mardi 22 décembre 2015

"ஆண்டாள் அமுது" திருப்பாவை பாசுரம் - 7

ஆண்டாள் ஆழ்வார்

இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று கூறுவார்கள்
திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக  பாடியவர் ஆண்டாள் ஆழ்வார் ஆவார்.
வடமொழியிலும், தென்மொழியிலும், வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய
ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் "ஆண்டாளையும்", நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.


திருப்பாவை பாசுரம் - 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்சிடும் குரலும்,  அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா?


வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?

எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே!

நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன?

பிரகாசமான முகத்தைக் கொண்டவளே!
உன் வீட்டுக்கதவைத் திற !.விளக்கம்:
பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை.
"கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.சுரும்பார் குழற்கோதை
சுரும்பார் குழற்கோதை - தேன்நிறைந்த மலர்களையணிந்த குழல்முடியையுடையவள் ஆண்டாள்  ஒருகுழற்கற்றையாலே எம்பெருமானை  மனதில் இருத்தி இடம் பிடித்தவள் என்பதாள் சுரும்பார்குழல்என்ற அடைமொழி இட்டு அழைக்கிறோம்.

பகிர்வு:
புதுவை வேலு


12 commentaires:

 1. சிறப்பான விளக்கம் .ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் எப்போதும் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம் நண்பரே,
   மனதுக்கு மகிழ்வின் உரமாய், வரதனின் வரமாய், தெய்வீகக் காதலின் அறமாய்
   அமைந்த பாசுரங்களை படித்து படித் தேனாய் பகிர்ந்திட்ட தங்களது கருத்துக்கு நன்றி! தொடர்க...
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. சீசன்ஸ் க்ரீடிங்க்ஸ் பாஸ்
  முகநூலில் பகிர்ந்துள்ளேன்
  தம இரண்டு

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி தோழரே!
   வலைப்பதிவர் மாநாடு நிகழ்ச்சிக்கு பிறகு
   குழலின்னிசை நோக்கி தங்களது வருகை
   மகிழ்வின் உச்சக் கட்டம்!
   அழைப்பிற்கு அன்பின் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள்,, விளக்கம் நல்லா இருக்கு, நல்ல பகிர்வு, தொடருங்கள், நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் சகோ!
   வருகைக்கும்,வழங்கிய கருத்துரைக்கும் நன்றி சகோ!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. கேசவன் மற்றும் சுரும்பார்குழற்கோதை ஆகிய இரண்டு சொற்களுக்கான பொருளை தெரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி! தொடர்கிறேன் பாசுரங்களைப் படித்து பரவசமுற.

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் அய்யா
   வருகைக்கும்,வழங்கிய கருத்துரைக்கும் நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. ஆழ்வார் பாசுரம் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம் நண்பா!
   நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. விளக்கம் அருமையாக உள்ளது!

  RépondreSupprimer
 7. வணக்கம் அய்யா
  வருகைக்கும்,வழங்கிய கருத்துரைக்கும் நன்றி
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer