திருப்பாவை பாசுரம்:20
வைணவப் பக்தி நூல்களின்
தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்
473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் "திருப்பாவைப் பாடல்கள்" ஆகும்.
தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்பாவையில் உள்ள முப்பது
பாசுரங்களையும் பக்தியுடன் சொன்னால் மழை பொழியும்!
பகிர்வு:
மக்கள் செழிப்புடன்
வாழ்வார்கள் என்பது வைணவப் பெருமக்களின் நம்பிக்கை.
திருப்பாவையை முழுதும் படிக்க இயலாதவர்கள் ஆன்மிக ஆச்சாரியார்
"அபிராமி பட்டர்" சொன்னவாறு,
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா
மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்ந்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
என்ற பாடலையாவது, தினமும் சொல்லி வந்தால், திருமால் அருளைப் பெறலாம்.
பாடல் 20
முப்பத்து மூவர்
அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும்
கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும்
விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச்
செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்!
திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும்
தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோ
எம்பாவாய்.
பொருள்:
முப்பத்து மூன்று கோடி
தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின்
துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக!
நேர்மையானவனே! ஆற்றல்
மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில்
எழுவாயாக!
பொற்கலசம் போன்ற
மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும்,
சிற்றிடையும் கொண்ட நப்பின்னை
பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக!
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும்
தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக!
விளக்கம்:
கண்ணனின்
திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப்
பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு
மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும்
கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள்.
விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல,
அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து!
நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும்
என்பது இதன் உட்கருத்து.
கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள
அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது.
வாழ்க்கை என்றால்
பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி
செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
// ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!//
RépondreSupprimerநூற்றுக்கு நூறு உண்மை! திருப்பாவை பாசுரம் 20 ஐ படிக்க உதவிய தங்களுக்கு நன்றி!
// ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது! //
Supprimerநூற்றுக்கு நூறு உண்மை!
உண்மையை உளமாற பாராட்டிச் சொன்னமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerநன்றி நண்பர் நாகேந்திர பாரதி, வருகை சிறக்க வரவேற்கிறேன்.
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருப்பாவை விளக்கம் அருமை, தொகுப்பாக வரவேண்டும் புதுவை வேலு அவர்களே, நன்றி.
RépondreSupprimerஎண்ணற்ற அலுவல்கள் அலைக்கழித்தாலும், அலையாய் தவழ்ந்து வந்து கருத்தால் அன்பின் கரையைத் தொட்டமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா....
RépondreSupprimerதொடர் கருத்து அளித்து வரும் அன்பின் இனிய நண்பா நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பாடலுக்கேற்ற பொருளை உணர்ந்து கொண்டேன் நண்பரே..
RépondreSupprimerதங்களது வருகையோ வசந்தம். உமது கருத்து சுகந்தம்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான விளக்கம். நன்றி.
RépondreSupprimerபடங்களும் அருமை.
பாசுரம் பருகி வரமாய் தந்த பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பாடலுக்கு ஏற்ற அழகான விளக்கம்!
RépondreSupprimerத ம 4
விளக்கம் போற்றிய வித்தக உள்ளத்திற்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வழக்கம் போல் இனிமையே! நன்றி நண்பரே!
RépondreSupprimerஇனித்திடும் கருத்து நன்றி புலவர் அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு