ஆண்டாள் திருப்பாவை பாசுரம்:30
வங்கக்கடல் கடைந்த
மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து
சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை
அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார்
ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து
செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள்
பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பொருள்:
அலைகள் நிறைந்த
பாற்கடலைக் கடைந்த மாதவனும்,
கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை,
சந்திரனைப் போன்ற அழகு
முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற
விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின்
பெண்ணான ஆண்டாள்,
"இனிய தமிழில் முப்பது பாடல்" பாடி பாமாலை
தொடுத்திருக்கிறாள்.
சங்கத்தமிழ்
மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற
நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம்
உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன்
அருளைப் பெற்று இன்புறுவர்! என்று ஸ்ரீஆண்டாள்
மார்கழி
நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.
பகிர்வு:
புதுவை வேலு
புதுவை வேலு
ஆண்டாள் திருப்பாவை நன்று நண்பா
RépondreSupprimerதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா,
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஒவ்வொரு பாசுரத்தின் தலைப்பு, விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பர் சத்யா அவர்களே,
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
RépondreSupprimerவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அருளாளர் அய்யா,
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
விளக்கம் நன்று படித்து மகிழ்ந்தேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும், மிக்க நன்றி கவிஞரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு