samedi 26 décembre 2015

"ஆண்டாள் நகர் - திருவில்லிப்புத்தூர்"

திருப்பாவை பாசுரம் :11

 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்தின் உயரம் 192 அடி ஆகும்.
11- அடுக்குகளைக் கொண்டது இதன் கோபுரம். தமிழகத்தின் அரசு சின்னமாகவும் இது விளங்குகிறது. வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.


பாடல் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்!

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


பொருள்:


பத்தாவது பாசுரத்தில், ராமபிரானால் தோற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றானோ ? என்று,  எவ்வளவு எழுப்பியும், துயில் கலையாத தோழியைப் பார்த்துக் கேட்ட ஆண்டாள், பதினோராவது பாசுரத்தில், கண்ணன் திருநாமங்களை உரக்கப் பாடுகிறோம்; அது காதில் கேட்டும் சலிக்காமல் உறக்கத்தில் கிடக்கிறாயே? என்று வினவுகிறார்.
கன்றுகளோடு கூடிய பசுக்களின் கணங்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த கோபாலர்கள். அவர்கள் பசுக்களின் பாலைக் கறப்பவர்கள், எதிரிகளின் செருக்கும் வலிமையும் அழியும்படி படையெடுத்துச் சென்று போர் புரிபவர்கள். குற்றம் எதுவும் இல்லாத நற்குடியில் பிறந்தவர்கள். அத்தகைய கோபாலர்களின் குடியில் பிறந்த பொற்கொடி போன்றவளே.!
பொற்கொடிபுற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!
காட்டில் தன் இச்சைப்படி திரியும் மயிலைப் போன்ற சாயலும் கொண்டவளே.
செல்வ வளம் மிக்க பெண் பிள்ளையே. நீ எழுந்து வருவாயாக. 
நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.
அவர்கள், மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே!
இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே!
அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? என்று கூறி செல்வ வளம் மிகு நங்கையைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.


விளக்கம்:

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை!
நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு,  நீராடச் சென்றிருப்போம்.
ஆனால், பக்தி நெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு,
 தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால், அது நடக்காத ஒன்று.
எல்லோருமாய் இறைவனை நாடவேண்டும், அவன் புகழ் பேச வேண்டும்.
அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால்தான்,
"கூட்டுப் பிரார்த்தனை"க்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.பத்தாவது பாசுரத்தில், ராமபிரானால் தோற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றானோ என்று, எவ்வளவு எழுப்பியும் துயில் கலையாத தோழியைப் பார்த்துக் கேட்ட ஆண்டாள், பதினோராவது பாசுரத்தில் கண்ணன் திருநாமங்களை உரக்கப் பாடுகிறோம்; அது காதில் கேட்டும் சலிக்காமல் உறக்கத்தில் கிடக்கிறாயே? என்று வினவுகிறார்.

புற்றில் இருந்து எழுந்தாடும் பாம்பின் படம் போன்ற அல்குலையும், காட்டில் தன் இச்சைப்படி திரியும் மயிலைப் போன்ற சாயலும் கொண்டவளே. செல்வ வளம் மிக்க பெண் பிள்ளையே. நீ எழுந்து வருவாயாக. நம் சுற்றத்தினைச் சேர்ந்தவர்களும் தோழிகளும் ஆகிய அனைவரும் திரண்டு வந்து நிற்கின்றோம். உனது திருமாளிகையின் முற்றத்தே புகுந்து காத்திருக்கின்றோம். கார்மேக வண்ணன் கண்ணனின் திருநாமங்களை உரக்கப் பாடியும், அது உன்காதில் விழுந்தபோதும் அதுகேட்டும் கேட்காததுபோல் இருக்கிறாயே. இவ்வாறு நாங்கள் பாடுவதைக் கேட்டும், நீ சலிக்காமலும் ஒன்றும் பேசாமலும் உறங்கியபடி கிடப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை! என்று கூறி செல்வ வளம் மிகு நங்கையைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

பகிர்வு:
புதுவை வேலு

14 commentaires:

 1. ஸ்ரீவில்லிப்புத்தூர் எவ்வாறு உருவாயிற்று என்ற தகவலையும் பாசுரம் 11 யும் பகிர்ந்தமைக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. ஆண்டாள் வீற்றிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்தல வரலாறு பற்றிய சிறப்பு குறித்து கருத்து பதிவு செய்து பாராட்டிய அய்யா அவர்களுக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. திருப்பாவை படித்தேன். திருவில்லிப்புத்தூர் பல முறை சென்றுள்ளேன். தங்களது பதிவின்மூலமாக இன்று மறுபடியும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. முனைவர் அய்யா அவர்களின் முத்தான கருத்துக்கு நன்றி!
   தொடர்க அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. Réponses
  1. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி, தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. ஸ்ரீவில்லிப்புத்தூர் அரிய விடயம் அறிய வைத்த நண்பருக்கு நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. ஸ்ரீவில்லிப்புத்தூர் அரிய விடயம் அறிந்து அருங்கருத்து மொழிந்தமைக்கு நன்றி நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. அருமை அருமை! தகவலும் பாசுரமும் விளக்கமும் இனிமை! இனிமை! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses
  1. இனிமை பாராட்டிய இனிய நண்பரே நன்றி! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. வணக்கம்
  ஐயா
  அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. பாசுரத்தின் பைந்தமிழ் சிறப்பினை பாரட்டியமைக்கு,
   நன்றி கவிஞரே! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. ஸ்ரீவில்லிப்புத்தூரும் சென்றதுண்டு. தகவலும் அறிவொம். நல்ல ஊர். எம் எல் வி அவர்கள் பாடிக் கேட்டு அதுவே மனதிலும் காதிலும் ஒலிக்கின்றது.

  கீதா

  RépondreSupprimer
 8. அய்யா அவர்களின் முத்தான கருத்துக்கு நன்றி!
  தொடர்க அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer