vendredi 18 décembre 2015

"ஆண்டாள் அருளிய திருப்பாவை"மனிதர்களின் அகப்புறப் பீடைகளை பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி.

பீடு-பெருமை, பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடைய மாதம் மார்கழி என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் 'மார்கழி' மாதம் பெருமையுடைய மாதம்.

திருப்பாவை பிறந்த கதை

கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில்ஆயர்பாடி கோபியர்கள், கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுகையில் இருந்த 'பாஞ்சஜன்யம்' என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். 
அதுவே திருப்பாவை ஆயிற்று.

திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. 

இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது.

ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.

இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.


இதோ! அரங்கனின் அருளைப் பெறச் செய்யும் ஆண்டாள் ஆழ்வார் அருளிய இன்றைய அற்புதமான பாசுரம்- 3

பாடல் 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:

சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும், மண்ணையும், அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.

அவனது சிறப்பைக் குறித்து பாடி,  நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம்.

இந்த விரதமிருப்பதால்,  உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும்.

மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும்.
மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். 

குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும்.

வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும்.

வற்றாத செல்வத்தை என்றும் இந்த விரதம் தரும்.


விளக்கம்:

திருப்பாவை என்றாலே ‘ கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதில் முதல் பத்து,  அடுத்த பத்து,  அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி,  அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள்.
 
திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால்அதை
"உத்தம அவதாரம்" என்று போற்றுகிறாள். 

பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பது ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது.
இந்த பாடலில் உலகளந்த பெருமாள் குறித்து பாடப்பட்டுள்ளது.
 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் : (தொடரும்) 


புதுவை வேலு12 commentaires:

 1. ஆண்டாளின் பாசுரம் கேட்டேன், கேட்க நாளையும் வருவேன்.

  RépondreSupprimer
 2. கோதை ஆண்டாள் அருளிய பாசுரம் படித்து கருத்து படி அளந்தமைக்கு,
  அடியேனின் நன்றி முனைவர் அய்யா!
  வருக! தொடர்க!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 3. ஆண்டாளின் அருள் பெற தொடர்ந்து வருவேன் நண்பா....

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி நண்பா....
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. listen to this third pasuram here
  www.menakasury.blogspot.com
  in a couple of hours from now.
  thanks for publishing this and motivating me to sing
  the praise of Lord amidst so much of chaos at chennai.

  subbu thatha

  RépondreSupprimer
  Réponses
  1. மிக்க மகிழ்ச்சி!
   நன்றி திரு.சுப்புதாத்தா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. திருப்பாவை பிறந்த கதையை தெரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி

  RépondreSupprimer
  Réponses

  1. நன்றி அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. திருப்பாவைப் பற்றி அருமையான அறிமுகம்.
  த ம 4

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி நண்பரே
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer