உடல் பலவீனத்தை வெல்லும் புத்தி
கடல் அளவு நிறைந்தே நிற்கும்
உள்ளத்தில் அச்சத்தின் அலைகள் யாவும்
தைரியத்தின் கரையை தொட்டே தழுவும்
வரம் வாங்கி பிறந்தோர் எல்லாம்
திறம் ஓங்கி செழித்தார் உண்டோ?
உரமிட்டு வளர்ப்பார் துணி வுள்ளம்
ஊனத்தை வெல்லும் ஞானப் பிறவி
மாற்றுத் திறனாளி மாந்தர் மண்ணில்
போற்றும் வாழ்வு பெறவே வேண்டும்
ஏற்றம் தரும் மனவுறுதி மூச்சுக்
காற்றாய் வீசுக! அவர் வாழ்வில்
கடல் அளவு நிறைந்தே நிற்கும்
உள்ளத்தில் அச்சத்தின் அலைகள் யாவும்
தைரியத்தின் கரையை தொட்டே தழுவும்
வரம் வாங்கி பிறந்தோர் எல்லாம்
திறம் ஓங்கி செழித்தார் உண்டோ?
உரமிட்டு வளர்ப்பார் துணி வுள்ளம்
ஊனத்தை வெல்லும் ஞானப் பிறவி
மாற்றுத் திறனாளி மாந்தர் மண்ணில்
போற்றும் வாழ்வு பெறவே வேண்டும்
ஏற்றம் தரும் மனவுறுதி மூச்சுக்
காற்றாய் வீசுக! அவர் வாழ்வில்
புதுவை வேலு
செய்திகள்:
ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
"மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்ப்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவர்களை நாம் அவ்வாறு அழைக்கிறோம்.
மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்
இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது.
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.
இந்த ஆண்டில் நடைபெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.
இந்த ஆண்டில் நடைபெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.
மாற்றுத் திறனாளிகளைப் போற்றுவோம்
RépondreSupprimerபோற்றுதலுக்குரியவர்களை பற்றி பல பதிவுகள் வழங்கிய தங்களது வருகையும் கருத்தும் வணக்கத்திற்குரியது நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு திரைப்படம் ஐயா...
RépondreSupprimerமாற்றுத் திறனாளியை (சிறுவன்) மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம் அல்லவா? நண்பரே!
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நினைவு படுத்தி பதிவாக வெளியீடு செய்தமைக்கு நன்றி ஐயா. த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிவினை நினைவுகூர்ந்து நற்கருத்து வழங்கிய கவிஞருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு, அருமையான படம்!
RépondreSupprimerத ம 4
மதிப்பிற்குரிய புத்திக் கூர்மைமிக்கவர்கள் மாற்றுத் திறனாளிகள்
RépondreSupprimerஅவர்களது சிறப்பு நாளில் சிறப்புக் கருத்து வழங்கியமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மாற்றுத் திறனாளிகளை மதித்துப் போற்றுவோம்!
RépondreSupprimerபி.கு. நான்கு நாட்களாக தொலைபேசி, கைப்பேசி, இணையத் தொடர்புகள் இல்லாததால் வலையுலகம் வர இயலவில்லை.
தங்களது வருகையும் கருத்தும் வணக்கத்திற்குரியது ஐயா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு