mercredi 5 août 2015

"நீதியை தலை வணங்கி ஏற்போம்!"

தற்போதைய சூழலில், நிதி உள்ளவர்கள் உட்பட, அனைவரும் நீதியின் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டிய நிலையினை, காலத்தின் கட்டாயத்தினை நாம் எட்டியுள்ளோம்.


வீதிக்கு வீதி நீதியின் தீர்ப்பு அவமதிப்புக்கு ஆட்படாமல் பேசப்படுகிறது.

நீதியை வழங்கும் நீதியரசர்கள் சட்டத்தைக் காக்கும் காவல் அரசர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

"நீதி" என்பது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை சொல்லும் 
சங்க இலக்கியப் பாடல் ஒன்றினை, தற்போது நினைவு கூர்ந்து பார்ப்போம்:-


இருவர்தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறந் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும்மே.

(வெற்றிவேட்கை-75) 
 
அதாவது, நீதியரசராக அமர்ந்து நீதி வழங்கும்போது 'நடுவுநிலைமை' பேணுதல் தலையானப் பண்பாகும். மேலும், ஓரு வழக்கில் இரு தரப்பினர் கூறும் மொழிகளை, ஏழு முறை திருப்பித் திருப்பிக் கேட்டு,  ஆராய்ந்து, உண்மையை அறிந்து,  இரு தரப்பினரும் ஏற்கும் முறையில், மனு நீதிப்படி தீர்ப்பு கூறாவிட்டால்,  வழக்கிலே தோற்றவர் மனம் நொந்து வருந்திச் சிந்தும் கண்ணீரானது, வாளாக மாறி,  நீதி வழங்கியவரின் சந்ததியை  மும்மூர்த்திகளே வந்து தடுத்தபோதிலும் வேரறுத்து விடும்.
-இவ்வாறு பொருள் கொள்ளும் வகையில் பாடலை 'நறுந்தொகை'யில்
(வெற்றிவேட்கை) யாத்துள்ளார்.

இளைஞர்கள், நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. தலைசிறந்த நீதி மொழிகளைக் கூறி, வாழ்வை நல்வழிப்படுத்தும் நூல்.

தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை.   இது வெற்றிவேட்கை எனவும் அறியப்படுகிறது.  இந்த நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.  இவர் மேலும் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகளுள் சிறப்பானவை "நைடதம்கூர்மபுராணம்இலிங்கபுராணம், காசிக்காண்டம்போன்றவையாகும்.

இந்நூலின் சில சொற்றொடர்கள் புறநானூறு,  நாலடியார் போன்ற நூல்களின் பாக்களோடு சொல்லோடும், பொருளோடும் ஒத்தும் இருக்கின்றன.

நறுந்தொகை என்றழைக்கப்படும் 'வெற்றி வேட்கை'யின் மற்றுமொரு பொருள் உணர்த்தும் சிறப்புமிக்க பாடல் இதோ:-தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல், யானை,
அணிதேர் புரவி, ஆள்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே. 

(வெற்றிவேட்கை-17)விதை சிறிதாயினும் பலன் பெரிது!
ஆலமரத்து விதையோ, சிறிய மீனின் முட்டையைக் காட்டிலும் மிகவும் சிறியதுதான். ஆனாலும், அது முளைத்துப் பெரிய மரமான பிறகு, அரசன் தம் யானை, குதிரை, தேர், பெரும் காலாட்படை ஆகியவற்றோடு தங்க நிழல் தரும். எனவே, ஆலம் விதையை சிறியதென எண்ண வேண்டாம். விதை சிறியதாயினும் அது தரும் பலனோ மிகப்பெரியது.
இத்தகைய தத்துவப் பொருளை தரணிக்கு தந்து சிறப்பு செய்கிறது இப்பாடல். 

 இந்தநூல் எண்பத்தியிரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது.

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
( கல்வி கற்பித்த ஆசிரியன் தெய்வமாவான்)


கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்
 கற்ற கல்விக்கு அழகாவது கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல்.

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
 உணவிற்கு, அழகு  விருந்தினருடன், உண்ணுதல்.


ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
மெய்ஞ்ஞானிக்குச் சுகமும் இல்லை; துக்கமும் இல்லை.


துணையோடு அல்லது நெடுவழி போகேல்

(நெடிய பயணம் மேற்கொள்ளும்போது துணையோடு செல்வதுவே சிறப்பு!)

-போன்ற எளிமையான, பொருள் செறிந்த தொடர்களை உடைய
நூல்.... நறுந்தொகை (வெற்றிவேட்கை).

நீதியை தலை வணங்கி ஏற்போம்! நீதியை பறைசாற்றிய இலக்கியத்தை மதித்து, மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.

புதுவை வேலு


18 commentaires:

 1. இது வரை படித்திடாத பாடல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  த.ம. 1

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. இலக்கியத்தில் இதுவரை நாங்கள் அறிந்திராத பாடல்களை மேற்கோள் காட்டி ஒரு நல்ல தலைப்பைப் பற்றி ஆராய்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. தமிழ்ப்பணி தொடர்க ...
  தம +

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி தோழரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. வணக்கம் நண்பரே
  மிக அழகிய பொருள் பொதிந்த பாடல்கள், தங்கள் குறிப்பிட்டுள்ள நூற்கள். தமிழ் நூலகங்களில் கிடைக்கின்றனவா ?

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. வணக்கம்,
  அருமையான பாடல்கள், நல்ல வழிகாட்டி,,,,,,
  பகிர்வுக்கு நன்றி .

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. புதுமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. எப்போதோ படித்த நினைவு! நன்றி நண்பரே!

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. அன்புள்ள அய்யா,

  நீதி-பற்றி வெற்றிவேட்கை பாடல்களின் மூலம் நன்றாக விளக்குனீர்கள்.
  பதி பக்தியுடன் புரிந்து கொள்ள வேண்டியது.

  இத்தனை சிறிய விதையிலிருந்து
  எத்தனை பெரிய மரம் வந்தது...!

  -மிக்க நன்றி.
  த.ம.9

  RépondreSupprimer
  Réponses
  1. இலக்கியத்தை மாண்புறச் செய்து, வாழ்வித்து மகிழ்வோம்.
   கருத்தளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer