vendredi 12 septembre 2014

சிறுகதை "ஆத்திச்சூடி"





ஆத்திச்சூடி


 

அடுப்பங்கரைக்குள் தாவிக்குதித்து ஓடியதை அம்புஜம் பாட்டி பார்த்துவிட்டாள்.

அடேய்! எல்லாரும் எங்கே போய் தொலைஞ்சிங்க? இங்க வந்து பாருங்களேன்!

இது செய்யற அட்டகாசத்தை! இன்னைக்கு கிருத்திகை

நான் விரதம் 
ஒரு பொழுதும் கூட! அப்படியிருக்கும்போது... இது வாய் வச்சிடுச்சிசே! எனக்கு சாப்பாடு வேண்டாம்
நாள் முழுவதும் முழு பட்டினியாவே இருந்துடுறேன். என்ன சுத்த பத்தமோ தெரியலே? இன்னும் கொஞ்ச நாளைக்கு  நான் சிவனேன்னு கிடந்து என் குறை காலத்தையும் ஓட்டிடுறேன்.மயான அமைதி நிரம்பிய அந்த வீட்டில் தனது மனக்குமுறலை f M ரேடியோவாக....
ஒலிபரப்பி ஓய்ந்துவிட்டாள் அம்புஜம் பாட்டிஇதன் நதிமூலம், ரிஷி மூலம் யார்? என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகின்றது. ஆம்! அந்த வீட்டின் செல்லக்குட்டி....
பூனை  அல்ல! செல்லப் பேத்தி பூஜாவேதான்.

சாரி பாட்டி! தெரியாமல் செஞ்சிட்டேன். சாமி என் கண்ணை குத்தாது தானே? வேணுமானால் சாய்ந்திரம் நானும் உன்கூட கோவிலுக்கு வருகிறேன். வந்து...
சாமியிடம் மன்னிப்பு கேட்டு வேண்டிக்கிறேன். ஆறு வயது சிறுமியின் ஆறாவது
அறிவின் மகிமையை அறிந்து மனம் குளிர்ந்து போனாள் பாட்டி!
 பொழுது சாயும் நேரம் நெருங்கியதும், பாட்டி பூஜாவுடன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றாள்

 அர்ச்சனை, ஆராதனை
அனைத்தும் அம்சமாக நிறைவேறிய
மகிழ்ச்சியில்
கோவிலைவிட்டு இருவரும் வெளியேறினர். அப்போது பூஜா பாட்டியிடம் கேட்டாள்! பாட்டி! அர்ச்சனை செய்வதற்கு
கோவிலுக்கு வெளியே "பூ" வாங்கினியே?

ஆமாம், அதுக்கு என்ன?

அது வந்து அந்த "பூ"க்கார ஆயாவை நான் கடைத் தெருவில் அம்மாவுடன் போகும்போது பார்த்திருக்கிறேன்! அந்த ஆயாகிட்டத்தான்
அம்மா "மீன்" வாங்குவாங்க!
அந்த மீன்கார ஆயாவின் "பூ" சாமியை தொட்டிடுச்சே?
அது தீட்டு ஆகாதா?


நீ! மட்டும் நான் சாப்பிட்டதை "தீட்டு"ன்னு சொல்லுறியே ஏன் பாட்டி?




 

 பேத்தியின் பேச்சி மீன் முள்ளாய் தொண்டைக் குழிக்குள் குத்தியது.


புதுவை வேலு













Aucun commentaire:

Enregistrer un commentaire