mercredi 6 janvier 2016

"தாமரைக் கண்ணன் திருத்தாள் போற்றி!" - ஆண்டாள் பாசுரம்

திருப்பாவை பாசுரம்:22

வில்லிப்புத்தூர் வடபெருங்கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு ஆண்டாள் மாலையுடன் காட்சி தருவார் வடபத்ரசாயி.ஆமாம், அனுதினமும், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை இரவு இறைவனுக்கு சார்த்தப் படுமாம். அந்த மாலையைக் களையாமல் மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருவாராம் பெருமாள். மேனி சிலிர்க்கும் மேன்மையான காட்சி இது என்பார் தரிசனம் கண்டவர்கள். 




பாடல் 22
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச் சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ எம்பாவாய்


பொருள்:


கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,  இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன்,

உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.
அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

எங்கள் மீது,  கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,  தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்க மாட்டாயா?

கிண்கிணி என்பது அரைச் சதங்கை. பாதி மூடியும் பாதி பாகம் திறந்ததாகவும் செய்யப்படும் ஓர் ஆபரணம். அதைப் போல், தாமரை மலர் பாதி குவிந்தும், பாதி திறந்ததுமாக இருந்ததாம்! கண்ணனும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்தானே! அதுவும் ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.
சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!



விளக்கம்:
இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும்.
எப்படி? அவனது பார்வையை நம் மீது திருப்புவது.
மிக எளிதாக ஆண்டாள் பாடிய "திருப்பாவை"யின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா? அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தாவிக்ரமா போன்ற எளிய பதங்களை...
அவற்றைச் சொன்னாலே போதுமே!
அவனது பார்வை பட்டுவிடும்.
மார்கழிப் பனிபோல் உள்ளம் குளிர்ந்து விடும்.

பகிர்வு:
புதுவை வேலு




16 commentaires:

  1. தமிழுக்கு நாளும் செய்யும் நற்பணி!

    RépondreSupprimer
    Réponses
    1. நல் ஊக்கம் நல்கி வரும் புலவர் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. அருமை போற்றும் பெருமைமிகு வலைச் சித்தருக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தங்கள் பதிவுகளை நாள் தோறும் படிக்கையில் மார்கழிப் பனிபோல் உள்ளம் குளிர்ந்து விடுகிறது என்பதும் உண்மை.

    RépondreSupprimer
    Réponses
    1. மனம் குளிரும் மாண்புடையோரின் மகத்தான கருத்துக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பாசுரம் நன்று தொடர்கிறேன் நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்று பாராட்டிய நற்றமிழ் நண்பா! நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. மார்கழிப் பனிபோல் உள்ளம் குளிர்ந்து விடும் - புதுவை வேலு அவர்களின் எண்ணம் பலித்தால் நன்று. அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. எண்ணியது எண்ணியபடி சிறந்தோங்க வழி நடத்தும் சிந்தனையாளருக்கு சிறப்பு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பாசுர விளக்கம் அருமை
    தம 6

    RépondreSupprimer
    Réponses
    1. வித்தக கருத்தினை விதையாய் விதைத்தமைக்கு சென்னை பித்தன் அய்யாவுக்கு அன்னைத் தமிழின் அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பாசுர விளக்கம் அருமை
    தம 6

    RépondreSupprimer
    Réponses
    1. வித்தக கருத்தினை விதையாய் விதைத்தமைக்கு சென்னை பித்தன் அய்யாவுக்கு அன்னைத் தமிழின் அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமையான படமும் விளக்கமும். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாளின் பாசுரத்தை தமிழ் மணம் வரை கொண்டு போய் சேர்த்தமைக்கு "தாமரைக் கண்ணனின் திருத்தாள் போற்றி" நன்றி நவில்கிறேன் நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer