mercredi 26 août 2015

"முதல் மரியாதை"



தமிழக சட்டசபையில்,  இன்றைய  (ஆக.,26)  நிகழ்வில்,  110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா,  நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த செய்தியை படித்தபோது,


எனது ஆசான் திரு.சாயபு மரைக்காயர் அவர்கள், அருள்மிகு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், சிவாஜி பற்றி தெரிவித்த செய்தி எனது நினைவுக்கு வந்தது அந்த தகவலை உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன். 

காரைக்காலில் ஒருமுறை  நடந்த ஓர் ஆன்மீகச் சொற்பொழிவில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்  கூட்டத்தினரைப் பார்த்து , "நடிப்பில் சிறந்தவர் யார்? " என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

அனைவரும் அமைதி காத்தார்கள். அப்பொழுது ஒரு சிறுவன் மட்டும் எழுந்து "சிவாஜி " என்று உரக்கக் கத்தினான். 
உடனே வாரியார் ," இந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது பெரியவர்களாகிய உங்களுக்குத் தெரியவில்லையே! என்றாராம்.
பொதுவாக பெரியவர்களை அழைக்கும்போது,
"ஜி" என்று சேர்த்துச் சொல்வது வழக்கம்
காந்தியை "காந்திஜி " என்போம் 
நேருவை "நேருஜி" என்போம் 
அதுபோல எம்பெருமான் 'சிவா'வை இந்தச் சிறுவன் மரியாதையாகச் "சிவாஜி " என்று சரியாகக் கூறி இருக்கிறான்! " என்று பாராட்டிப் பேசினார்.

அவையில் எழுந்த ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆயிற்று.
வாரியாரின் சமயோசிதப் பேச்சுக்கும்நகைச்சுவை உணர்வுக்கும் இந்நிகழ்ச்சி ஓர் நல்ல எடுத்துக்காட்டு! என்றார்.

இப்போது புரிகிறது நண்பர்களே! 
பகவான் ஜிமற்றும் கில்லர்ஜி இவர்களின் 'ஜி' மரியாதைக்கா மகத்துவம்! எனக்கு!!!


புதுவை வேலு

18 commentaires:

  1. இரண்டு ஜிக்களும் ஒன்றாய்
    மனம் மகிழ்கிறது
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. 2 ஜி என்று சொன்னாலே பயமாய் இருக்கிறது!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஜி....அருமை, உண்மை. தற்போது நாவுக்கரசர் தேவாரம் (6ஆம் திருமுறை) படித்துவருகிறேன். அதில் ஒரு பாடலில் சிவன் தீயவன் என்றிருந்தது. எனக்கு ஒரே குழப்பம். பொருளைப் பார்த்தபோது அறிந்தேன். தீ+அவன் = தீ வடிவானவன். தங்களது இப்பதிவு என்னைத் தேவாரப் பதிகத்தோடு ஒப்புநோக்கவைத்துவிட்டது.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஜி விளக்கம் அருமை ஐயா! வாரியார் அவர்களின் உரைகள் எல்லாமே மிகவும் சுவையானது. நகைச்சுவை உணர்வுடன் எல்லோரது மனதிலும் ஆன்மீகத்தைப் பதிய வைப்பதில் வல்லவர்...பகிர்வுக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இப்போவும் நண்பர்கள் மரியாதைக்கு "ஜி" சேர்த்துத் தான் அழைக்கின்றனர். தெரிந்த தகவல், மீண்டும் படித்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தேவகோட்டையில்... சிறிய வயதில் வாரியார் அவர்களின் சொற்பொழிவை பலமுறை சுமார் 50க்கும் மேல் கேட்டவன் நான் பழைய நினைவுகள் இழையோடியது...

    நண்பா எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே.....

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அன்புள்ள அய்யா,

    திருமுருக கிருபானந்த வாரியார் எம்பெருமான் 'சிவா'வை இந்தச் சிறுவன் மரியாதையாகச் "சிவாஜி " என்று சரியாகக் கூறி இருக்கிறான்! " என்று பாராட்டிப் பேசினார்.

    நானும் மணப்பாறை கோவிலுக்கு திருமிகு. வாரியார் வந்திருந்தார். சிறுவனாக இருந்த என்னை என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருந்தார். தலையை நிமிர்த்தி பேசமுடியவில்லை. தலையைக் குனிந்தபடியே ஒலி வாங்கிக்கு முன் அமர்ந்து கொண்டு பேசினார். தன் பேச்சுக்கிடையில் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் காட்டி “இந்தப் புத்தகத்திற்கு எத்தனை பக்கம்?”- என்று கூட்டத்தைப்பார்த்துக் கேட்டார்.

    நான் ‘புத்தகம் பெரியதாக இருக்கிறதே... எத்தனை பக்கம் என்று எப்படி சரியாகச் சொல்ல முடியும்’ - என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

    ஒரு சிறுவன் “ ஆறு பக்கம்” என்றான். உடனே மேடைக்கு அவனை அழைத்துப் பாராட்டி ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

    தள்ளாத வயதிலும் தன் பேச்சைத் தள்ளாமல் அவர் வந்து பேசியது இன்னும் நினைவில்...!

    -நன்றி.
    த.ம. 6

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வாரியார் ஜி விளக்கம் அருமை. நண்பருக்குள் ஜி ஒற்றுமை சிறப்பு.
    ஜிகிணா ஜிக்கள், ஜில்ஜில் ஜிக்கள், ஜகஜக ஜிக்கள், 2ஜிக்கள், 3ஜிக்கள்....
    எப்பப்பா பதுங்கிவிட்டேன் பந்தியைவிட்டு. 4ஜி, 5ஜி என்றால் என்ன புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வருகை
      நற்கருத்து
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer