mercredi 16 décembre 2015

"கோதை தொடுத்த தமிழ் மாலை"

ஆண்டாள் ஆழ்வார்

"மாதங்களில் நான் மார்கழி" என்று 'கேசவனால்' பெருமை படுத்தப் பட்ட மாதம் மார்கழி மாதம்
மாதங்களில் மார்கழியாய், மலர்களில் தாமரையாய் காட்சி தரும் அரங்கனை நோக்கி, பாவை நோன்பிருந்து சூடி கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் அருளியத் திருப்பாவை, தேனினும் இனியதாய் தெவிட்டாத தெள்ளமுதாய் நெஞ்சங்களை நிறைக்கும். 

 

பாடல் 1மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே!
சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே!
மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது.
இன்று நாம் நீராடக் கிளம்புவோம். 
கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன்,  
அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் 
சிங்கம் போன்ற மகனும்கரிய நிறத்தவனும்சிவந்த கண்களை உடையவனும்சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் 'வைகுண்டத்தை' மனதில் கொண்டு பாடுகிறாள். 
அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள்.
108 திருப்பதிகளில் 106 நாம் பூமியில் காணலாம்.
108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து,  தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும்.

மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும்,  
கன்னிப்பெண்களால் "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் 
"பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது.


மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய "திருவெம்பாவை"யும்,  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய "திருப்பாவை" யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் ஆழ்வாரின் சிற்ப்பை உணர்த்தும் சீரிய மாதமே மார்கழி என்றால் அது மிகையன்று!

புதுவை வேலு
 

 

28 commentaires:

 1. அருமையான ஆண்டாள் பாடல் அழகான விளக்கம் மிகவும் பிடித்த பாடலும் கூட.

  RépondreSupprimer
  Réponses
  1. ஆண்டாள் அருளிய பாசுரம் படித்து, மங்கள இசையாய் இசைத்த,
   தங்களது முதல் கருத்து பனி மழையில்! நனைந்தேன் நண்பரே! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. மார்கழி மாதம் முதல் தேதியான இன்று அதிகாலையில் இந்தத் தங்களின் பதிவு என் மனதைக் குளிர்விக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

  RépondreSupprimer
  Réponses
  1. அடியேனின் அன்பின் நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. Réponses
  1. விருப்பமிகு கருத்து விருந்தாய் அமைந்தது
   நன்றி வார்த்தைச் சித்தரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. மார்கழித் திங்கள் முதல் நாளன்று திருப்பாவையை பகிர்ந்தமைக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. "கோதை ஆண்டாள்
   தமிழை ஆண்டாள்
   கோபாலன் இல்லாமல்?
   கல்யாணம் வேண்டாள்!

   தெய்வத் தமிழாய் இனிக்கும் திருப்பாவை முதல் பாசுரம் படித்து
   கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. மார்கழித் திங்கள்.. மதி நிறைந்த நன்னாள்..
  திருப்பாவைப் பதிவு அருமை..

  RépondreSupprimer
  Réponses
  1. அருளாளர் அய்யா அவர்களின் கருத்தினைக் கண்ணுற்று களிப்புற்றேன்
   நன்றி! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. மார்கழி மாதம் முதல் தேதியான இன்று திருப்பாவைபதிவும் எங்களுக்கு பிடித்தமான கோலம் பதிவும் அருமை சகோ.

  RépondreSupprimer
  Réponses
  1. மனதை குளிரச் செய்யும் மார்கழி பனியாய்
   கருத்தைனை பொழிந்தமைக்கு நன்றி சகோதரி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. Listen to MARKAZHITH THINGAL first paasuram here:
  www.menakasury.blogspot.com

  subbu thatha
  www.vazhvuneri.blogspot.com

  RépondreSupprimer
  Réponses
  1. பசுவின் மடி சுரக்கும் பால் போல்
   சுவைமிகு பாடலாய் பாசுரத்தை வழங்கியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் அய்யா!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. ஆஹா பாடலுடன், விளக்கம் அருமை.

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பரே நலமா?
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
   தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. சூடி கொடுத்த சுடர் கொடியே வந்து ....இன்று திருப்பாவை கூறியது போல் இருந்தது ... அருமையான பதிவு ...

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம்
   "அனுவின் தமிழ்த் துளிகள்"
   மார்கழி மாதத்து பனித் துளிகளாய்...
   கருத்து அமைந்தது.
   நன்றி சகோ!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. மார்கழி பாவை அழகாக இருக்கின்றாள் நண்பா,

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி நண்பா,
   வருக! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. பாடல் விளக்கம் சிறப்பு! நன்றி! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி
   வருக! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. வணக்கம்
  ஐயா
  பாடலும் விளக்கமும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி அய்யா!
   வருக! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. Réponses
  1. நன்றி நண்பரே!
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
   தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 14. பக்தியால் இறைவனை நாடி
  இறையருள் தேடும் மாதம்
  மார்கழியே!

  http://www.ypvnpubs.com/

  RépondreSupprimer
 15. நன்றி அய்யா!
  வருக! தொடர்க!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer