lundi 3 août 2015

"உத்தம காரியம்" (குட்டி கதை)

"வீண் புரளி வீணே"






சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். “சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?”

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். “ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?”

அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது.
 “இல்லை….”

“நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?”

“அதில்லை…”

“இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?”

“இல்லை”

“இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?”

“அப்படிச் சொல்ல முடியாது…..”
அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

“ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை.

குறுகிய வாழ்க்கையில், தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே” என்று சாக்ரடீஸ் சொல்ல,  வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர்?  சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்?
கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா?  நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?

மற்றவர்கள் விஷயங்களையும்,  அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதிலை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.


சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

“நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?”

நாம் மனிதர்கள்.  நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?

இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால்?  பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள்.


சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக்குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.

பகிர்வு:
புதுவை வேலு

நன்றி: (todayindia).





20 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    இறுதியில்சொல்லிய கருத்துசிறப்பு.உத்தமமான காரியம் பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கவிஞரே!
      உத்தமான காரியம் உணர்ந்து வந்து, தேன் சிந்தும் கருத்தை தந்தமைக்கு நன்றி கவிஞரே! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தங்கள் பதிவில் கூறப்பட்டுள்ள அறிவுரையில் சிலவற்றை நான் கடைபிடித்து வருகிறேன். அநாவசியமான நிகழ்வுகள் இதனால் தவிர்க்கப்படுவதை நான் உணர்கிறேன். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் முனைவர் அய்யா!
      உணர்ந்த கருத்தை உளமாற தளம் வந்து தந்தமைக்கு உயர்ந்த உள்ளத்தை உன்னத தமிழ் சொல்லெடுத்து சொல்லுகிறேன். நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. சிறப்பான கருத்து நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கரந்தையாரே!
      தங்களது வருகையே போதும் குழலின்னிசையை குஷி படுத்த....
      தொடருங்கள் நண்பரே! நற்கருத்தை நாளும் தந்து!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. //“ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை.//
    அருமை அய்யா

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் தோழரே!
      தங்களது உள்ளத்தை கொள்ளைக் கொண்ட வரிகள்,
      உலகில் உள்ளவரையும் சென்று சேர்ந்தால், வதந்திகள் யாவும் வாயடைத்து போகும்!
      நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. தமிழ் மணம் வீசம் வாக்கு வளம் சேர்க்கும்!
      நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிறப்பான கருத்து.

    த.ம. 4

    RépondreSupprimer
    Réponses
    1. நன்னெறிமிக்க நண்பரே!
      நற்கருத்தினை தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. வணக்கம் வார்த்தைச் சித்தரே!
      அருமை பாராட்டிய அன்புள்ளத்திற்கு எனது நெஞ்சாரந்த நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்,
    பிறர் பற்றி கூறும் போது ஆர்வம் காட்டவில்லை என்றால் எல்லாம் சரியாக இருக்கும்,
    தங்கள் விளக்கம் அருமை,
    வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நாளும் நாடிவந்து நற்கருத்தை அளித்து செல்லும் சகோதரியே!
      ஒரு நாளும் நான் மறவேன், உமது ஊக்கத்தின் உந்து சக்தியை நான் ஏற்பேன்
      நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அருமையான கருத்து! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையென அருங்கருத்தை அளித்த நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு,
      கூப்பிய கரத்துடனே குழலின்னிசையின் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அருமையான விடயம் நண்பரே சொன்ன விதம் அழகு.

    RépondreSupprimer
  11. உத்தமான நண்பரே!
    உத்தமான காரியம் கண்டு,
    கருத்தினை மலர்ச்செண்டாக தந்தமைக்கு
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer