samedi 9 janvier 2016

"திருத்தக்க செல்வம் திருப்பாவை"

 ஆண்டாள் திருப்பாவை:25




பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள் :
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே!
அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன்
உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.
அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய    திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்:
பெருமானே! உன் "குணம்' என்ற செல்வத்தை, செல்வாதிபதி லக்ஷ்மி தேவியே விரும்புகிறாள். உன்னை வேண்டி வந்தோம். எங்களுக்கு நோன்பிற்கான பறையைத் தருவாய் எனில், உனது அருட்செல்வத்தையும் தொண்டினையும் குணநலன்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவோம்! எங்கள் வருத்தம் நீங்கி மகிழ்ந்திருப்போம்.

பக்தன் பக்தி செலுத்தும் போது,  இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான்.
தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது.
"உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க
 பிரகலாதன் "தூண் என்று சொல்லவே, அதற்குள் மறைந்திருந்த பகவான்,  நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா!

தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
பெற்றதாய்க்கும் வளர்த்த தாய்க்கும் பெருமை சேர்த்தவன் கண்ணன் என்பதை ஆண்டாள் திருப்பாவையில் ஐந்தாவது பாசுரத்தில் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை என்று பாடியுள்ளாள்.
பகிர்வு:
புதுவை வேலு

14 commentaires:

  1. Réponses
    1. நல்வருகை! நலம் பயக்கும் கருத்து, நன்றி வலைச்சித்தரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆண்டாள் திருப்பாவை 25 பாசுரத்தின் பொருளை அழகாய் விளக்கியமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யாவின் அருங்கருத்து ஆண்டாள் பாசுரத்தின் பெருஞ்சிறப்பு!
      நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. விளக்கம் நன்று. படங்களையும் ரசித்தேன். பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. மின்னூல் கண்ணனாய் வந்து மின்னல் ஒளியான கருத்தினைத் தந்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆண்டாள் திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. தொடர் வருகை
      தொடர் கருத்து
      தொடர் ஆட்டநாயகர்
      நன்றி நண்பா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வல்லமை பொருந்திய வாக்குக்கு நன்றி தோழரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பாசுரத்தின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கம் பாராட்டிய வித்தக கருத்துக்கு நன்றி நண்பர் சத்யா அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. சிறப்பான விளக்கம்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே
      தங்களின் அருங்கருத்து ஆண்டாள் பாசுரத்தின் பெருஞ்சிறப்பு!
      நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer