mercredi 12 août 2015

"புது பாரதம் படைப்போம்"

படம் சொல்லும் பாடம்

                                                                                            பட உதவி: தினமலர்

அன்பின் ஐந்திணை
வென்றிடும் ஜெகத்தினை

ஆறாவது வரும் வினை
ஏற்படுத்தும் உயிர் அழிவினை!


மதுவும் மது சார்ந்த
இடமும் இல்லாத..... 

தமிழகம் காண்போம்
புது பாரதம் படைப்போம்.

புதுவை வேலு


30 commentaires:

  1. Réponses
    1. நன்றி நண்பரே!
      அவல நிலை அடியோடு மாற வேண்டும்
      அனைவருக்கும் நல்வழி காட்டியாக தமிழகம் திகழ வேண்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
      மதுவால் மனிதன் மிருகமாகாமல் இருக்க வேண்டும்
      எனவே மதுவில் இருந்து நம் தேசம் விடுபட வேண்டும் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. மதுவும் மது சார்ந்த
      இடமும் இல்லாத.....
      புது பாரதம் படைப்போம்.
      நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தவறு.. தமிழகத்தை இழித்து எழுதுவது மிகவும் தவறு..

    தினமலர் தான் அப்படி என்றால் - நீங்களுமா?..
    ஏன்.. மற்று எவ்விடத்தும் மது இல்லையா!?..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அருளாளர் அய்யா அவர்களுக்கு, நல்வணக்கம்!
      புண்ணிய ஷேத்திரங்கள் நிறையப் பெற்ற தென்னகத்தின்
      தெய்வீக மணம் கமழும் தமிழ் நாட்டை நானும் உயிருக்கு உயிராய் நேசிக்கின்றேன். பெருமைபடுகின்றேன்.
      தமிழனாகப் பிறந்து தாய்மொழியின்மீது அலாதி பற்று உள்ளவன் அய்யா அடியேன்.
      தங்களைப் போன்றோரின் மனதை வருத்தமுற செய்தமைக்கு முதலில் எனது வருத்தங்களை பதிவு செய்து கொள்கிறேன்.

      அய்யா! தயவுக்கூர்ந்து இந்த பதிவை இப்படியும் நோக்ககலாம் அல்லவா?

      கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
      முற்படக் கிளந்த எழுதிணை என்ப

      திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை
      1.குறிஞ்சி
      2.முல்லை
      3.மருதம்
      4.நெய்தல்
      5.பாலை
      6.கைக்கிளை
      7.பெருந்திணை
      என்று வகைப்படும். இவற்றுள் கைக்கிளை, பெருந்திணை தவிர்த்த மற்ற ஐந்தும் அன்பின் ஐந்திணைகளாக கொள்ளப் படுகிறது என்ற செய்தியை நினைவு படுத்தினேன்.

      மேலும் திணை என்றால் ஒழுக்கம்.

      எனவே, ஒழுக்கம் நிறைந்த தமிழகம் மலர வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்தேன்.

      அது இப்போது முற்றிலும் கோணாலாகி போய் விட்டதோ ? என்றே எண்ணத் தோன்றுகிறது.

      இந்த வேளையில் எனது வரிகளுக்குரிய பொருளை தெளிவு செய்வது நலமாக அமையும் என்று எண்ணுகிறேன்.

      அன்பின் ஐந்திணை
      வென்றிடும் ஜெகத்தினை

      ஆறாவது வரும் வினை
      ஏற்படுத்தும் உயிர் அழிவினை!

      மதுவும் மது சார்ந்த
      இடமும் இல்லாத.....

      தமிழகம் காண்போம்
      புது பாரதம் படைப்போம்.


      1) அன்பால் ஜெகத்தை வெல்லலாம் என்றேன் முதல் எனது இரு வரிகளில்

      2) அடுத்து வரும் இரு வரிகளில்
      மது உயிர் இழப்பை ஏற்படுத்தும் வினை என்றேன்.

      அடுத்து வரும் வரிகளில்
      3) மது இல்லாத தமிழகம் காண வேண்டும் என்ற ஆசையை பதிவு செய்தேன். மேலும்
      4)பாரதம் முழுவதும் இந்நிலை காணவும் பேராசைக் கொண்டேன்.
      இதில் எங்கும் தவறு இருப்பதாக எனது பார்வைக்கு பட வில்லை. இருப்பினும் தினமலர் படத்தில் உள்ள வாசக வரிகள் தமிழகத்தை இழிவு படுத்துவதாக கருதப் பட்டால் இனி வரும் பதிவுகளில் ஒருபோதும் இந்நிலை ஏற்படாமல் இருக்க தங்களது கருத்தை கவனத்தில் கொள்வேன்.
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தினமலர் சொன்னதே தவறு. மதுவும் மது சார்ந்த இடங்கள் தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உண்டு. மேலும் அவை மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் கூட உண்டு. திரு துரை செல்வராஜூ அவர்கள் சொன்னதுபோல் நம்மை நாமே பரிகசித்துக்கொள்ளவேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மையை உறுதியாக உரைத்தமைக்கு நன்றி அய்யா!
      நம்மை நாமே பரிகாசம் செய்வது -உணர்ந்தேன்
      எடுத்துரைத்த பாங்கு போற்றுதலுக்குரியது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. /புது பாரதம் படைப்போம்./ ஃப்ரான்ஸில் இருந்து கொண்டு.....!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் மூத்த பதிவாளர் அய்யா
      நல்லாசி அருள வேண்டுகிறேன்.
      அய்யா!
      "நையாண்டி தர்பார்" செய்ய விருப்பம் இல்லை. "

      /புது பாரதம் படைப்போம்./ ஃப்ரான்ஸில் இருந்து கொண்டு.....!

      நற்றமிழ் தரணியில் சிறப்புறவே விரும்புகிறேன்.
      பிரான்ஸ் தேசத்தில் இருந்து கொண்டு
      புது பாரதம் படைக்க வேண்டுதல் வைக்கக் கூடாதா?
      தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இருந்துகொண்டு தாங்கள் ஆற்றும் சேவையை
      இங்கிருப்பவர்கள் செய்யக் கூடாதா?
      தமிழ் மொழி இன்று உலக மொழியாக உருவெடுத்து உள்ளமைக்கு
      புலம் பெயர்ந்த தமிழர்களே காரணம் என்பதை வரலாறு சொல்லும்.
      நன்றி அய்யா!
      வணக்கத்துடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. என் மனம் இன்னும் நோகின்றது.. அன்புக்குரிய திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்கள் கூறியது போல - அக்காலத்தில் ஐவகை நிலங்களிலும் நிலத்துக்குரிய பண்பாட்டுகளில் மது இருந்திருக்கின்றது...

    தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!.. - என்று வெட்டி முழக்கம் இட்டவர்களின் முன்னே -

    தமிழ்நாடு பழிக்கப்படுகின்றது!.. அதுவும் தமிழர்களாலேயே!..

    என்ன செய்வதாக உத்தேசம்...

    தந்தைக்கும் மகனுக்கும் சண்டை மூட்டி விட்ட வசந்தசேனை நினைவுக்கு வருகின்றாளா!..

    நம்மிடையே - நம் மக்களிடையே பலவிதங்களிலும் குணக்கேடுகள் விளையக் காரணம் - ஏதோ ஒரு அறிவினை நம்பி - சொந்த அறிவினைப் பறி கொடுத்தது தான்!..

    தமிழகம் - நல்லுணர்வினைப் பெற வேண்டும்.. நல்லறிவினைப் பெற வேண்டும்!..

    வாழ்க தமிழ்.. வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ் கொண்ட நல்லுலகம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல செய்தி!
      நானும் வரவேற்கின்றேன்.
      தங்களுக்கு பதில் தந்துள்ளேன் அய்யா!
      வருத்தம் இன்னும் இருப்பின் பதிவினை விலக்கி கொள்கிறேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஒரு படம். பல செய்திகள். 6ஆவது நிலம் அதிகம் ரசித்தேன், வேதனையோடு.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி முனைவர் அய்யா!
      கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!
      வினைமிகு 6வது நிலத்தை அகற்றுவதே சிறப்பு!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அன்புடையீர்..

    இங்கே தினமலரின் கருத்துப் படம் தான் பிரச்னையே தவிர - தங்களது கவிதை அல்ல!..

    தாங்கள் - தமிழ் கொண்டு வார்த்தெடுத்த கவிதைக்கும் அதிலுள்ள கருத்துக்கும் தலை தாழ்ந்த வணக்கம்!..

    ஊடகங்கள் எல்லாவற்றின் நோக்கமும் வணிகம் தானே தவிர -
    வாழும் மக்களின் நலன் அல்ல!..

    பதிவினை விலக்கிக் கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..

    என்றும் அன்புடன்..
    துரை செல்வராஜூ.,

    RépondreSupprimer

  10. வணக்கம் அருளாளர் அய்யா!
    குழலின்னிசையின் 298 பதிவுகள் யாவும் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்யவே!
    ஒருபோதும் சிறுமை செய்யாது.
    தங்களது அறிவுறுத்தலுக்கு நன்றி! ஏற்கின்றேன் எளிமையுடன் என்றும்!
    நன்றி!
    நட்புடன்,
    *புதுவை வேலு

    RépondreSupprimer
  11. தங்களின் கவிதையை மட்டும் ரசித்தேன்.

    RépondreSupprimer
  12. கவிதையை ரசித்தமைக்கு மட்டுமல்ல, வாக்கினை அளித்தமைக்கும் நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. ஆகட்டும்! பார்க்கலாம்!

    RépondreSupprimer
    Réponses
    1. புது பாரதம் உருவாகுமா? காலத்தின் கைகளில் உள்ளது புலவர் அய்யா அவர்களே!
      ஆகட்டும் !!!! ஆயிரம் பொருள் பதிந்த வார்த்தை தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங்களின் கவிதை சிறப்பு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்
      தமிழகம் மதுமிகு மாநிலமாக மாற வேண்டாம்
      ஒவ்வொரு தமிழரின் ஆசையும், ஆர்வமும் இதுவாகவே அமைதல் வேண்டும்.
      கவிதையை ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங்களின் கவிதை சிறப்பு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்
      தமிழகம் மதுமிகு மாநிலமாக மாற வேண்டாம்
      ஒவ்வொரு தமிழரின் ஆசையும், ஆர்வமும் இதுவாகவே அமைதல் வேண்டும்.
      கவிதையை ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. புது பாரதம் படைப்போம்....

    ம்ம்ம்ம்...

    RépondreSupprimer
  17. புது பாரதம் படைக்க முயற்சிப்போம் நண்பரே!
    ம்ம்ம்- விலகட்டும்!
    நிம்மதி நிலவட்டும்
    நன்றி நண்பரே நல்வாக்கு, நல்கிய உமக்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  18. புதிய பாரதம் படைப்போம்....நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை...

    RépondreSupprimer
  19. நன்றி அய்யா!
    கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!


    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer