samedi 15 août 2015

"பொறுமை கடலினும் பெரிது " (குட்டிக்கதை)






வெளி நாட்டில் இலக்கிய பரப்புரை செய்வதற்காக அங்கு, நடைபெறவிருந்த மாநாட்டிற்கு செல்ல இருந்த சீடன் ஒருவன் தன் குருவை வணங்கினான்.
நீ எந்த சூழலிலும் பொறுமையாக இருப்பாயா? என்று கேட்டர் குரு.
பொறுமையாக இருப்பேன் குருவே ! என்றானவன்.
உறுதியாக உன்னால் பொறுமையாக இருக்க முடியுமா? என்று மீண்டும் கேட்டார் குரு.
இருப்பேன் குருவே!
நன்றாக சிந்தித்து சொல்! உன்னால் எந்த நிலையிலும், பொறுமையாக இருக்க முடியுமா?
மாநாட்டில் உனது பேச்சை கேட்பதற்கு ஆளே இல்லாமல் ? போனாலும் கூட! பொறுமையாக இருக்க முடியுமா ? என்று மறுபடியும் கேட்டார்.
சீடன் பொறுமை இழந்து விட்டான்.
என்ன குருவே !  நான்தான் திரும்ப திரும்ப பொறுமையாக இருக்க முடியும் என்று சொல்கிறேன். நீங்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறீர்களே? என்று அலுத்துக் கொண்டான்.
நான் பொறுமையாய் இருப்பாயா? என்ற ஒரே கேள்வியை…. நான்கைந்து முறை  கேட்ட உடனே நீ பொறுமை இழந்து விட்டாயே?
இப்பொழுது தெரிகிறதா?
பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல ! என்பது என்றார் குரு!
திருவென விழிப்புற்ற சீடன்! தன் தவறை உணர்ந்தான்.
குருவே "பொறுமை கடலினும் பெரிது" என்பது உண்மையே ! என்றான்.


புதுவை வேலு

24 commentaires:

  1. அருமையான விழிப்புணர்வுக் கதை நண்பரே
    நன்றி
    தம1

    RépondreSupprimer
    Réponses
    1. விழிப்புணர்வுக் கதையெனப் பாராட்டி, முதல் வருகை தந்து, முதல் வாக்கினை அளித்து முழு மகிழ்ச்சியுற செய்தமைக்கு நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. // பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல !//

    உண்மையை கதை மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
  3. "பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல!"
    உண்மைதான் அய்யா!
    ஆகையால்தான் உண்மையை கதை மூலம் பகிர்ந்தேன்.
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. Réponses
    1. வார்த்தைச் சித்தரே!
      விளக்கம் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி!
      அருமை பாராட்டியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சத்தியமா பொறுமையாதான் படித்தேன்
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. வலைப் பதிவர் மாநாடு சிறப்புற நல்வாழ்த்துகள் தோழரே!
      பொறுமையுடன் உமது பெருமையை நினைந்திட வேண்டும்
      நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கேட்ட கதைதான். இருந்தாலும் குழல் இன்னிசை மூலமாக மறுபடியும் கேட்டதில் மன நிறைவு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. இந்த நீதிக்கதையை உண்மை நிகழ்வாகவும் கொள்ளலாம் அய்யா!
      கண்டதை, காண்பதை கதை வடிவில் பதிவாக்கி உள்ளேன். நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பொறுமை கடலினும் பெரிது" என்பது உண்மையே ! நண்பரே.... அதுவும் இந்தீய மக்கள் பொறுமையில் முதலானவர்கள்....

    RépondreSupprimer
    Réponses

    1. பொறுமையில் இந்திய மக்கள் முதலிடம் தங்களது பார்வையில் என்பதை நினைக்கும்போது அரசியலானது பொறுமை அலையில் சிக்குண்டு விடும் காலம் வரும் என்றே தோன்றுகிறது தோழரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறப்பான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வாங்க தளிர் சுரேஷ்!
      நீதிக்கதையை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்று நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா

    மிக அருமையான நீதிக்கதை பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வருக கவிஞரே!
      தங்களது வருகை மட்டற்ற மகிழ்வை பெற்றுத் தந்தது.
      தங்களது கருத்துரைக்கும், வளம் சேர்க்கும் வாக்கிற்கும் நன்றி!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. குட்டிக்கதை பெரிய தத்துவத்தை தந்தது நண்பா..

    RépondreSupprimer
    Réponses
    1. பொறுமையுடன் உமது பெருமையை நினைந்திட வேண்டும் நண்பா..
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. "பொறுமை கடலினும் பெரிது" - உண்மை....

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக்கதையை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்று நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. Réponses
    1. அருமை பாராட்டியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. அருமையான நீதிக் கதை...பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...பொறுத்தார் பூமி ஆள்வார்...

    RépondreSupprimer
  14. பொறுத்தார் பூமி ஆள்வார்... அருமை ஐயா...
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer