samedi 29 août 2015

"எண்ணம் எல்லாம் என் எஸ் கே"





சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளை விதைகளாய்.... தூவிய மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர் என்.எஸ்.கே, அவர்கள். சுமார்
122 படங்களுக்கு மேல் நடித்த கலைவாணர் என்.எஸ்.கே, நகைச்சுவையுலகில் ஒரு சரித்திரம். அந்த சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து, சில அவரது நினைவு நாளில் (30-ஆகஸ்ட்). 
நாகரீக அரசியல்
1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்என முடித்தார்.

இறவாப் புகழ் ஈகை அரசர்

ஒருமுறை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் கலைவாணர் என் எஸ் கே அவர்களது சிலை திறப்பு விழாவிற்கு வந்துவிட்டு மாலை அணிவித்து சிறப்பு செய்துவிட்டு திரும்பும்போது, அவசரமாக ஒரு சிறுவன் ஓடிவந்து என் எஸ் கே சிலைக்கு போடப் பட்ட அந்த மாலையை கழற்றிக் கொண்டு செல்ல முற்பட்டான். இதைக் கண்டுவிட்ட எம் ஜி ஆர் அந்த சிறுவனை அழைத்து வரச் செய்து, ஏன் மாலையை கழற்றினாய்? என்று கேட்டதும்அந்த சிறுவனோ எனது தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு மாலை வாங்க காசு என்னிடம் இல்லை. அதனால்தான் இந்த மாலையை கழற்றிக் கொண்டுபோய் போடலாம் என்பதற்காக! என்றான். அப்பொழுது அந்த சிறுவனுக்கு வேண்டிய உதவியை செய்யசொல்லிவிட்டு எம்ஜிஆர் சொன்னது என்னத் தெரியுமா?


 "கலைவாணர்" அவர்கள் இருக்கும்போதும் கொடுத்தார்.
 இல்லாத போதும்இறந்தபோதும் கொடுக்கின்றார்"- 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகமான சதி லீலாவதிபடம்தான், கலைவாணருக்கும் முதல் படம்.

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
கலைவாணர்  அவர்கள் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சிஅறிஞர் அண்ணாவின் படத்திறப்பு. 

அறிஞர் அண்ணா 1967ல் கடைசியாகக் கலந்துகொண்டதுகலைவாணர் சிலை திறப்பு விழா.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் இன்றும் அந்த சிலை உள்ளது.

நாசூக்கான நகைச்சுவை (குற்றம் குற்றமே)


மணமகள்  என்ற படத்தில் ஒரு காட்சியில் கலைவாணரிடம் ஒருவர்  அடுத்த வீட்டுக்காரர்பக்கத்து தெருக்காரர், மற்றவர்களின் குடும்பம் பற்றியெல்லாம்  குறை சொல்லிக்கொண்டிருப்பார். கலைவாணர் அவரை இடைமறித்து
சரி.. உன் பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்பார். அந்த நபர், தொகையைச் சொல்வார். கலைவாணர் உடனே, “அப்படி சொல்லக்கூடாது. எவ்வளவு ரூபாய் நோட்டா இருக்குது? என்னென்ன நோட்டு? சில்லறை காசு எவ்வளவு இருக்குது? எத்தனையெத்தனை நயா பைசா? என்றெல்லாம் சரியா சொல்லணும்என்பார். இருங்க எண்ணிப்பார்த்து சொல்றேன் என்று அவர் சொல்ல, கலைவாணரோ, “ஊகும்.. எண்ணாமல் சொல்லுஎன்பார். அதற்கு அந்த நபர், “அது எப்படிங்க.. எண்ணிப் பார்த்துதானே சொல்லமுடியும்என்று கேட்பார்.

கலைவாணர் அவரிடம், “உன் பாக்கெட்டுல நீ வச்சிருக்கிற பணத்தை எண்ணிப்பார்த்துதான் சரியா சொல்ல முடியும் என்கிறாய்! ஆனால்? அக்கம்பக்கத்து வீட்டு விவகாரத்தையெல்லாம் எண்ணிப்பார்க்காம நீயா சொல்லிக்கிட்டேபோறியே, என்ன இது?” என்பார். 
இதுதான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை பாணி.



காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர்.


காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.


இயக்குனர்

கலைவாணர் அவர்கள்  இரண்டு படங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்
பணம்
மணமகள்

சீர்திருத்தவாதி

ஒரு முறை திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார். 

அறிமுகங்கள்

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர்  'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் நடித்த பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!


"உடுமலை நாராயணகவி"யைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர

'கலைவாணர்' என்று பட்டம்

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!


நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்
 
கலைவாணர் என் எஸ் கே அவர்கள் காலம் வரை நகைச்சுவை என்பது நாகரிக நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தது. நம்மையெல்லாம் சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மனதுக்கு மகிழ்ச்சி மகுடத்தையும்  சூட்டியவர் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்கள். 
அவரது நினைவு நாளில் அவரது சிறப்பினை நினைவுக் கூறுவோம். மக்களின் எண்ணமெல்லாம் என் எஸ் கே அவர்கள் என்றும் வாழ்வார்.





தானம் ஒருபோதும்
ஊனம் ஆனதுஇல்லை
மனிதநேயர் பாவாணர்
கலைவாணர் காலம் வரை

  
புதுவை வேலு 


32 commentaires:

  1. அட! என் எஸ் கே. எங்கள் ஊர்க்காரர்....

    நல்லதோர் பதிவு...

    RépondreSupprimer
    Réponses
    1. N.S.K. என்பதன் சுருக்கம்
      நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்
      ஆம் ஆசானே! தங்கள் ஊர்க்காரர்தான்.
      முதல் கருத்து தந்து சிறப்பு செய்தமைக்கு
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கலைவாணர் நினைவுகள் அருமை.
    நல்ல மனிதநேயம் மிக்க மனிதர்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோதரி!
      வருகைக்கும் கலைவாணர் பற்றிய சிறப்பு கருத்து பின்னூட்டத்திற்கும்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்!! கலைவாணவர் நினைவுகள் அழகு அருமை!! நன்றி

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் வாருங்கள் நண்பரே!
      குழலின்னிசையின் தளம் நாடி வந்தமைக்கு நன்றி!
      கலைவாணர் தேடி தந்த பதிவர்.
      தனிமரம் அவர்களின் பதிவில் கண்டதுண்டு!
      இனி நானும் தொடர்வேன் பதிவுகளில்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கலைவாணரைப் பற்றிய அருமையான பதிவு. தமிழகக்கலையுலக வரலாற்றில் என்றும் இடம் பெற்றுள்ள மாமனிதர். அவருடைய நினைவு நாளில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. திராவிட முன்னேற்றக் கழகத்தை....
      திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று சொல்லி
      மாற்று வழியில் மக்களிடம் கருத்தினைச் சொல்லி
      அறிஞர் அண்ணாவிற்கு சிறப்பு சேர்த்தவர் கலைவாணர்.
      இந்நாளில் அவரது பதிவை சிறப்பிக்க வந்தமைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கலைவாணர் அவர்களைப்பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை என்பதே உண்மை. உண்மையான நடிகரும் இவர் தான். மனிதாபிமானம் மிக்க, வாரிக்கொடுத்த வள்ளலும் இவர்தான்.இந்த பதிவின் கடைசியில் நீங்கள் அவருடைய படத்தோடு பொருத்தமான சொற்களை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. சிரிப்பை சிந்தனைத் தேனில் குழைத்து
      நகைச்சுவையை நல்லுணவாய் தந்த கலைவாணரின் சிறப்பினை போற்றி
      கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான தகவல்களுடன்
    கலைவாணர் அவர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி..

    RépondreSupprimer
  7. விடலை நகைச்சுவை...
    வியாபாரமாய் திரைக் கடலை
    காவு கொள்வதை தடுப்பதற்கு
    சுடலைமுத்து கிருஷ்ணன் மீண்டும் பிறப்பெடுத்து வர வேண்டும்
    சிந்தைமிகு விந்தையான் நகைச்சுவையை நாம் பெற வேண்டும்.
    வந்து வாழ்த்தி கருத்திட்ட அருளாளர் அய்யாவுக்கு எனது நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. சிரிப்போடு சிந்திக்க வைத்த சிந்தைச்சிற்பி... அருமையான பதிவு

    RépondreSupprimer
  9. "எதிலும் புதுமை" காணத் துடிக்கும்
    துடிப்பான நண்பரே!
    உமது சிறப்புமிகு கருத்து எண்ணமெல்லாம் என் எஸ் கே வின் நினைவு நாளை சிறப்பு செய்யும்!
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. Réponses
    1. நகைச்சுவை நாவலர் என் எஸ் கே அவர்களது பதிவினை பாராட்டிய வலைச்சித்தர் அவர்களுக்கு குழலின்னிசையின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நல்ல காமெடி கலந்தப் பதிவு

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தினம் ஒரு சட்ட விளக்கம் தந்தருளும் நண்பரே!
      வருக!
      தங்களது இனிய பின்னூட்டக் கருத்துக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. பன்முக கலைஞர் என் எஸ் கே பற்றிய பதிவு அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுரைக்கு பணிவான வணக்கமும் நன்றியும் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. என் எஸ் கே அவர்களின் நினைவினைப் போற்றும் அற்புதமான பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. கலைவாணரை பற்றி இதைவிட வெகுசிறப்பானதொரு பதிவினை தாங்கள் முன்பொரு முறை பதிவாக வெளியிட்டு இருப்பதை நானும் ரசித்திருக்கிறேன் கரந்தையாரே!
      வருகை தந்து சிறப்பு பின்னூட்டம் தந்தமைக்கு இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. அன்புள்ள அய்யா,

    கலைவாணர் என்.எஸ்.கே, அவர்களின் நினைவு நாளில் இன்று பல தகவல்கள் அவரைப் பற்றி தந்ததற்கு நன்றி.

    த.ம. 6

    RépondreSupprimer
    Réponses
    1. கலைவாணர் அவர்களது நினைவு நாளில் அவரைப் பற்றிய பதிவுக்கு முத்தான கருத்தினை வித்தாக தந்த தமிழ் பித்தர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. எனக்குப் பிடித்த நடிகர் கலைவாணர்!

    RépondreSupprimer
    Réponses
    1. புலவர் அய்யா அவர்களுக்கு பிடித்தவர் (நடிகர்)
      புரவலர் கலைவாணர் என்பதை நினைக்கையிலே
      மகிழ்வூற்று பொங்கி வழிகிறது. இனிய கருத்தைனை வடித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. இன்று கலைவாணரின் நினைவு நாள் நான் மறக்க முடியாத அறிந்த விடயமே தங்களிடம் இப்படி ஒரு பதிவை எதிர் பார்த்தேன்
    நாகர்கோவில் சுடலை முத்து ஐயா மவன் கிருஷ்ணரின் பதிவுக்கு வாழ்த்துகள் நண்பா..

    RépondreSupprimer
  17. கலைவாணரின் பதிவுக்கு வாழ்த்து சொல்ல வந்த நண்பா!
    இன்று உமக்கு மணநாள் வாழ்த்து சொல்ல முடியாத துரதிஷ்டமான நிலையை..... எண்ணி மனம் வருந்தி நின்றேன். இருப்பினும் வேதனைகளை சாதனைகளாக்கி சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  18. கலைவாணரின் நினைவுகள் அருமை சகோ.

    RépondreSupprimer
  19. வாருங்கள் சகோதரி!
    வருகைக்கும் கலைவாணர் பற்றிய சிறப்பு கருத்து பின்னூட்டத்திற்கும்
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  20. அருமையான நினைவு கூறல்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  21. பாராட்டுரைக்கு பணிவான வணக்கமும் நன்றியும் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer