lundi 7 juillet 2014

வாராயோ காவேரி வாராயோ



காகம் தனக்கு...
தாகம் எடுத்தால்!
வாராத நீரையும்...!
வரவழைத்தே பருகும்!

ஐந்திணை போற்றும்...

ஐந்தறிவு ஜீவனின் ஆற்றலை...
இனி-அறிவியலும் உலகிற்கு-
பறை சாற்றும்!




முயற்சிக்கு வெற்றி...
முப்பொழுதும் உண்டு!
இனி ...
எப்பொழுதும் உண்டு!




ஒன்றுபட்ட இந்தியா-வில்....
ஓர் இனம் மட்டும்....
ஒன்றுபட்டு-தடை...
சொல்லுவது ஏன்?
 தமிழகத்திற்கு"

தண்ணீர் தருவதற்கு?

நீதி என்னும் நதியில்...
நாம்!
நீந்தி கரை சேர்ந்ததன்...
பொருள்தான் என்ன?

மத்தியில் ஆளூம்!
இன்றைய அரசின்....
நிலைதான் என்ன?

இந்திய தேசத்தில்...
முப்படை இருக்க.....
தனிப் படை எதற்கு?

சட்டம் தந்த தீர்ப்பை...
சட்டம் போட்டு மாட்டாமல்...
திட்டம் போட்டு செயல்பட்டால்...
தீர்வு என்பது ....
திருவண்ணாமலை ...
தீபமாய் தெரியும்.


இந்தியன் தமிழன்
நாம்...
படை கொண்டு
போரிடாமல்!
"காவேரி"
மடை திறந்து  வரவேண்டும்!
தமிழகத்தில்...
வறட்சி நீக்கி.....
பசுமை புரட்சி தர வேண்டும்
வாராயோ காவேரி வாராயோ

புதுவை வேலு









Aucun commentaire:

Enregistrer un commentaire