"சிந்து
நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம்
பெண்களுடனே"
-பாரதியின்
பாடலை செவிமடுத்து கேளாதவர் எவரும் இல்லை.
அத்தகைய சிறப்புக்குரிய சேர நாடாம்
கேரளத்தில் மிக முக்கிய பண்டிகையாக
கொண்டாடப்படுவது "ஓணம் பண்டிகை"
என்று சொல்லப்படுகிற 'திருவிழா திருவோணம்' ஆகும். இது ஆவணி மாதத்தில் திருவோண
நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த திருநாளை அத்தம் பத்து ஓணம்' என்று பத்து நாட்கள்
கொண்டாடி மகிழ்கின்றனர் கேரள மக்கள். இது ஆவணி மாதத்தில் திருவோண
நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். திருமாலுக்குத் 'திருவோண பிரான்' என்ற பெயரும்
உண்டு என்று சொல்லுவார்கள். திருவோண நட்சத்திரத்தில் பிறந்ததால் இந்தப் பெயரை பெற்றதாகவும்
கூறுகிறார்கள்.
இந்த விழாவை கேரளத்து மக்கள் அனைவரும் தவறாமல் கொண்டாட வேண்டும் என்பதை
அவர்கள் மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
இதற்கு தனி வரலாறு உள்ளது. அது...
கேரளாவை ஆண்ட மன்னன் மாவேலி என்பவர்
மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி புரிந்து வந்தார். அவரது ஆட்சியை கண்டு தேவர்களே
வியந்தனர். மாவேலி அசுர குலத்தவன் என்பதால் அவனுடன் தேவர்கள் போரிட்டனர். இதில்
தோல்வியை தழுவவே அவர்கள் திருமாலை தஞ்சம் அடைந்து, மாவேலியை வெற்றி காண உதவும் படி
கேட்டனர். அவரும் வாமண அவதாரம் எடுத்து மாவேலியை தேடி வந்தார்.
அப்போது மன்னன் நிஷ்டையில் இருக்கவே, அவரிடம் வாமண
அவதாரத்தில் இருந்த திருமால் தனக்கு யாகம் நடத்த 3 அடி நிலம் வேண்டுமென கேட்டார்.
வந்திருப்பது இறைவன் என்பதை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த மன்னன் மாவேலி அவர்
கேட்டதை தருவதாக வாக்குறுதி அளித்தார். மன்னனின் ஒப்புதல் கிடைத்ததும் திருமால் 3 அடி நிலத்தை
அளக்க முயன்றார். அப்போது அவரது உருவம் விஸ்வரூபமாக மாறியது.
விண்ணையும், மண்ணையும்
இரண்டடியால் அளந்துவிட்ட திருமால் தனது 3–வது அடிக்கு நிலம் எங்கே? என்று மன்னன்
மாவேலியிடம் கேட்டார். அதற்கு மன்னன் மாவேலி தனது தலையில் 3– வது அடியை
வைத்திட வேண்டும் என வேண்டி நிற்க வாமன அவதாரத்தில் இருந்த திருமாலும் மாவேலி
தலையில் தனது காலை வைக்க அவர் அப்படியே பாதாள லோகத்தில் அமிழ்ந்தார்.
மாவேலியின் பக்தியையும், அவர் இறைவன்
மீது கொண்ட அன்பையும் மெச்சிய திருமால் அவருக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார்.
அதற்கு மாவேலி, தனது மக்களை பார்க்க ஆண்டுக்கு ஒரு முறை
இப்பூஉலகுக்கு வரும் வரம்
அருள வேண்டும் என கேட்டார்.
திருமாலும் அந்த வரத்தை அவருக்கு
வழங்கி மறைவார். திருமால் அளித்த வாக்குப்படியே ஆண்டு தோறும் மாவேலி மன்னன் கேரள
மக்களை பார்க்க வருகிறார். இன்றளவும் அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படி வரும் மன்னன் மாவேலியை
வரவேற்கவே அவர்கள் வீடுகளில் தடபுடல் ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
இவ்விழாவின்போது, ஆங்காங்கே மாவேலி மன்னன்
வேடமிட்டவர்கள் தெருக்களில் செண்டை மேளம் முழங்க வலம் வருவார்கள்.
பள்ளி, கல்லூரிகளிலும்
இந்த உற்சாக கொண்டாட்டம் களை கட்டும்.
இன்றைய தினம் வீட்டின் முன்பு அத்தப்பூ
கோலமிட்டு கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விருந்தினருக்கு அறுசுவை விருந்து
படைத்து மகிழ்வார்கள்.
கேரள பாரம்பரியபடி, தலைவாழை இலை போட்டு
அதில் அவில், தோவரன், காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சி புளி, மாங்காய், எரிசேரி, கூட்டுக்கறி ஆகியவற்றை பரிமாறி பிரதமன் எனப்படும் பாயாசத்தையும்
சேர்த்து உண்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்பு
பெண்கள் ஓண ஊஞ்சலாடியும், வட்டு எறிந்து விளையாடியும் மகிழ்வார்கள். ஆண்கள், எறிபந்து, கடுவாபுலி
ஆட்டம் ஆடியும் கொண்டாடுவார்கள்.
பூக்கள் சிந்தும் புன்னகை வாசம் இந்த
விழாவில் கோலோச்சும்.
'ஓணம்' திருநாளை பேணும் மக்கள் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்து
இன்புற்று வாழ நாமும் வாழ்த்துவோமே!
"இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துகள்"
புதுவை வேலு
ஓணம் பண்டிகை பார்த்து இல்லை சார் .பார்க்கும் ஆவலைத்தூண்டும் பகிர்வு! சார் நலம் தானே??,பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerதனிமரம் ஓணம் பண்டிகைப் பார்க்க வேண்டுமா ? வருங்கள் எங்கள் வீட்டிற்கு...இருவர் வீட்டிலும் கொண்டாடுவோம்....வாருங்கள்...
Supprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகள்!..
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருவோணத் திருநாள் கிபி 10-ம் நூற்றாண்டு வரை தமிழகத்திலும் கொண்டாடப்பட்டுத் தான் வந்துள்ளது. சோழர்கள், பாண்டியர்கள் திருவோணத் திருநாளைக் கொண்டாடிய குறிப்புக்கள் உள்ளன. மாவேலி என்பவரும் சங்க கால மாயோன் என்ற கடவுளும் ஒன்று என்பர். திருவோணத் திருநாள் பழங்காலத்தில் தமிழகம், கேரளம், கொங்கணம், துளுவம் ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
RépondreSupprimerதிருவோண வாழ்த்துகள் நண்பரே...
RépondreSupprimerഓണം ആശം സകല് കൂട്ടുക്കാരാ
ஓணம் விழாவைப் பற்றி பதிவு! நன்று! நன்றி!
RépondreSupprimerஇந்தக் கதை வித்தியாசமாக உள்ளது...நிறைய கதைகள் வலம் வருகின்றன...
RépondreSupprimerஓணாம்ஷதங்கள்!
திரு விண்ணன் அவர்கள் சொல்லியுள்ளதுபோல் பண்டைத் தமிழகத்தில் திருவோணம் கொண்டாடப்பட்டது உண்மை. பின்னர் ஏனோ நாம் தீபாவளிக்கு முக்கியத்துவம் கொடுத்து திருவோணம் கொண்டாடுவதை நிறுத்திவிட்டோம்.
RépondreSupprimerகேரளாவில் ஓணம் விழாவை எல்லா மதத்தினரும் எவ்வித பாகுபாடுமின்றி ஓணத்தை கொண்டாடுவதை அங்கு ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தபோது பார்த்து வியந்திருக்கிறேன். ஓணம் ஒரு அறுவடைத் திருநாள். நம் தமிழகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவை எல்லா மதக்தியன்றும் கொண்டாடவில்லையே என்ற ஆதங்கத்தில் ஜனவரி 14, 2011 இல்பொங்கல் வாழ்த்து சொன்னபோது எழுதியிருந்தேன். நாமும் அவ்வாறு கொண்டாடும் நாள் வருமா?
இந்த திருவோண திருநாளில் அனைவருக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!
திருவோணம் வாழ்த்துக்கள்
RépondreSupprimerதம +1
இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஓணம் விழா பற்றிய பெருமையும், வர்ணங்களில் ஒளிந்திருக்கும் தெய்வீக தன்மையும் (படங்களால்), பண்புமிகு சேர நாட்டு கலை விழா பற்றிய செய்தியை, கட்டுரையாக விளக்கிய விதம் அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy