jeudi 10 juillet 2014

உண்மை



உண்மை-அது

அரிச்சந்திரன் கலத்தில்...
ஆறாய் ஓடியது.

காந்தி மஹான்

காலத்தோடு காணாமல் போனது!
ஆம்!!!-இன்று!

உண்மையே உன் நிலை என்ன?


சிலர்...
உண்ணும் உணவில்...
உண்மை இல்லை!
உறங்க வைக்கும் காற்றில்
உண்மை இல்லை!

பேசும் மொழியில்...
உண்மை இல்லை!
பார்க்கும் விழியில்...
உண்மை இல்லை!

குடிக்கும் குடி(மது)யில்...
உண்மை இல்லை!
நடிக்கும் நடிப்பில்...
உண்மை இல்லை!

படிக்கும் படிப்பில்...
உண்மை இல்லை!
துயர் துடைக்கும்...
துடிக்கும் துடிப்பில்
உண்மை இல்லை

பிறக்கும் பிறப்பில்(சிலர்)

உண்மை இல்லை!
பறக்கும் படையிடம்...
உண்மை இல்லை

திறக்கும் சாவியிடம்...
உண்மை இல்லை
துறக்கும் முனியிடம்...
உண்மை இல்லை!

உண்மையில்....
உண்மையே!!!!!-உன்னைத் தேடி
ஊர்வலம் போனால்?
சவ ஊர்வலம் மட்டுமே!
கண்ணில் தெரிகிறது.

கண்ணில் தெரியும் காட்சி!
மெய்யா? பொய்யா?
உண்மையே....
இதை மட்டுமாவது...

உண்மையில்...
சொல்லி விடு!!!

புதுவை வேலு


Aucun commentaire:

Enregistrer un commentaire