dimanche 10 janvier 2016

"ஆலிலைக் கண்ணனே அருள்வாய்" - ஆண்டாள் திருப்பாவை

திருப்பாவை பாசுரம்:26


மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே !
கோல விளக்கே கொடியே விதானமே !
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.



பொருள்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து,  இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
இந்தப் பாசுரம் "ஸ்ரீவில்லிபுத்தூர்' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.




விளக்கம்:
பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார்.
இந்த சங்கின் கதையைக் கேளுங்கள்.
பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுர சங்கு என்பதால் தான் குருஷேத்திரக் களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
பகிர்வு
புதுவை வேலு







10 commentaires:


  1. பாஞ்சஜன்யம் என்ற சங்கின் கதையை பாங்குடன் விளக்கியமைக்கு நன்றி!
    திருப்பாவை 26 ஆம் பாசுரத்தை பகிர்ந்து விளக்கியமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நீலக்கல் நிறத்தவனே! நித்ய சுகம் தருபவனின் புகழ்பாடும்
      பாசுரத்தை பாராட்டி பதிவு செய்த கருத்து பதக்கம் அய்யா!
      நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வாக்களித்து வளப்படுத்தும் வல்லமை தந்தீர்
      நன்றி தோழர்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. பால்போல் பருகும் தொடர் கருத்து
      பனி போல் படிகிறது குளுமையாக நெஞ்சுக்குள் நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆலிலைக் கண்ணன் அருள்வார், சங்கு கதை (பாசுர விளக்கம்) அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆனந்தம் அருள்வான் ஆலிலைக் கண்ணன் என்பதை கருத்தாய் பதிவு செய்தமைக்கு நன்றி நண்பர் சத்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா.

    அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. மனதுக்குள் மத்தளம் மங்களோசை இசைக்கும்
      இனிய கவிஞரே வருகைக்கும், வாக்குக்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer