jeudi 31 décembre 2015

"சொல் இலக்கணம் கண்டாள்" - ஆண்டாள்


திருப்பாவை :16

தங்களை தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்பவர்கள்

ஆழ்வார்கள் என்பதை பின்வரும் பாசுர வரிகளால் பறை சாற்றுகிறார்கள்  இவர்கள்.


1) பெரும் தமிழன் நல்லேன் பெரிது
                                      -பூதத்தாழ்வார்-

2)நான் இரும்தமிழ்நூல் புலவன்
                                      -திருமங்கை ஆழ்வார்-

3) ஞானத் தமிழ் புரிந்த நான்
                                     -பூதத்தாழ்வார்

4)வண்தமிழ்நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே
                                   -நம்மாழ்வார்-


5) அம்தமிழின் இன்பப் பாவினை
                              -குலசேகராழ்வார்.


பாடல் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.



பொருள்:

எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!
கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.
மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.
அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

"அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.
மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக!





விளக்கம்:
ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, ""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம்.


சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.





பகிர்வு:
புதுவை வேலு


















22 commentaires:


  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    திருப்பாவை 16 ஆம் பாசுரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses

    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி சகோதரி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி சகோதரி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. திருப்பாவை அறிந்தேன் நன்று
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

    RépondreSupprimer
    Réponses

    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி சகோதரி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  7. திருப்பாவை 16 வது பாசுரம் இங்கே ஒலிக்கிறது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்கள் புத்தாண்டு நலவாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    இரு ராகங்களில் ஒரு பாடல்.

    www.menakasury.blogspot.com

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses


    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்துக்கு வளமை பொருந்திய நன்றி சகோதரி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமையான விளக்கம்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses


    1. நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer