mardi 16 septembre 2014

நற்றமிழ் புலவன் பாரதி






முண்டாசுக் கவி பாரதிக்கு  தமிழ் முடிசூட்டி, என் கவிமுகம் காண கண்ணாடி பேழை கொண்டு என் முன்னாடி வந்து நின்றார். அன்னப் பறவையின் குண அழகையொத்த வண்ணமிகு வானவில் படைப்பாளர் ஏழு வகை ஏற்புடைய திறனாளர் என் அருமை நண்பர்  திரு. ஜோச்ப் விச்சு அவர்கள் அவரது வேண்டுதலை  அவர்போல் அல்லாது  எளிய நடையில் சிறு துளிக் கவிதையாக வடிகின்றேன். "பார் போற்றும் பாரதி"யை படித்த நீங்கள் இதற்கும் கருத்து வடிப்பீர்கள்  என நம்புகிறேன். ஏனெனில் "நம்பிக்கைதான் நம் வாழ்க்கை. நன்றி!  -புதுவை வேலு.




நற்றமிழ் புலவன் பாரதி

 


நானிலம் போற்றும் நற்கவி பாரதி

பொற்கிழியின்றி புதுவையில் வாழ்ந்தே
சொற்ப தாகத்திற்கு தமிழைக் குடித்தே
கவி அமுதை அளித்தே மகா கவியானார்.


கண்ணன் பாட்டின் குழலின்னிசை பாரதி
பாஞ்சாலி சபதம் நூலின் சாரதி பாரதி
குயில் பாட்டின் குருபீடம் பாரதி
பயிலும் பாட்டை தனியாய் தந்தவன் பாரதி


மக்கள் நெஞ்சம் மகேசன் மஞ்சம்யென
பாக்கள் வடித்த மாகவி பாரதியை
பூக்கள் போல பூப்பெய்தி-தமிழ்
ஈக்கள் போல் மொய்த்திடுவோம்

புதுவை வேலு
 






Aucun commentaire:

Enregistrer un commentaire