dimanche 13 juillet 2014

ஒரு சொல்

(ஒரு பக்க கதை)                     

சிறுகதை

 



வார விடுமுறை நாள் என்பதால் பிரசித்திபெற்ற அந்த ஹோட்டலில்.....
மாலை வேளையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அமருவதற்கு இருக்கை
கிடைக்காமல் போகவே அல்லாடித்தான் போனார் நிலவு தாசன்.உடன் வந்த
நண்பர்கள் வேறு ஹோட்டலுக்கு போகலாமே!... என்றதும் சற்றே யோசித்தவாறு...
வெளியேற முயற்ச்சித்தபோது? "என்ன சார்? "நீங்கள் எல்லாம் இந்த ஹோட்டலின்
வாடிக்கையளர்கள். இப்படி வேற ஹோட்டலுக்கு போனால் எப்படி சார்?
ஒரு நிமிஷம்
பொறுங்க...அதோ! மூலையில் ஒரு இடம் காலியாகிவிட்டது. பையா!  சீக்கிரமா ரெடி பண்ணு! "வந்தவர்களை நல்லா கவனி!!!-என்று குரலை உயர்த்தி கட்டளை போட்டார்
ஹோட்டல் முதலாளி
.இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் அமர்ந்து தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு நண்பர்களுடன் "பிளாக்" மற்றும் முகநூல் -இவற்றில் வெளியான கதை; கவிதை,கட்டுரை- போன்ற தங்களுடைய படைப்புகளை பற்றி மிகவும் மகிழிச்சியோடு
பகிர்ந்து கொண்டனர். உண்டு உறவாடியபின்பு.... முழு திருப்தியுடன்எழுந்திருக்க முயன்றார். அப்போது மேசையை சுத்தம் செய்ய வந்தவரை பார்த்ததும்
மின்சாரம் கட் ஆகியதுபோன்று முகம் இருண்டு மிரண்டுதான் போனார் நிலவு தாசன்.காரணம் ! சுமார் பத்து (அ) பண்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு ஆர்ம்ப பள்ளியில்
ஆசிரியராக இருந்தபோது.... அந்த சிறுவனை பார்த்து அவர் கூறிய "ஒரு சொல்"
ஒழுங்காக படிக்காமல்...
வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யாமல்...
சண்டித்தனம் செய்யும் சண்டிப் பயலே! - நீ ! எல்லாம் எதற்க்கும் லாயக்கு இல்லை!
ஓட்டலில் தட்டுக் கழுவவும்..... மாவாட்டுவும்தான் லாயக்கு"ஐயகோ! "மாதா! பிதா! குரு!"  தெய்வம்" என்பார்களே - பாடம் சொல்லிக் கொடுத்த இந்த குரு-வின் வார்த்தை பலித்து விட்டதா?
குற்ற உணர்ச்சி என்னும் சவுக்கு "சுளீர்!!!  சுளீர்!!-என்று தன்னை அடிப்பது போன்று
உணர்ந்தார்.
இனி ஒருபோதும் எந்த ஒரு மாணவனையும் அந்த "ஒரு சொல்"லால் இப்படி சபிக்கக்
கூடாது!
இறைவா! இது-போன்ற சாபங்களை, பாவங்களை பலிக்காமல் செய்வாயா? ...
இனியேனும்!.

புதுவை வேலு.

Aucun commentaire:

Enregistrer un commentaire