lundi 21 décembre 2015

"சுடர்க்கொடியாளின் சுந்தரத் தமிழ்"

திருப்பாவை பாசுரம் - 6துவாதசி

துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும்.
இதில் ,
அகத்திக்கீரை, 
நெல்லிக்காய்,
சுண்டைக்காய்
அவசியம் இடம்பெற வேண்டும்.

பகலிலும் உறங்க கூடாது.  
துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது.
விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது.
பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

ஏகாதசி விரதம்

10வது திதியாகிய  தசமி,

11வதாகிய ஏகாதசி,

12ம் திதியாகிய துவாதசி

என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.


பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி!
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு!
பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா?

கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?


பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த "பூதகி" என்ற அரக்கியிடம்,பால் குடிப்பது போல் நடித்து, அவளது உயிரைப் பறித்தவனும்,
சக்கர வடிவில் வந்த "சகடன்" என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான 'கண்ணபிரானை' யோகிகளும், முனிவர்களும்,

"ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை? 

 உடனே எழுந்து! இவற்றையெல்லாம் கேட்டு, உள்ளம் குளிர்வாயாக!

இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.


"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போது பரமனையும்,
கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக  கூறுவர்புதுவை வேலு14 commentaires:

 1. ஆண்டாள் பாடல் அனத்துமே அருமை! நண்பரே!

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெருநன்றி புலவர் அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. பஞ்சமூர்த்திகள் போற்றப்பட்ட விதம், ஆண்டாள் மூலமாக, அருமை.

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி முனைவர் அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. திருப்பாவைப் பாசுரத்துடன் இனிய காலைப் பொழுது மலர்கின்றது..
  வாழ்க நலம்..

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி அருளாளர் அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. தூவாதசியன்று காலை சாப்பிடும் உணவில் 21 வகை காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற தகவலைப் படிக்கும்போது கல்லூரி மாணவனாக (1962 ஆம் ஆண்டு) இருந்தபோது, என் அம்மாவிடம் என்னாலும் ஏகாதசி நோன்பு இருக்கமுடியும் என்று கூறி நோன்பு இருந்ததும், தூவாதசியன்று காலை நோன்பை முடித்ததும் நினைவுக்கு வருகிறது.

  திருப்பாவை பாசுரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. ஆண்டாள் பாடலுடான பதிவு நன்று நண்பா வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்.

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. துவாதசி பாரணை பற்றியும் திருப்பாவை பாடலும் விளக்கியமையும் சிறப்பு! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. ஆண்டாள் பாடலுடன் மார்கழி திங்கள் இனிமையாக புலரும் ஆனந்தத்தை தந்தது பதிவு!
  த ம 5

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழி மாதத்து பனித் துளியாய்
   மனதை குளிர்விக்கும் கருத்தினை
   பெய்தமைக்கு பெரு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer