்ராய பேதமும் இல்லாமல் எல்லோரும் ஆமோதிக்க உயர்ந்த சபையில் கொடுக்கபடும் பரிசு. அப்படிப்பட்ட பரிசை பெற்றவர்கள் யார் ? ஒருவன் தான்.
அவன் யார்..? என்ன பரிசு..?

அவன் "ஆஞ்சநேயன்".

அவனுக்குக் கிடைத்தது போன்ற பரிசு யாருக்குக் கிடைக்கும்!

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஊரே திரண்டு நிற்கிறது. தேவலோகம் எல்லாம் இறங்கி வந்துள்ளது. சாகேதபுரி கோலாகலமாக இருந்தது.
அப்போது சீதாபிராட்டி தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை கையில் வைத்துக் கொண்டு யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசனை செய்தாள். மனதில் ஒருவனை நினத்துக் கொண்டே ராமனைப் பார்த்தாளாம்.

எவனிடம் தேஜஸ், தைர்யம்புகழும், திறமையும், வல்லமையும், அடக்கமும், நீதியும், ஆண்மையும்அறிவும் என்றும் விளங்குகின்றதோ அவனுக்கு இந்த மாலையைக் கொடு!என்றான் ராமபிரான்.

உடனே சீதை வாயு புத்ரனான ஆஞ்சநேயனுக்கு மாலையைக் கொடுத்தாள்.
பரமாத்மாவின் திருவுள்ளமும் அதே. வந்தவர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். நாடு புகழும் பரிசு அல்லவா அது..!

ராமனைத் தவிர ஆஞ்சநேயனின் மனம் வேறு எங்கும் போகாது. கண்ணும் போகாது. நாடும் நகரமும் புகழும்படியாக பரிசு பெற்றவர் ஆஞ்சநேயன்".
 


பகிர்வு:
புதுவை வேலு


16 commentaires:

 1. திருப்பாவை படித்தேன். ஆண்டாள் திருமணம் கண்டேன்.

  RépondreSupprimer
  Réponses
  1. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
   முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
   மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
   கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான்"

   ஆண்டாள் கனவு பலித்த நாள்
   ஆண்டாள் அரங்கர் திருமணம நாள்
   கூடார வில்லி அன்று வாழ்த்தியது மிகச் சிறப்பு

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. பொருளுடன் கூடிய திருப்பாவையை ரசித்து படித்தேன் சகோ நன்றி தம 2

  RépondreSupprimer
  Réponses
  1. நீண்ட இடைவெளிக்கு பிறகு
   தங்களது வருகையும், கருத்தும்,
   கண்ணுற்று மகிழ்ந்தேன் சகோ!
   நலமா?
   நல்ல நாளில் நல்லோர் கருத்து நன்மை
   நன்றி சகோ!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. Réponses
  1. வணக்கம் வலைச் சித்தரே!
   சித்திர செவ்வானம் சிரிப்பதை போன்று
   சிறந்த கருத்து சிறப்பு நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. இன்று கூடார வல்லி!..

  சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நெய் வழியும் பால் சோற்றைக் கூடி இருந்து உண்டு களித்து உள்ளம் குளிர்ந்த நாள்..

  நல்வாழ்த்துகள்..

  RépondreSupprimer
  Réponses
  1. "ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
   மூடநெய் பெய்து முழங்கை வழிவார
   கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."
   ஆண்டாள் அருளிய பாசுரத்தை பங்களித்து
   கூடார வல்லியின் சிறப்பை சிறப்பிக்கும்
   வருகை மகிழ்வு அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. கூடாரவல்லி பற்றி அறிந்தேன். விளக்கியமைக்கு நன்றி! திருப்பாவை 27 ஆம் பாசுரத்தை தங்கள் விளக்கங்களுடன் படித்து இரசித்தேன்!

  RépondreSupprimer
  Réponses
  1. கூடார வல்லி அன்று தேடிவந்து தேன் தமிழ் கருத்தை தந்தமைக்கு
   மிக்க நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. கூடாரவல்லி விழா சிறப்பு கண்டேன் நண்பரே..

  RépondreSupprimer
  Réponses
  1. வருகைக்கும்,தொடர் கருத்து மற்றும் வாக்கு அளித்தமைக்கும் நன்றி நண்பா /
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. கூடாரவல்லி - நல்விழா வாழ்த்துக்கள்.
  நன்று புதுவை வேலு அவர்களே.

  RépondreSupprimer
  Réponses
  1. ஊக்கத்திற்கும்,உள்ளார்ந்த கருத்துக்கும் நன்றி நண்பரே
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. வணக்கம்
  ஐயா.

  அற்புதமான விளக்கம் ஐயா படித்து மகிழ்ந்தேன். த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. வருகைக்கும்,தொடர் கருத்து மற்றும் வாக்கு அளித்தமைக்கும் நன்றி கவிஞரே.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer