ஒரு ஞானியிடம் அவரது சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள
வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, " முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி ஒன்று என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான பல ரோஜாச் செடிகள் கண்களுக்கு தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.
அதற்கு அந்த ஞானி, " முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி ஒன்று என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான பல ரோஜாச் செடிகள் கண்களுக்கு தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.
வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால்? முன்னர் பார்த்த உயரமான
செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." என்றான் சீடன்.
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,
"இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் பல இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை". என்றான் சீடன்.
இப்போது ஞானி சொன்னார்,
"இது தான் திருமணம்!".
காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் நன்கு விளங்கியவாறு விடைபெற்றான் சீடன்.
( அர்த்தம் உணர்ந்த தற்போதைய சீடர்களாயின்,
ஒரு சூரிய காந்தி செடியைக் கூட பறிக்காமலே
வந்து விடுவார்கள்! என்பது வேறு விடயம்!!!!)
பகிர்வு:
புதுவை வேலு
புதுவை வேலு
பட உதவி: இணையம்
அருமை
RépondreSupprimerஅருமை பாராட்டிய நண்பருக்கு நன்றி.
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை ஐயா...
RépondreSupprimerநன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerஅருமையாக சொல்லியுள்ளீர்கள்.
சமீபத்தில் படித்த செய்தி ஞாபகம் வந்தது, கொஞ்சம் வெய்ட் பன்னினால் நல்ல செல்லும், நல்ல பொண்ணும் கிடைக்கும் என்று,,,,,,,
அருமையாக உள்ளது தங்கள் கருத்தான கதை.
வணக்கம் சகோதரி!
Supprimerவருகை கண்டு மகிழ்ச்சி
தங்களது கருத்தை ரசித்தேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerஅருமை பாராட்டி சிறபித்த அய்யா அவர்களுக்கு
Supprimerஅன்பின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
குட்டிக்கதை மிக அருமை சகோ.
RépondreSupprimerமிக்க நன்றி!
Supprimerபதிவினை தொடர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
கதை நல்லா இருக்கு இதேபோல பொண்ணு பார்க்க போகும் பொழுது முதலில் பார்ப்பதோடு நிறுத்தி விட முடியுமா 80 சந்தேகமாகவும் இருக்கிறதே...
RépondreSupprimerஅந்த ஞானியின் மெயில் ஐடியை அனுப்பி வையுங்கள் நண்பா....
மிக்க நன்றி!
Supprimerபதிவினை தொடர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கதை...ஐயா! நாங்கள் கேட்க நினைத்ததை இதோ நம் நண்பர் கில்லர்ஜி கேட்டுவிட்டார்...கேள்வியும் நல்லா இருக்கு...
RépondreSupprimerமிக்க நன்றி!
Supprimerபதிவினை தொடர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கதை. நல்ல உத்தி. பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerமிக்க நன்றி!
Supprimerபதிவினை தொடர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer“குட்டிக்கதை“ குட்டிகளைக் கவருவது (காதல்)... குட்டிகளைக் கட்டிக்கொள்வது (திருமணம்) ஞானி மூலம் சீடனுக்குப் எளியமுறையில் குட்டிக் கதைவழியாக புரியச் செய்தது அருமை.
காதலில் தேடி... ஒரு உயர்ந்த ரோஜாவையும் பறிக்காமலே போகிறோம்.
கல்யாணத்தில் வந்த சூரியகாந்தியில் இதுதான் நல்ல சூரியகாந்தி என எண்ணி திருப்தி பட்டுக்கொள்கிறோம்.
(ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்).
நன்றி.
த.ம. 6
வணக்கம் அய்யா!
RépondreSupprimerதங்களது அன்பு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
விருப்பம் இருப்பின் தங்களது இணைய முகவரி வேண்டுகிறேன்!
தர இயலுமாயின் தந்துதவுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு